என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவேதா தாமஸ்"

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
    • பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

    இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

    இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை தொடர்து அடுத்ததாக பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இப்படத்தில் தற்பொழுது கன்னட முன்னணி நடிகரான துனியா விஜய் மற்றும் நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    துனியா விஜய் கடந்த ஆண்டு பீமா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நிவேதா தாமஸ் நடிப்பில் அண்மையில் 35 சின்ன விஹயம் இல்ல படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.



    அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

    இதுவிர கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.


    இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கமாவது, ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தற்போது வரை நயன்தாரா மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். வதந்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Nayanthara

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் அவரது மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.



    ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

    இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #NivethaThomas

    ×