என் மலர்
நீங்கள் தேடியது "ராம் பிரகாஷ் ராயப்பா"
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
`தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 14-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
— Ramprakash Rayappa (@ramprakashdir) May 18, 2019
செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடித்திருக்கிறார்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu
இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தை அடுத்து மீண்டும் கதையின் நாயகனாக ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார். #Rajkiran
முதலில் கதாநாயகன், முக்கிய கதாபாத்திரம், குணச்சித்திர வேடம், வில்லன் என பல அவதாரங்கள் எடுத்த ராஜ் கிரண், தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார். தற்போது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்குகிறார்.

ராஜ்கிரணுடன் டி.வி. புகழ் ரக்ஷன் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, நவீன தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் படமாக உருவாகிறது. கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.