என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிர மாநிலம்"
மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலின்போது பாஜக தொண்டர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் மொகல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் மதீன் பட்டேல் (வயது 48). பாஜகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த இவரும், அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு அரசியல் கட்சியினருக்கும் இடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மதீன் பட்டேல் தரப்பினருக்கும், எதிர்தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, இரும்பு பைப் மற்றும் கம்புகளால் மதீன் பட்டேல் மற்றும் அவரது தரப்பினர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மதீன் பட்டேல், பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ஹிதாயத் பட்டேல் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மொகல்லா கிராமத்தில் பதற்றமான சூழல் உருவானது. போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.