search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரப்பிரதேசம்"

    ஆந்திரப்பிரதேசம் மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    அமராவதி:

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது.



    கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஆந்திர மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது.
    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்து பற்றி கேள்விப்பட்ட முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியானதை பற்றி அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    அமராவதி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மீட்புப்பணிகளின் போது அப்பகுதி மக்கள் திரண்டு உதவு செய்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்று திரும்பி வந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜக பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார். #ChandrababuNaidu #PMModi
    அமராவதி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 
    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள். 2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.



    இந்நிலையில், ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வருகிறார்.

    தனக்கு அளிக்கப்படும் உயர் பாதுகாப்பை பயன்படுத்தி, அவற்றை பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார். அதன்மூலம் இந்த தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். #ChandrababuNaidu #PMModi
    ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த 100 நாள் வேலை உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #LSpolls #Congress #RahulGandhi
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் 
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஒன்றும் செய்யவில்லை. தனது வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

    இங்குள்ள கட்சிகள் பிரதமர் மோடியிடம் சென்று வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என கேள்வி கேட்காதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அழித்து விட்டார்.

    நாங்கள் கொண்டு வந்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் வறுமையை ஒழிப்பதற்கான அமைதியான ஆயுதமாகும் என தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi
    ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதார் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். #PMModi #BPCL
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கடலோர முனையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குண்டூர் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதன்பின்னர், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:



    தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி திட்டத்தில் அமராவதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமராவ் வகுத்துத் தந்த பாதையில் இருந்து சந்திரபாபு நாயுடு முற்றிலும் விலகி விட்டார் என தெரிவித்துள்ளார். #PMModi #BPCL
    பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
    அமராவதி:

    ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 

    இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புயல் ஆபத்தைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 



    விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்நிலையில், பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். புயலால் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவில் செய்துதர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
    ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    ஐதராபாத்:

    வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இரு நாட்களில் அது வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது.

    அந்த புயல் சின்னத்துக்கு தாய்லாந்து நாடு தேர்வு செய்து வழங்கிய ‘‘பெய்ட்டி’’ எனும் பெயர் சூட்டப்பட்டது. அந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. அந்த புயல் சின்னம் கடந்த வார மத்தியில் புயலாக உருவெடுத்தது.

    அதன் நகர்வை கணித்த போது முதலில் அது சென்னை அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான அளவுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் திசை ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்காமல் போய் விட்டது.

    என்றாலும் பெய்ட்டி புயலின் கடும் சீற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேல் எழுந்து ஆர்ப்பரித்தன.

    இதனால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெய்ட்டி புயலின் நகர்வு மணிக்கு 11 கி.மீ வேகத்திலேயே இருந்ததால் கடல் கொந்தளிப்பு நீடித்தது. சில இடங்களில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில் நேற்று பெய்ட்டி புயல் தீவிரமான நிலையில் இருந்து அதிதீவிர புயலாக மாறியது. நேற்று காலை அந்த புயல் சென்னைக்கு கிழக்கு, தென், கிழக்கு திசையில் சுமார் 430 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

    நேற்று மாலை அது 380 கி.மீ. தொலைவுக்கு வந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யாமல் குளிர்ந்த காற்று மட்டும் மிக அதிகமாக வீசியது.

    இன்று அதிகாலை சென்னையை நோக்கிய திசையில் இருந்து பெய்ட்டி புயல் விலகிச் சென்றது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து வடக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 300 கி.மீட்டர் தொலைவில் பெய்ட்டி புயல் மையம் கொண்டிருந்தது. 8 மணிக்கு பிறகு பெய்ட்டி புயலில் வேகம் அதிகரித்தது.

    16 கி.மீ வேகத்தில் இருந்து 23 கி.மீ. வேகமாக புயலில் சீற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் அதிதீவிர நிலையில் ஆந்திரா கடலோரத்தை பெய்ட்டி புயல் நெருங்கியது. இதனால் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்தது.

    காலை 10 மணியளவில் பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இருந்தது. காக்கிநாடாவில் இருந்து சுமார் 193 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை நெருங்கும் போது புயல் சற்று வலு குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் பலத்த சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் இன்று மதியம் பெய்ட்டி புயல் பலத்த காற்றுடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்தது. பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இன்று வடக்கு ஆந்திரா, ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    புயல் ஆபத்தைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்கள், குடிநீரையும் அதிக அளவில் ஆந்திர மாநில அரசு கை இருப்பு வைத்துள்ளது.

    விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங் களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை விசாகப்பட்டினத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார். #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். #GSLVMark3D2 #ISRO #Sivan
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிபன் கூறுகையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



    இதுதொடர்பாக பிரதமர் மொடி டுவிட்டரில் கூறுகையில், ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இரட்டிப்பு வெற்றி என பதிவிட்டுள்ளார். 

    இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்ரும் வடகிழக்கு மாநிலங்களில் தகவல் தொடர்பு மேம்பட உதவும் என பதிவிட்டுள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan 
    ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

    இந்நிலையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியா தயாரித்துள்ள ஜிசாட் 29 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி எஸ் எல் வி மார்க் 3 டி 2 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 



    விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது.

    இஸ்ரோவின் திறமை வாய்ந்த பணியாளர்களால் இது சாத்தியமானது. இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட சேட்டிலைட் இதுவாகும்.

    இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருக்கும். வடகிழக்கு பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தவும் இது உதவும்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும். மேலும்,  வரும் 2020-ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan 
    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் செயற்கைக்கோளுடன் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. #GSLVMark3D2 #ISRO
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.


    ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது.

    கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #GSLVMark3D2 #ISRO 
    பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து வரும் சந்திரபாபு நாயுடு, வரும் 22ம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார். #ChandrababuNaidu #NonBJPParties
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.



    மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ், முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் நடத்தப்படும். இந்த கூட்டத்தில அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். #ChandrababuNaidu #NonBJPParties
    ×