search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105468"

    குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழம் சேர்த்து குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - அரை லிட்டர்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    சர்க்கைர - 100 கிராம்
    பாதாம் - தேவையான அளவு
    முந்திரி - தேவையான அளவு
    மாம்பழம் - 1



    செய்முறை  :

    மாம்பழத்தை தோல் சீவி நீள நீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.

    முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.

    அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம்.

    சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.

    மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும்.

    பால் அரிசி மா கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும்.

    பின்னர் இதை குச்சி ஐஸ் அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குச்சி ஐஸ் அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.

    மாம்பழ குச்சி ஐஸ் உறைந்ததும் எடுத்து பரிமாறலாம்.

    இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஹெவி கிரீம் - 1 1/2 கப்
    பால் - 1/2 கப்
    கோகோ பவுடர் - 1/4 கப்
    இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
    சக்கரை - 1/2 கப்
    நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
    சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.



    செய்முறை :

    பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.

    அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.

    இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

    கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!

    குறிப்பு:

    1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
    2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
    3. அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×