என் மலர்
நீங்கள் தேடியது "slipeed"
புதுச்சேரி:
புதுவை ஏம்பலம் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது ஒரே மகன் செல்வகுமார் (வயது28). ஒரே மகன் என்பதால் செல்வகுமாரை அவரது பெற்றோர் அதிகம் பாசம் வைத்து அவர் கேட்கும் போதெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்து வந்தனர்.
இதனால் செல்வகுமார் வேலைக்கு எதுவும் செல்லாமல் பெற்றோர் கொடுக்கும் பணத்தில் எப்போதும் மதுகுடித்து செலவழித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மதுகுடிக்க பெற்றோரிடம் பணம் வாங்கி சென்ற செல்வகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. வெகுநேரமாக செல்வகுமார் வீடு திரும்பாததால் உறவினர்கள் செல்வகுமாரை தேடி அங்குள்ள வண்ணான் ஏரி பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஏரிக்கரையில் காலி மதுபாட்டிலும் சேற்றில் சிக்கிய நிலையில் செல்வகுமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடிபோதையில் ஏரியில் இறங்கி கால் கழுவ சென்ற போது செல்வகுமார் தவறி விழுந்து சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்களம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.