என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்"

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

     அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

     மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மூன்று விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ரன்கள் இருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.



    மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஷாசய் 49, ரக்மட் ஷா 32, சகிடி  74, சமுல்லா 22, ஆப்கான் 7, நபி  34, சாட்ரன் 1, ரன்கள் அடித்திருந்தனர். நைப் 2 மற்றும் ரஷித் கான் 5 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பாகிஸ்தான் தரப்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிம் 2 விக்கெட்டும் சடப் கான், முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×