search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singaporean Theater"

    சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா படத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் இந்தியா முழுவதும் இன்று(வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று இரவு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் ஏராளமானோர் வந்து படம் பார்த்தார்கள். படம் பற்றிய விமர்சனங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டபடி இருந்தனர்.

    காலா படம் பற்றிய தகவல்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் டெரிண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் இருந்து காலா படம் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    படம் பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் ஓரமாக உட்கார்ந்து படத்தை பேஸ்புக்கில் அப்படியே நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார். 40 நிமிடங்கள் காலா படக்காட்சிகள் பேஸ்புக்கில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. இது திரை உலகினரையும், ரஜினி ரசிகர்களையும் அதிர்ச்சி ஆக்கியது.

    இது பற்றி சிங்கப்பூர் வினியோகஸ்தர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரவீன் என்பது தெரிய வந்தது. பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பி கைதானவர் பற்றிய தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 
    ×