search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமந்தா"

    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, தன்னுடைய மருமகள் சமந்தாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
    சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். 

    தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. 



    ‘மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி’ என்று நாகார்ஜுனா உற்சாகமாக கூறியிருக்கிறார். 
    சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்தில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த சண்டை சமரசமாக முடிந்திருக்கிறது.
    ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் சமந்தா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். கொரியன் படம் ஒன்றின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. நந்தினி ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். 

    சமீபத்தில் படமான சில காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், சமந்தா சமந்தப்பட்ட சில காட்சிகளை மீண்டும் எடுக்கும் படி கூறியதாகவும் இதனால் டைரக்டர் நந்தினிக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.



    இந்நிலையில். ‘பட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில் ரீஷூட் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்றார் நந்தினி.
    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள். 

    இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவ காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.



    தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடந்து வருகிறது. லைப் ஆப் ராம் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
    உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா என்று தன்னைப் பற்றி விமர்சித்த ரசிகர்களுக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்திருக்கிறார். #Samantha
    சமந்தா யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தெலுங்கு தேசம் வேட்பாளர் அனகானி சத்ய பிரசாத்துக்கு ஓட்டு போடும்படி பிரசாரம் செய்தார். சமூக வலைத்தளங்கள் மூலம், ‘சத்ய பிரசாத் நல்ல வேட்பாளர். அவரை எனக்கு நல்லா தெரியும். மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர். அவருக்கு வாக்களியுங்கள்’ என சமீபத்தில் வீடியோ வெளியிட்டார். 

    இதையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ‘உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா?’, ‘நடிகர், நடிகைகளுக்கு வேறு வேலையே இல்லையா’, ‘நீங்களுமா?’ என கமெண்ட்டுகள் குவிய, சமந்தா கொதித்துப்போனார். 



    இது பற்றி அவர் கூறும்போது, ‘சத்ய பிரசாத், எனது தோழர். டாக்டர் மஞ்சுளாவின் சகோதரர். நான் ஐதராபாத்துக்கு வந்தது முதல் அவர்களை தெரியும். நட்பு அடிப்படையில் கோரிக்கை வைத்தால் அரசியலில் குதித்துவிட்டேன் என அர்த்தமா?’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
    நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா, அவரது அன்பில் வித்தியாசம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Samantha #Majili
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    கணவன் - மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. இந்த படத்தில் ஜோடியாக நடித்தது ஏன் என்று சமந்தா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ’நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.



    ‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’.

    இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில் - சமந்தா - ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனம். #SuperDeluxe #SuperDeluxeReview
    பகத் பாசில் - சமந்தா இருவரும் கணவன் மனைவி. இருவரும் பெரிதாக புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒருநாள் இவர்களது வீட்டுக்கு வரும் சமந்தாவின் நண்பர் அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.

    மறுபக்கம் காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்க்க மீண்டும் சென்னை வருகிறார். விஜய் சேதுபதியை வரவேற்க அவர்களது மொத்த குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் திருநங்கையாக வந்து நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி.



    மற்றொரு புறத்தில் ரம்யா கிருஷ்ணன் - மிஷ்கின் தம்பதிக்கு ஒரு மகன். அவனுக்கு நான்கு நண்பர்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.

    இந்த மூன்று சம்பவங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், போலீஸ் அதிகாரியான பகவதி பெருமாளுடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.



    கடைசியில் பகத் பாசில் - சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்? இவை அனைத்தும் கலந்த நல்லது, கெட்டது தான் படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக, அவர்களது உணர்வையும், வலியையும் உணர வைக்கும்படி நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள், மகனிடம் காட்டும் பாசம், மனைவியின் வலியை புரிந்து கொள்வது என தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார்.



    சிறிய சிறிய இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் பகத் பாசில். சமந்தாவுக்கு சவாலான வேடம். அந்த வேடத்தை ஏற்றுக் நடித்தது சமந்தாவின் துணிச்சல். சிறப்பாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு அதிகமாக வசனங்கள் இல்லை என்றாலும் பார்வையாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். மிஷ்கின் கிறிஸ்தவ போதகராக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பகவதி பெருமாள் காமெடி கலந்த வில்லத்தனத்தில் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறார்.



    நண்பர்களாக வரும் 4 இளைஞர்களும் சேட்டை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனாக மாஸ்டர் அஸ்வந்த் விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பு. மிருணாலினி அழகு தேவதையாக வந்து செல்கிறார்.

    தியாகராஜன் குமாரராஜாவின் 8 வருடங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை என்று கூறும்படி, தனது ஸ்டைலில் அனைத்தும் கலந்த ஏ சான்றிதழ் படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாவிட்டாலும், இளைஞர்களை கவரக்கூடியதாய் இருக்கிறது. முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடனும், இரண்டாவது பாதி காமெடி கலந்த சஸ்பென்சுடனும் நகர்கிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். 



    படத்தில் கடவுள் பக்தி, கணவன் - மனைவி புரிதல், திருநங்கைகளின் குடும்பம், பாலியல் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை, சாதி, மதம் என பலவற்றை திரைக்கதையினூடே திணித்திருக்கிறார். நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை கொடுத்தால் மற்றொருவருக்கு தீமையை தான் கொடுக்கும். அதுவே நியதி என்பதை புரிய வைத்திருக்கிறார். அனைத்தும் சரியுமில்லை, அனைத்தும் தவறுமில்லை, சரியாய் இருப்பது தவறாய் மாறலாம், தவறாய் இருப்பது சரியாய் மாறலாம் என்பனவற்றை விளங்க வைத்திருக்கிறார்.

    யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகளை புதிய பரிணாமத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத். சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `சூப்பர் டீலக்ஸ்' சுறுசுறுப்பு. #SuperDeluxe #SuperDeluxeReview #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். #SuperDeluxe
    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



    படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha

    நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். #Nayanthara #RadhaRavi #Samantha
    நயன்தாரா குறித்து ராதாரவி தெரிவித்த கருத்துக்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    முன்னணி நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-



    ‘அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே... நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள் உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப் கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்’.

    இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் முன்னோட்டம். #SuperDeluxe #VijaySethupathi
    கினோ ஃபெஸ்ட் நிறுவனம் சார்பில் தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

    விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள், விஜய் ராம், நவீன் மற்றும் ஜெயந்த், மனுஷ்யபுத்திரன், அப்துல் ஜாபர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பி.எஸ்.வினோத், நிரவ் ஷா, இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - சத்தியராஜ் நடராஜன், கலை - விஜய் ஆதிநாதன், ஒலி வடிவமைப்பு - தபஸ் நாயக், ஆடை வடிவமைப்பு - எஸ்.டி.எழில்மதி, தயாரிப்பு மேற்பார்வை - அருண் அருணாச்சலம், சிறப்பு ஒலி வடிவமைப்பு - அருண் சீனு, நிர்வாக தயாரிப்பு - சத்தியராஜ் நடராஜன், சுவாதி ரகுராமன், எழுத்து - நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், மிஷ்கின், எழுத்து, இயக்கம், தயாரிப்பு - தியாகராஜன் குமாரராஜா.



    படம் பற்றி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.

    ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும் என்றார். 

    சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. #SuperDeluxe #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    சூப்பர் டீலக்ஸ் டிரைலர்:

    நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்த பதிலை பார்ப்போம்.... #Samantha #NagaChaitanya
    தமிழில் சமந்தா நடிப்பில் அடுத்து சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாக இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மிஷ்கின் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    பகத் பாசிலுக்கு மனைவியாக வேம்பு என்ற வேடத்தில் சமந்தா நடித்துள்ளார். அவர் வரும் முதல் காட்சியே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள். சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் தாயான பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். என் குழந்தை தான் என் உலகமாக இருக்கும். நான் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சனைகளை சந்தித்தேன். எனக்கு நடந்தது போன்று என் குழந்தைக்கும் நடக்க விடமாட்டேன்.

    அதனால் நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதை இப்போது சொல்ல முடியாது. இதற்கு மேல் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் நாகசைதன்யாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.’

    இவ்வாறு அவர் கூறினார். #Samantha #NagaChaitanya

    சமந்தாவின் செயல்களைக் கண்டு அவரது கணவர் நாக சைதன்யா கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Samantha #NagaChaitanya
    நட்சத்திர காதல் தம்பதிகள் சமந்தா, நாக சைதன்யா இருவரும் சந்தோ‌ஷமாக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். ஆனாலும் இருவருக்குள்ளும் ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர் சமந்தா. 

    நாக சைதன்யா அப்படி இல்லை. முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கிறார். சமந்தாவின் சமூக வலைதள ஆர்வத்தை கண்டு சில சமயம் நாகசைதன்யா கோபப்படுகிறாராம். 



    இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று நாக சைதன்யா கேட்கிறார். அதனால் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி அவரது முதல் காட்சிக்கு 80 டேக்குகள் வரை எடுத்ததாக விஜய் சேதுபதி கூறியதாக ரம்யா கிருஷ்ணன் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 29ந்தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் பற்றி ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியது இல்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. 

    முதலில் தியாகராஜன் குமாரராஜா என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார். அப்போது நான் மிகவும் கூலாக, ‘என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கண்டிப்பாக, முயற்சி செய்யலாம்...’ என்று கூறினார்.



    முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி புரிந்தது”. இவ்வாறு அவர் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadFaasil #RamyaKrishnan

    ×