search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103965"

    பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலியை மையமாக கொண்ட படம் என்பதால் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கின்றனர். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ’உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்புக்கு 50 ரூபாய் கொடுத்து வேடிக்கை பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் பாலைவனமாகத் தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு எனக்கு நிறைவேறியிருக்கிறது.



    இந்தப் புது பயணம் தொடரும். என் படத்துக்குக் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதைத் தவறவிட்டோமே என்று குற்ற உணர்வு வருகிறது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

    அஜித் விஜய் இருவரையும் இயக்கியுள்ளீர்கள் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி. இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது, ஆனால், அரசியலுக்கு வருவதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.
    இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். 

    இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஏதோ காரணத்தால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க பிரியா பவானி சங்கரிடம் இருந்து போன் வர சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிடுகிறார்.



    பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. தினமும் இந்த நிலையே தொடர அதனை கொல்ல விருப்பமில்லாமல், அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.

    இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.



    கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

    எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம். பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.



    ஒரு நாள் கூத்து படத்தில் யதார்த்தமான வாழ்க்கை முறையை படமாக்கிய நெல்சன் வெங்கடேசன், இந்த படத்தில் எலியால் ஏற்படும் தொல்லைகளை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது. பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.

    மொத்தத்தில் `மான்ஸ்டர்' சுவாரஸ்யம் குறைவு.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி. சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம் `மான்ஸ்டர்'.

    எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - கோகுல் பினோய், இசை - ஐஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்கம் - சிவ சங்கர், இணை எழுத்து - சங்கர் தாஸ், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - சந்தோஷ், பாடல்கள் - யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சங்கர் தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - டி.நிர்மல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - டி.பி.சசிகுமார், ஒலி வடிவமைப்பு - சின்க் சினிமாஸ், ஒலிக்கலவை - கண்ணன் கண்பத், ஆடை வடிவமைப்பு - பி.செல்வம், ஒப்பனை - ஏ.ஜி.மொய்தின், எழுத்து, இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,

    குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

    சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

    `மான்ஸ்டர்' வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    மான்ஸ்டர் டீசர்:

    உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கும் அமிதாப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறார். தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக சில வதந்திகள் பரவி வந்தது. 

    இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,


    அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். மான்ஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்.

    தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `மான்ஸ்டர்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பா.இரஞ்சித்துடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    `பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகி இருக்கும் `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார்.

    இந்த படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் சமூக கருத்துடன் குடும்ப படமாக உருவாக இருக்கிறது.



    எஸ்.ஜே.சூர்யா தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து `உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் `மான்ஸ்டர்' படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் நெல்சன் பேசும்போது, குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும்.

    நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். #Arya #STR
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள்.

    ஆனால் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்ட நிலையிலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பெண் தேடியும் செட்ஆகவில்லை.



    ஆனால் அதற்குள் அவர் தம்பி காதல் திருமணம் செய்துகொண்டார். அவரது நண்பர் விஷாலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிவிட்டு திருமணம் என்று கூறி வருகிறார். அஞ்சலியுடன் கிசுகிசுக்கள் வந்தாலும், ஜெய் திருமணம் பற்றி வாயே திறப்பதில்லை. இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இவர்களுக்கு எல்லாம் சீனியர். இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். 

    இவர்கள் தவிர சிம்பு, அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர். #Arya #STR
    ×