search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்லா"

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் 21 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 61 பந்தில் 65 ரன்களும், டு பிளிசிஸ் 69 பந்தில் 88 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    வான் டெர் டஸ்சன் 40 ரன்களும், டுமினி 22 ரன்களும், பெலுக்வாயோ 25 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 26 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியும் எங்களால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க இயலும் என்பதை நிரூபித்துள்ளது.

    இதனையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டகாரர் குசல் பெரேரா 0 என்ற முறையிலும் அடுத்து வந்த திருமன்னே 10 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 37 ரன்களிலும் வெளியேறினார்கள். இந்நிலையில் குனரத்தினேவுடன் மேத்யுஸ்  ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இலங்கை அணி 170 ரன்கள் எடுத்திருந்த போது குனரத்தினே அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து களமிறங்கிய வீரரகள் வந்த வேகத்தில் திரும்பினர். மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனஜெய டி செல்வா 5, ஜீவன் மெண்டிஸ் 18, ஸ்ரீவர்த்தனா 5, வண்டார்சே 3, லக்மல் 1, என வெளியேற பேரேரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இலங்கை அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அண்ட்லி 4 விக்கெட்டுகளை அள்ளினார். லுங்கி 2 விக்கெட்டும் ரபாடா, தாஹிர், டவினி, டுமினி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    4-வது போட்டி வருகிற 13-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனிலும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் மார்கிராம், கடந்த நவம்பர் மாத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெறாமல் இருந்தார்.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேபி டுமினியும், மூத்த வீரருமான அம்லாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. குயின்டான் டி காக் (விக்கெட்), 4. ஜேபி டுமினி, 5. இம்ரான் தாஹிர், 6. மார்கிராம், 7. டேவிட் மில்லர், 8. லுங்கி நிகிடி, 9. அன்ரிச் நோர்ட்ஜி, 10. பெலுக்வாயோ, 11. பிரிட்டோரியஸ், 12. ரபாடா, 13. ஷமிசி, 14. டேல் ஸ்டெயின், 15. வான் டெர் டஸ்சன்.
    இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். அம்லாவிற்கு இடமில்லை. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் 2. டி காக் 3. ரீசா ஹென்ரிக்ஸ் 4. இம்ரான் தாஹிர் 5. டேவிட் மில்லர் 6. வியான் முல்டர் 7. லுங்கி நிகிடி 8. அன்ரிச் நோர்ட்ஜே 9. பெலுக்வாயோ 10. பிரிட்டோரியஸ் 11. ரபாடா 12. ஷம்சி 13. ஸ்டெயின் 14. வான் டெர் டஸ்சன்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ஹசிம் அம்லா (108), வான் டெர் டஸ்சன் (93), ஹென்ரிக்ஸ் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது.

    பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரரான பகர் சமான் 25 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 86 ரன்கள் குவித்தார். பாபர் ஆசம் 49 ரன்கள் அடித்தார்.


    இமாம்-உல்-ஹக்

    அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 63 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி டர்பனில் நாளைமறுதினம் (22-ந்தேதி நடக்கிறது.
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. டி காக் சதம் விளாசினார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது.

    77 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டீன் எல்கர் (5), மார்கிராம் (21) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அம்லா நிலைத்து நின்று விளையாட டி ப்ரூயின் 7 ரன்னிலும், ஹம்சா டக்அவுட்டிலும், பவுமா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 42 ரன்னுடனும், டி காக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அம்லா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். டி காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், தென்ஆப்பிரிக்கா அணி 302 ரன்னாக இருக்கும்போது 129 ரன்கள் விளாசி 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழந்ததும் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை விட 380 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால்  பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அம்லா, டீன் எல்கர் அரைசதத்தால் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.


    டீன் எல்கர்

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், மார்க்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரில் மார்க்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார்.



    8-வது ஓவரை ஹசன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் அம்லா கொடுத்த கேட்சை 3-வது ஸ்லிப்பில் நின்றிருந்த பகர் சமான் பிடிக்க தவறினார். இதனால் அம்லா 8 ரன்னில் அவுட்டாகுவதில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரின் 5-வது பந்தில் டீன் எல்கர் அடித்த பந்து முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த அசார் அலியின் கையில் தஞ்சமடைந்தது.

    ஆனால் பந்து தரையில் உரசியதுபோல் சந்தேகம் எழும்பியது. இதனால் மைதான நடுவர் அவுட் கொடுத்துவிட்டு 3-வது நடுவரின் உதவியை நாடினார். 3-வது நடுவர் காட்சியை பலமுறை ‘ரீபிளே’ செய்து பார்த்துவிட்டு, பந்து தரையில் பட்டதற்கு போதுமான அளவு சாட்சி உள்ளது என்று நடுவர் தீர்ப்பை திரும்பப்பெற்றார். இதனால் டீன் எல்கர் 3 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அம்லா, டீன் எல்கர் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் உத்வேகம் குறைந்தது. அம்லா, டீன் எல்கர் அரைசதம் அடித்ததோடு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். டீன் எல்கர் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ப்ரூயின் (10), டு பிளிசிஸ் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அம்லா 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுக்கள் சாய்த்த ஆலிவியர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது.
    ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டுமினிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. #AUSvSA
    தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 11-ந்தேதியும் நடக்கிறது. அதன்பிடி டி20 கிரிக்கெட் நவம்பர் 17-ந்தேதி நடக்கிறது.

    இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசிம் அம்லா ஏற்கனவே பங்கேற்கமாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது டுமினிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.
    ×