search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாசலப்பிரதேசம்"

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் என்பிபி கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    இடாநகர்:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ.

    இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    அருணாசலப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. எம்.எல்.ஏ மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

    அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் என குற்றம்சாட்டினார். #LSpolls2019 #PMModi
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களின்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில்,  அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் ஆலோ பகுதியில் பாஜகசார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க.வின் முயற்சியால் அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. முந்தைய அரசுகள் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்து வந்தன. ஆனால், நாங்கள் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணிக்கவில்லை. 
    நானும், மற்ற மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து இங்கு வந்து கொண்டிருப்பதால் டெல்லியுடன் வடகிழக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் எதிர்க்கட்சிகள். நம் நாடு சாதனை புரிந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே? ஆனால் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி கட்சிகள் இந்தியாவின் வளர்ச்சியையும், வெற்றியையும் பாராட்ட மனமில்லாதவர்களாக உள்ளனர்.

    குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊழலில் பசை போட்டு ஒட்டி அடித்தளம் அமைத்து உருவாக்கப்பட்டது தான் மெகா கூட்டணி. இந்தியாவின் சாதனைகளால் எஜமானர்கள் வருத்தம் அடைந்துள்ளதுடன், சந்தேகமும் கொண்டுள்ளனர்.

    பயங்கரவாதிகளை அவர்களது வீட்டிலேயே நுழைந்து இந்தியா தாக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை எப்படி இருந்தது என்பதை நீங்கள் கண்டீர்கள் தானே? எனவே வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த தண்டனையை நீங்கள் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #LSpolls2019 #PMModi
    சீனா அரசு உரிமை கோரும் அருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத, ஒருங்கிணைந்த பகுதி என இந்திய அரசு இன்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது. #ArunachalPradesh #MEAIndia
    புதுடெல்லி:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

    சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இன்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. சீனா அரசு உரிமை கோரும் பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் பிறபகுதிகளுக்கு செல்வதுபோல் எங்களது நாட்டின் தலைவர்கள் அடிக்கடி அருணாச்சலப்பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளார்கள். எங்களது இந்த உறுதியான நிலைப்பாட்டை பல வேளைகளில் சீன அரக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். #ArunachalPradesh #MEAIndia
    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Chinaopposes #ModiArunachalvisit
    பீஜிங்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒண்றான அருணாச்சலப்பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லையாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக பல ஆண்டுகளாக இந்தியா-சீனா உயர்மட்ட அதிகாரிகளிடையே 21 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையிலான 3488 எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இந்தியாவை சேர்ந்த தலைவர்கள் செல்லும் போதெல்லாம் சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

    சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது. இந்தியா-சீனாவின் எல்லைப்பகுதியில் எங்கள் நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இந்த இடத்துக்கு இந்திய தலைவர்கள் வரும்போதெல்லாம் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    இருநாடுகளுக்கு இடையிலான பொது விவகாரங்களை கருத்தில் கொண்டும் சீன அரசின் அக்கறைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எல்லைப்பகுதியில் பதற்றத்துக்குரிய சர்ச்சைகளை தவிர்க்கும் வகையிலும்  இதுபோன்ற செயல்களில் இருந்து இந்திய தலைவர்கள் விலகியிருக்க வேண்டும்’ என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார். #Chinaopposes #ModiArunachalvisit
    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான கெகாங் அபாங் நேற்று பாஜகவில் இருந்து திடீரென விலகினார். #ArunachalPradesh #BJP #GegongApang
    இடாநகர்:

    அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் கெகாங் அபாங். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான கெகாங் அபாங் நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு கெகாங் அபாங் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போதைய பா.ஜ.க.வின் நிலை கண்டு நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். வாஜ்பாய் அவர்களின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றுவதில்லை. ஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே அது குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார். #ArunachalPradesh #BJP #GegongApang
    உள்ளூர் போட்டியில் விளையாடிய மணிப்பூர் இளைஞர் ஒருவர் மூன்று ஹாட்ரிக்குடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட கூச்பெகர் டிராபியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

    இதில் முதலில் ஆடிய அருணாசல் முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்நிலையில், 16 ரன்கள் முன்னிலையுடன் அருணாசல் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மணிப்பூர் வீரர் இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18),  எதிரணியை துல்லியமாக பந்து வீசி திணறடித்தார்.



    இவர் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 3 முறை ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

    இதையடுத்து, அருணாசல் அணி 2வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் 7.5 ஓவரில் வெற்றிக்கு தேவையான 55 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    மோசமான வானிலையால் 16 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டது. #Arunachalpradesh #ArmyChopper
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் 16 பேர் பயணம் செய்தனர்.

    இன்று மதியம் டுடிங் விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டரில் தகவல் தொடர்பு துண்டானது. மேலும் அங்கு நிலவிய மோசமான வானிலையால் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டது. மதியம் அப்பகுதியில் நிலவிய மோசமான் வானிலையால் அந்த விமானம் டுடிங் விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 16 பேரும் நலமுடன் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். #Arunachalpradesh #ArmyChopper
    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 4 வீரர்கள் பலியாகினர். #ITBP
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள லிகாபாலி பகுதியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் சுமார் 20க்கு மேற்பட்டோர் இன்று சென்று கொண்டிருந்தனர். 

    அங்கிருந்த சாலை வளைவில் திரும்பும்போது, திடீரென பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, காயமடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். #ITBP
    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். #Arunachalpradesh #WallCollapse
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலம் பாபும்பரே மாவட்டத்தில் உள்ள டோனில் காலனி பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை அங்கு கட்டுமான வேலையில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Arunachalpradesh #WallCollapse
    ×