என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SK13"

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.லோக்கல்'.

    சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஹரிஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ஹப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் & ஆர்தர் ஏ.கிங், படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன், கலை - சுப்ரமணிய சுரேஷ், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், நீராஜா கோனா, பி.செல்வம், சிகை அலங்காரம் - வினோத் சுகுமாரன், பாடல்கள் - கே.ஆர்.தரண், மிர்ச்சி விஜய், ரோகேஷ், நடனம் - தினேஷ்குமார், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - எம்.ராஜேஷ்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்திலேயே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைத்து கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது. 

    இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மென்மேலும் உயர்த்துகிறது என்றார்.

    மிஸ்டர்.லோக்கல் டிரைலர்:

    மிஸ்டர்.லோக்கல் படம் வரும் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய எம்.ராஜேஷ் சிவகார்த்திகேயன் கேட்டதால் சில காட்சிகளை தவிர்த்ததாக கூறினார்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

    இதில் இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது,

    எனக்கு ரொம்ப எமோஷனலான படம் இது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர். முதல் முறையாக எனது குடும்பத்தில் வெளியே ஒரு நடிகரை வைத்து படம் பண்ணுகிறேன். இந்த படம் எனக்கு பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் இந்த படத்தை ஹிட்டாக்க பல்வேறு விதமாக யோசித்தேன்.



    அப்போது சிவா என்னிடம், இந்த படத்தில் டாஸ்மாக், குடிப்பது போன்ற காட்சி, பெண்களை திட்டுவது போன்ற பாடல்கள் இவையில்லாமல் ஒரு குடும்ப படமாக பண்ணலாம் என்றார். படம் ஆரம்பிக்கும் போது இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

    முதல்முறையாக சந்தானம் இல்லாமல் படம் பண்ணுகிறேன். இருப்பினும் இந்த படத்தில் நான்கு முன்னணி காமெடியன்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு சும்மா வந்து போகிற கதாபாத்திரம் இல்லை. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம், அதை சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்றார்.

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழகமெங்கும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைத்துள்ளார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பாக்ட்ரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில், மிஸ்டர்.லோக்கல் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக தியேட்டர் பிரச்சனையே காரணமாக கூறப்படுகிறது. #MrLocal #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென மிஸ்டர்.லோக்கல் மே 17 அன்று வெளியாகும் என்று இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

    இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்கிறபோது குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் வரை படத்தை ஓட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் காஞ்சனா 3 படம் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 450 திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட முடியாது.



    அதோடு ஏப்ரல் 26 அன்று மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற ஆங்கிலப் படமும் வெளியாக இருக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் அவை 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1100 திரையரங்குகள். இவற்றால் மிஸ்டர்.லோக்கல் படத்துக்கு முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தேதி மாற்றம்” என்று கூறுகின்றனர். #MrLocal #Sivakarthikeyan

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.


    இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் தனது காட்சியை முடித்துவிட்ட நயன்தாரா, படக்குழுவுக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது.



    கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.

    படத்திற்கு தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று இயக்குநர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    தொடக்கத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பையே வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும், பின்னர் ‘மிஸ்டர்.லோக்கல்’ தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 

    காமெடி என்டெர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்தி கேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan #MrLocal #Nayanthara'

    `வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார். #SK13 #Sivakarthikeyan #Nayanthara
    சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், துவங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று எஸ்.கே.13 படக்குழுவில் நயன்தாரா இணைந்திருக்கிறார். நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகிறது. `வேலைக்காரன்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara

    `சீமராஜா' படத்தை தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு இன்று வெளியிடுகிறது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #SK13 #Sivakarthikeyan #Nayanthara

    `சீமராஜா' படத்தை தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவரும் இணைந்துள்ளார். #SK13 #Sivakarthikeyan #Nayanthara
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷும் நடிக்கின்றனர். 

    இந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 13 படக்குழுவில் இணைந்ததில் மகிழ்ச்சி என்று ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ராதிகா, சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

    மேலும் யோகி பாபுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara

    சீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்தின், ஆர்.டி.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan #Nayanthara

    ×