search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி.ஜனநாதன்"

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    `புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan

    ‘இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக ராஜ ராஜ சோழனின் வரலாற்றை படமாக உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RajaRajaCholan #SPJananathan
    தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இதற்கு முன்பாக ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

    தற்போது தனது அடுத்த படமாக தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரபல சோழ அரசனான, ராஜ ராஜ சோழன்  பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.



    இதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார். ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவாஜி கணேசன் நடிப்பில் ஏற்கனவே ராஜ ராஜ சோழன் பற்றிய படம் உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RajaRajaCholan #SPJananathan

    மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படம் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இருக்காது என்று படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் தெரிவித்திருக்கிறார். #VanjagarUlagam
    எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். 

    நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் வஞ்சகர் உலகம் குறித்து பேசும் போது,

    "செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில்  நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது தான் என் கதாபாத்திரம் என சொல்லும் அனிஷா, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.



    இந்திய பார்வையாளர்களுக்கு 'கேங்க்ஸ்டர்' கதைகளும் சலித்து போயிருக்கின்றனவா? என்று கேட்டதற்கு வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று".

    ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #VanjagarUlagam #AnishaAmbrose

    மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் `கண்ணனின் லீலை' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #VanjagarUlagam #Kannaninleelai
    எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். 

    நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் கதையாசிரியராக பணியாற்றி இருக்கிறார். 

    மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `கண்ணனின் லீலை' என்ற முதல் சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 



    படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 
     
    ஆண்டனியின் படத்தொகுப்பில், ஏ.ராஜேஷின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குநர் மஞ்சுளா பீதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VanjagarUlagam #Kannaninleelai

    கண்ணனின் லீலை பாடல்:

    திரைப்பட தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று விஜய் சேதுபதி 'உலகாயுதா' நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
    திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகாயுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.

    இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.



    அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



    பின்னர் பேசிய விஜய் சேதுபதி, "எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்" என்றார்.



    கடைசியில், "எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவருககும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி. 
    ×