என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகிலேசு"
புதுடெல்லி:
சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முலாயம் சிங், அவரது மகன் அகிலேஷ் யாதவ். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகளான அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதுர்வேதி என்பவர் 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளனர்.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து விசாரிக்கும்படி 2007-ல் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் சிங் தரப்பில் 2012-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதற்கு முலாயம் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்கள் குடும்பத்தின் மீது வீண்பழி சுமத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது எந்தவித முதன்மையான ஆதாரமும் கிடைக்க வில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முலாயம் சிங், அகிலேஷ் யாதவிடம் 2013 ஆண்டுக்கு பிறகு எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
இவ்வாறு சி.பி.ஐ தான் தாக்கல் செய்த புதிய பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.