என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 102950
நீங்கள் தேடியது "டுபிளிசிஸ்"
வேறு அணியில் இருந்து ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று 10 அணி கேப்டன்களும் பதில் அளித்துள்ளனர்.
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தத்தொடர் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
ரவுண்டு ராபின் முறையில் இத்தொடர் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்தப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் லண்டனில் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினார்கள். அப்போது ஒவ்வொரு அணி கேப்டன்களிடமும் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனக்கு பிடித்த வீரர் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளிசிஸ் என்று பதில் அளித்தார். இந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் தெரிவித்தார்.
தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூறும்போது, “பேட்டிங்கில் விராட் கோலியை பிடிக்கும். பந்து வீச்சில் பும்ரா, ரஷித்கான் ஆகியோரை பிடிக்கும் என்றார். மற்ற கேப்டன்களுக்கு விரும்பிய வீரர்கள் விவரம்:-
வில்லியம்சன் (நியூசிலாந்து)- ரஷித் கான்.
மோர்தசா (வங்காளதேசம்)- விராட் கோலி.
மோர்கன் (இங்கிலாந்து)- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களில் ஒருவராக தற்போது இருக்கிறார்).
சர்பராஸ் அகமது (பாகிஸ்தான்)- பட்லர்.
ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- ரபாடா.
கருணாரத்னே (இலங்கை)- பென் ஸ்டோக்ஸ்.
ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)- எனது அணியில் உள்ள வீரர்களுடன் மகிழ்ச்சி
குல்பாதின் நைப் (ஆப்கானிஸ்தான்)- யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆட்டத்தை பொறுத்து முடிவு.

×

X