search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Care Steps"

    • எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப்.
    • சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.

    உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி - வேக்சிங். இதை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வேக்சிங்கில் ஹாட் வேக்ஸ் மற்றும் கோல்டு வேக்ஸ் என இருவகைகள் உள்ளன.

    எக்ஸ்ஃபோலியேட்

    வேக்சிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப். வேக்சிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

    மாய்ஸ்ச்சரைஸர்

    நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், போன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புற சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

    மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்சிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

    ×