என் மலர்
நீங்கள் தேடியது "சுல்தான்"
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு கசிந்துள்ளது.
கார்த்தி நடிப்பில் தற்போது ‘கைதி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நிக்கிலா விமல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது தவிர பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷிமிகா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘சுல்தான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.