என் மலர்
நீங்கள் தேடியது "slug 101907"
இதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யாதான். அப்போது முதல் 15 ஓவர் ‘பவர்பிளே’ என்று அழைக்கப்படும். இந்த 15 ஓவருக்கு இரண்டு வீரர்கள் மட்டுமே பவர்பிளே-யின் உள்வட்டத்திற்கு வெளியே நிற்க முடியும். இந்த ஓவர்களில் சனத் ஜெயசூர்யா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை முதல் 15 ஓவரிலேயே பெரும்பாலான போட்டிகளில் 100 ரன்னைத் தாண்டியது.
அதன்பிறகுதான் தொடக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்ஸ்மேன்களாக மாறினார்கள். பவர்பிளே என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது சனத் ஜெயசூர்யதான்.
49 வயதாகும் இவர் கனடாவில் நடந்த கார் விபத்தில் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. இது கிரிக்கெட் வீரர்களை கவலைக்குள்ளாக்கிறது.
பின்னர் இந்த செய்தி வதந்தி எனத் தெரியவந்தது. இந்நிலையில் அஸ்வின் இந்த வதந்தி செய்தி குறித்து மிகவும் கவலையடைந்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இந்த செய்தி உண்மையா? எனக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. ஆனால், ட்விட்டரில் இதுபோன்ற செய்தியை பார்க்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். பின்னர் அஸ்வினுக்கு ஒருவர் அது வதந்தி என பதில் அளித்துள்ளார்.
‘‘எனது உடல் ஆரோக்கியம் குறித்து சில வலைத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. கார் விபத்தில் நான் இறந்து விட்டதாக கூறப்படும் செய்தியை புறக்கணியுங்கள். நான் கனடாவுக்கு செல்லவில்லை. இலங்கையில்தான் இருக்கிறேன்’’ என்று ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
Is the news on Sanath Jayasuriya true?? I got a news update on what's app but see nothing here on Twitter!!
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 27, 2019
இந்த நிலையில் ஐதராபாத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2 முறை பந்தை வீச முயன்று வீசாமல் நிறுத்தினார். களத்தில் இருந்த விர்த்திமான் சகாவை அவர் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சித்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக அவரிடம் நடுவர் பேசினார். அஸ்வினை நடுவர் எச்சரித்தாரா? என்பது தெரியவில்லை. #MankadRunOut #IPL2019 #SRHvKXIP
வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

இந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் அதிகமான பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.
இந்திய ஒருநாள் போட்டி அணியில் அஸ்வின் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் அணியில் இடம் பெறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அஸ்வின் இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளர் ஆவார். அவர் மிகவும் உணர்ச்சி பூர்வமான பவுலர். கேப்டனாகவும் நிறைய ஆர்ப்பணிபுடன் செயலாற்றுகிறார். பஞ்சாப் அணியில் நான் 2 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். இந்த அணியில் விளையாடுவது எனக்கு மனநிறைவை தருகிறது. ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவது தான் எங்களது குறிக்கோள்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் கூறினார்.
லோகேஷ் ராகுல் இந்த ஐ.பி.எல். தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 520 ரன் குவித்து இந்த சீசனில் 2-வது இடத்தில் உள்ளார். கெய்ல் 448 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார். #ChrisGayle #ViratKohli #KLRahul

இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. கிரிக்கெட் விதிமுறையை வகுக்கும் எம்சிசி-யே இதுகுறித்து ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது அஸ்வின் பந்து வீச முயன்றபோது வார்னர் க்ரீஸை விட்டு சற்று வெளியே நகர முயன்றார்.
அதற்குள் அவருக்கு ஜோஸ் பட்லர் ‘மன்காட்’ ரன்அவுட் ஞாபகம் வந்தது. இதனால் வாரன்ர் க்ரீஸ்-க்குள் பேட்டை வைத்துக் கொண்டார். அஸ்வின் கையில் இருந்து பந்து சென்றபிறகே க்ரீஸில் இருந்து நகர்ந்து சென்றார்.
WATCH: No, Warner doesn't want to get 'Mankaded'
— IndianPremierLeague (@IPL) April 8, 2019
Full video 📹📹https://t.co/feeK6QM0Nt#KXIPvSRH
முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் 6 பந்தில் அஸ்வின் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அத்துடன் முதல் ஓவர் முடிந்திருக்க வேண்டும். அஸ்வினும் கவனிக்கவில்லை. நடுவரும் கவனிக்கவில்லை. அஸ்வின் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இதனால் அஸ்வின் 7-வது பந்தை வீசினார். இதில் டி காக் பவுண்டரி விளாசினார்.
2-வது ஓவர் தொடங்கியபோது வர்ணனையாளர்கள் தெரிவித்தபோதுதான் அஸ்வின் 7 பந்துகள் வீசியது தெரியவந்தது. கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக உள்வட்டத்திற்குள் நான்கு வீரர்களுக்குப் பதிலாக மூன்று வீரர்கள் இருந்ததால் ஷமி பந்தில் ரஸல் க்ளீன் போல்டானது மறுக்கப்பட்டது. அதன்பின் ரஸல் அதிரடியாக ரன் குவித்தது பஞ்சாப் அணிக்கு பெரிய பாதகமாக முடிந்தது என்பது வேதனையாக விஷயம்.
நிதிஷ் ராணா 34 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். அப்போது கொல்கத்தா 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. ராணா ஆட்டமிழந்ததும் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 17-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அபாயகரமான வகையில் சூப்பர் யார்க்கராக வீசினார். இதில் ரஸல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
இதனால் ஐந்து பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ரஸில் வெளியேற முயன்றார். அப்போது கொல்கத்தா வீரர்கள் 30 யார்டு வட்டம் என அழைக்கப்படும் உள்வட்டத்திற்குள் மூன்று வீரர்கள் மட்டுமே நின்றிருந்ததை கவனித்தனர். இதுகுறித்து நடுவரிடம் கூற, அவர் ‘நோ-பால்’ என அறிவித்தார். இதனால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பினார். உள்வட்டத்திற்குள் கட்டாயமாக நான்கு பீல்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பேர் மட்டுமே நின்றிருந்ததை அஸ்வின் கவனிக்கவில்லை.
அதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு துவம்சம் செய்தார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். ஷமியின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களுடன் 22 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து விட்டது.

அஸ்வின் தனது கேப்டன் பொறுப்பில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த சம்பவம் குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த சின்ன விஷயத்தில் உண்மையிலேயே கவனம் செலுத்தவில்லை. சின்ன விஷயம் டி20 கிரிக்கெட்டில் பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியில் இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நோ-பால் சம்பவத்திற்கான விமர்சனங்களை எனக்குள்ளதாக எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் பந்து வீச்சு எடுபடவில்லை. அவர் 4 ஓவர் வீசி 47 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட கைப்பற்ற வில்லை.
அஸ்வினின் இந்த மோசமான பந்து வீச்சை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய் துள்ளனர். ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்த விவகாரத்தில் ரசிகர்கள் அவரை கலாய்த்து உள்ளனர்.

அஸ்வினின் செயல் அநாகரீகமானது, கிரிக்கெட் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. விதிப் படிதான் நான் செயல் பட்டேன் என்று அவர் விளக் கம் அளித்து இருந்தார்.
இதன் எதிரொலியாகத் தான் அஸ்வினின் நேற்றைய போட்டியின் பந்து வீச்சை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார்.
பந்துவீசும் போது கிரீசை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி அவரை ‘ரன்அவுட்’ செய்தார்.
அஸ்வினின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தான் கிரிக்கெட் விதிகளின் படி தான் நடந்து கொண்டேன் என அஸ்வின் விளக்கம் அளித்தார். ஒன்று விதியை மாற்றுங்கள் அல்லது அதை சரி செய்யுங்கள் என்று அவர் காட்டமாக தெரிவித்தார்.
அஸ்வின் ‘மன்கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக வீரர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். வார்னே, வாகன், டீன் ஜோன்ஸ், பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கபில்தேவ், முரளி கார்த்திக் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ), நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது.
இந்த விஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய திறமைகளை தான் பந்துவீச்சாளர்கள் கையாள வேண்டும். அப்படி விளையாடினால் தான் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு முடிவு நன்றாக சென்றடையும் ஐ.சி.சி. விதிப்படி நடுவர் தீர்ப்பளித்து விட்டதால் பட்லர் சூழலை கருத்தில் கொண்டு சென்றுவிட்டார்.
அஸ்வின் விதிகளையும், விளையாட்டின் ஆரோக்கியத்தையும் கண்டிப்பாக புரிந்து கொண்டு இரு விஷயங்களையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். மைதானத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு வீரர் மற்றவரை கிரிக்கெட் திறமையை வைத்து ஏமாற்றலாம். ஆனால் தனது போலியான திறமைகளை வைத்து ஏமாற்றக்கூடாது. ஒரு பேட்ஸ்மேன் கிரீசை விட்டு விலகி முன்னேறி சென்றால் அதை ஜென்டில்மேன் போல சரியான வழியில் அணுக வேண்டும்.
போட்டி என்பது நல்லப்படியாக இருக்க வேண்டும். போட்டியில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #Ashwin #Buttler
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது,
தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 47 பந்தில் 79 ரன்னும், (8 பவுண்டரி, 4 சிக்சர்), சர்பிராஸ்கான் 29 பந்தில் 46 ரன்னும் 16 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், குல்கர்னி, கவுதம் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பட்லர் 43 பந்தில் 69 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 25 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர். சாம்குர்ரான், முஜீப்-உர்- ரகுமான், ராஜ்பூத் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
ஆட்டத்தின் 13-வது ஓவரில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் ‘ரன் அவுட்’ செய்த விதம் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வின் பந்து வீசும் போது பட்லர் கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அவரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்தார். ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே கிரீசை விட்டு வெளியே வந்தால் ‘ரன் அவுட்’ செய்யலாம் என்ற விதி இருக்கிறது.
3-வது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டு பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பட்லர், அஸ்வின் இடையே ஆடுகளத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அஸ்வினின் இந்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவர் செய்தது தவறு. கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.
கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு, இது மாதிரியான செயல் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்ல தல்ல என்று சமூக வலை தளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று வார்னர் சுமித் பந்தில் தில்லுமுல்லு செய்ததற்கும் அஸ்வின் செயலுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
பட்லர் ஆட்டம் இழந்த பிறகு ராஜஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நான் விதிகளிப்படியே பட்லரை அவுட் செய்தேன். அதில் தவறு எதுவும்மில்லை என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் அது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்பானது, பட்லரை திட்டமிட்டு இந்தமுறையில் அவுட் செய்யவிலலை.
நான் செய்த இந்த அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது போன்ற அவுட்கள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும்.
நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து கிரிக்கெட்டின் மதிப்பும், ஆரோக்கியமும் பாதிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. விதிப்படி விளையாடியது தவறு என்றால் விதியை மாற்ற வேண்டும் அல்லது அதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ahswin #Buttler
இதற்கிடையே 12-வது ஐபிஎல் சீசன் கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் மே 5-ந்தேதி வரை நடக்கிறது. ஏறக்குறைய மே மாதம் 15-ந்தேதி வரை ஐபிஎல் திருவிழா நடக்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஏராளமான இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்காக செல்ல வேண்டிய நிலை வரும். இதனால் வீரர்கள் எங்கிருந்தாலும் அங்கேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்தவரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எப்போதுமே வாக்களிப்பதை நமது ஜனநாயகத்தின் ஆதாரமாக நினைப்பவன். நாட்டின் உள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களித்து சரியான தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
ஐபில் தொடரில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும், எந்த இடத்தில் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
I would also like to request you @narendramodi sir to enable every cricketer playing in the IPL to be allowed to cast their votes from which ever place they find themselves at. 🙏
— Ashwin Ravichandran (@ashwinravi99) March 25, 2019
Always thought voting is the fulcrum of our democracy and I definitely would like to urge the entire country, each and everyone of you from every nook and corner of our country to vote and choose their rightful leader. https://t.co/GXmsKh2TTh
— Ashwin Ravichandran (@ashwinravi99) March 25, 2019
அதன்படி டி20 அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அஸ்வின் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடவில்லை. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே காலக்கட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்தனர். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருவரும இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காவிடிலும் உள்ளூர் தொடர்களில் அஸ்வின் விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் மோசமான வகையில் பந்து வீசுகிறேன் என்பதற்காக என்னை வெளியில் வைக்கவில்லை. தற்போதைய நாகரிக காலத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தேவை இருப்பதால் வெளியில் இருக்கிறேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘தற்போது வெளியில் இருப்பதை நான் விரும்பவில்லை. ஏனென்றால், நான் அந்த அளவிற்கு மோசமாக செயல்படவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் என்னுடைய பந்து வீச்சு மோசம் என்று சொல்ல இயலாது. தற்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது.
தற்போதைய நாகரிக கால கிரிக்கெட்டில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணிக்கு தேவைப்படுகிறார்கள். அதனால் நான் வெளியில் உட்கார்ந்து இருக்கிறேன். நான் விளையாடிய கடைசி ஒருநாள் போடடியில் கூட 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினேன்.
சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் கூட சிறப்பான வகையில் பந்து வீசினேன். நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வகை கிரிக்கெட்டுக்கான (டெஸ்ட்) ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளராக இருப்பதை விரும்பவில்லை. தற்போதைய கால கிரிக்கெட் சவால் ஆனது. என்னுடைய சிறந்த பந்து வீச்சை எந்த அளவிற்கு வெளிப்படுத்த முடியுமோ, அதைச் செய்வதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.