search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SK12"

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசாகிய நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசானது. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

    பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் படத்திற்கு முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம். ஸ்டூடியோஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளையும் சீமராஜா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தகவல்படி, முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.



    முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்தார். #Seemaraja #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. படத்திற்கு இதுவரை ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களே வந்த வண்ணமாக உள்ளன. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத் தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

    பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான், பாலசுப்ரமணியம், விவேக் ஹர்ஷன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் டி.இமான் இசையில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒளிப்பதிவும் பிரம்மாண்டமாக உணர வைக்கிறது.

    படம் இன்று ரிலீசாகிய நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தார். படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசியதாவது, படம் முழுவதையும் ரசிகர்களுடம் இணைந்து பார்த்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வரலாறு அதாவது 14-ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட கதை ஒன்று உள்ளது. அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அனைவருக்கும் நன்றி. குடும்பத்துடன் பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சீமராஜா' படத்தின் விமர்சனம். #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha
    சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ஊரையே கட்டி ஆண்டு வந்த ராஜா குடும்பத்தினரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலங்களை தனது ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

    கடைசியில் ஒரு வீடு மற்றும் சில வயல்வெளிகள் மட்டுமே இவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இருப்பினும் அந்த ஊர் மக்கள் நெப்போலியனை பெரிய ராஜா என்றும், சிவகார்த்திகேயனை சின்ன ராஜா என்றும் அழைக்கின்றனர்.



    ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படும் மரியாதையையும் அளித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனும் ஒரு ராஜாவுக்கு உண்டான கெத்துடனும், மிடுக்குடனும் எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணம் செய்கிறார். ஒரு ராஜாவாக ஜாலியான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கணக்கு பிள்ளையாக சூரியும் எப்போதும் அவருடனேயே இருக்கிறார்.

    சிங்கப்பட்டி ஊருக்கும், பக்கத்து ஊரான புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. புளியம்பட்டியில் பெரிய பணக்காரர் லால். அவரது மனைவி சிம்ரன். என்னதான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், புளியம்பட்டி மக்களும் சிவகார்த்திகேயன் குடும்பத்தையே ராஜாவாக பார்க்கின்றனர். இதனால் கடுப்பாகும் லால் மற்றும் சிம்ரன், சிவகார்த்திகேயனை சரிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.



    இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சமந்தாவை பார்க்கும் சிவகார்த்திகேயன் அவர் மீது காதல் வயப்படுகிறார். தனது காதலை சமந்தாவிடம் சொல்ல பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். ஆனால் சமந்தா, சிவகார்த்திகேயனின் காதல் ஏற்பதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் சந்தை போடுவதில் இரு ஊருக்கு இடையேயான சண்டை முற்ற, பிரச்சனை தீரும் வரையில் யாரும் அங்கு சந்தை போடக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கவும், சமந்தாவின் சம்மதத்தை பெறவும் ராஜாவான சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் எதிலும் பெரியதாக சிரத்தை காட்டாத சிவகார்த்திகேயனுக்கு தனது மூதாதையரின் பெருமை என்னவென்பதும் தெரியாமலேயே இருக்கிறார்.



    கடைசியில் சின்ன ராஜா சிவகார்த்திகேயன் தனது பூர்வ பெருமையை தெரிந்து கொண்டாரா? சந்தை போடுதில் உள்ள பிரச்சனையை எப்படி தீர்த்தார்? சிவகார்த்திகேயனின் காதல் தூதை சமந்தா ஏற்றுக் கொண்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு ராஜாவாக சிவகார்த்திகேயன் தனக்கே உண்டான குறும்புத்தனத்துடன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணிப்பதும், கணக்குப்பிள்ளை சூரியை தன்னுடனேயே வைத்துக் கொள்வது, சமந்தாவுடன் காதல் என காமெடி, ஆக்‌ஷன், காதல், அதிரடி என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடனேயே பயணிக்கும் சூரிக்கும் படத்தில் பெரிய பங்கு இருக்கிறது. படம் முழுவதும் சிவகார்த்திகேயன் உடனேயே பயணிக்கிறார். எப்போதும் போல் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி, சண்டை எல்லாமே ரசிக்க வைக்கிறது. காதல் காட்சி, ரொமேன்ஸ் காட்சிகளில் கூட சூரி வரும் அளவுக்கு தனக்கு சமமான கதாபாத்திரத்தை சூரியுடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள். சூரி இனி சிக்ஸ்பேக் சூரி என்று அன்போடு அழைக்கப்படுவார். சிக்ஸ் பேக்குக்கான அவரது உழைப்பை பார்க்க முடிகிறது.



    உடற்கல்வி ஆசிரியராக சமந்தா படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்துமே ஹிட்டடித்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் சமந்தாவில் சிலம்பம் சுற்றுவது சிறப்பாக வந்துள்ளது. சிறப்பு தோற்றத்தில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் காட்சியும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்ரன், வில்லி கதாபாத்திரத்தில் வந்து மிரட்டுகிறார். சிவகார்த்திகேயனுக்கு, சிம்ரன் சவால் விடும் காட்சிகளில் அனல் பறக்கிறது. லால் வில்லனுக்குண்டான மிடுக்குடன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிம்ரன் - லால் கூட்டணி சிறப்பாக வந்துள்ளது. நெப்போலியன் தான் ராஜா எனபதையே மறந்து ஒரு சாதாரண மனிதராக, ராஜாவுக்குண்டான குணநலன்களுடன் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

    மற்றபடி மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்தீப் சுர்னேனி, ரகு என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.



    தனது முதல் இரண்டு படங்களையும் கிராமத்து சாயலில் எடுத்தது போல், இந்த படத்தையும் ராஜா கதையை மையப்படுத்தி கிராமத்து சாயலில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இவரது படங்களில் இருக்கும் காதல், காமெடி காட்சிகள் இதிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். வசனங்களும் படத்திற்கு பலம் தான். 

    இசையும் மற்றும் ஒளிப்பதி தான் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சீமராஜா' விருந்து. #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீமராஜா படத்தை இணையதள சேவை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 3,500 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன். இதை அனுமதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.



    இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனங்கள் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டம். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’. 

    சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், இசை - டி.இமான், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை - முத்துராஜ், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஆடை வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி, எகா லஹானி, நிர்வாக தயாரிப்பு - மாலா மன்யன், தயாரிப்பு - ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் - பொன்ராம்.

    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது,

    “ படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 



    காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் ” என்றார்.

    பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி - டி.இமான் - பாலசுப்ரமணியம் - விவேக் ஹர்ஷன் என அறுவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்ததாக கலை இயக்குநர் தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

    படம் பற்றி கலை இயக்குநர் முத்துராஜ் பேசும்போது,

    "சீமராஜா படத்தில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸ்-ஆப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி.இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.



    பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது" என்றார். #Seemaraja #Sivakarthikeyan

    ‘சீமராஜா’ படப்பிடிப்பு குறித்து பேசிய சமந்தா, சிவகார்த்திகேயன் - சூரியை வீட்ல எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ என்று நினைத்து சிரிப்பேன் என்று கூறினார். #Seemaraja #Samantha
    சமந்தா திருமணத்துக்கு பின்னும் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சீமராஜா, யு டர்ன் என்று 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

    சீமராஜா படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேரும் செட்ல எதையாவது சொல்லி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களை பார்க்கும்போது காமெடி சேனல்தான் ஞாபகத்துக்கு வரும். வீட்ல இவங்களை எப்படித்தான் வெச்சுக்கிட்டு இருக்காங்களோனு நினைச்சு சிரிப்பேன்.



    சிவகார்த்திகேயனோட ரியாலிட்டி ஷோக்களை நான் பார்த்தது கிடையாது. அந்த காமெடி நிகழ்ச்சிகள்ல எந்த வேலை பண்ணிக்கிட்டு இருப்பாரோ, அதே வேலையைத் தான் செட்டுல பார்த்துட்டு இருப்பார். அதாவது, சரமாரியா காமெடி சொல்லி சிரிக்க வைப்பார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” என்று கூறி உள்ளார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

    டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை என்றார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    “சீமராஜா படத்தின் டிரெய்லரில் கடைசி 3 காட்சிகளை பார்த்து சமூக வலைத்தளங்களில் சிலர் பாகுபலி மாதிரி இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அது எங்களுக்கும், எங்கள் உழைப்புக்கும் கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்டிரைக் வந்தது.



    அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 

    காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை பார்க்க:


    சீமராஜா டிரைலர் பார்க்க:

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக கரோக்கி பூத் என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் `கரோக்கி பூத்' என்ற விளம்பர யுத்தியை படக்குழு கையாள உள்ளது. திரை அரங்குகளில் அமைக்கபட்டுள்ள பிரத்யேக பூத்துகளில் `சீமராஜா' படத்தின் பாடல்கள், பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். 
    அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு டப்மாஷ் செய்யலாம். இது அவர்களது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி.இமானுடன் கலந்துரையாட வாய்ப்பு கிட்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

    கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #SeemaRajaKaraokeBooth

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் உள்ளிட்ட பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    டி.இமான் இசையில் படத்தில் இருந்து `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

    கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Seemaraja #Sivakarthikeyan

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Seemaraja
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடக்க மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறும்போது,

    " மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவது என முடிவு செய்தோம். இந்த படத்தின் மையக் கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, முடிவு செய்தோம். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் " இவ்வாறு கூறினார். `

    முன்னதாக படத்தில் இருந்து `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் வருகிற ஜூலை 25-ஆம் வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 

    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan

    ×