search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107174"

    நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது பதவியில் இருக்கும் விஷால், நாசருக்கு எதிராக புதிய அணி களம் காண இருக்கிறது.
    நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.

    தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான தேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.



    தேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

    எதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 

    நடிகர் சிம்பு நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவரது தம்பி குறளரசன், சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். #STR #Kuralarasan
    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 26-ந் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

    குரளரசன் இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவர் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இதுகுறித்து குறளரசனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,



    ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, புன்முறுவலுடன் பதிலளித்த குறளரசன், எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது. என்றார்.

    குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Kuralarasan #TRajendar

    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இன்று பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu
    இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இளைய மகள் குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


    அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.



    குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu

    மன்மதன், வல்லவன் படத்தின் ரீமேக் உரிமை விவகாரம் குறித்து டி.ராஜேந்தர் நேற்று புகார் அளித்த நிலையில், சிம்பு ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தயாரிப்பாளர் தேனப்பன் புகார் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan
    நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘என் மகன் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய 2 படங்களின் டப்பிங், ரீமேக் உரிமையும் என்னிடம் உள்ளது.

    ஆனால் அதை விற்க தயாரிப்பாளர் பிஎல். தேனப்பன் முட்டுக்கட்டை போடுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்து தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்தின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை என் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.

    அந்த உரிமையை எஸ்.என் மீடியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டேன். இன்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த உரிமைகள் தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த உரிமையை வாங்கியவர்கள், விற்றவர்கள் மீது பழி சுமத்தும் விதமாக பேசியுள்ளார்.



    நான் வல்லவன் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவரது ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றும் மீள முடியாமல் தவித்து வருகிறேன். என்னை போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிப்பது திரையுகத்துக்கே தெரியும்.

    இந்நிலையில் என்னையும் எனது 35 ஆண்டுகால திரையுல அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan

    விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களை காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது என்று டி.ராஜேந்தர் கூறினார். #TRajendar #Vijayakanth
    நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசும்போது,

    சிம்பு வளர்ந்துவிட்டார், அவர் பாதை வேறு, என் பாதை வேறு. சிம்புவின் பலமே அவரது தன்னம்பிக்கை தான். போராட்ட குணம், எதையும் தாங்கக்கூடியவர், கடவுள் நம்பிக்கை கொண்டவர். சிவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார். வலியை மீறி தான் வாழ்க்கையில் வழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தேன். அதை பிடித்துக் கொண்டார். அன்பு செலுத்துவது தான் சிம்புவின் பலவீனம். சிம்பு பற்றி நிறைய சர்சைகள் வரலாம். சர்ச் இல்லாமல் கிறிஸ்டியானிட்டி வளராது, சர்ச்சை இல்லாமல் யாரும் வளர முடியாது.



    ஒரு நாயகனாக நாயகியை தொட்டதில்லை, இது என்னுடைய பாலிசி. அதைப்போலவே நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. யார் முதலமைச்சராக இருந்தாலும் முதுகெலும்புடன் எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான், இதுவரை எதிர்த்து வருகிறேன்.

    என் பையனுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்றால், இறைவனை தான் வேண்ட வேண்டும். என் பையன் பெண் பார்க்க சொல்கிறார். நான் எங்கே போய் பெண் பார்க்க முடியும். பார்க்கிறேன், ஆனால் இறைவனாக பார்த்து ஒரு பெண்ணை கொடுக்க வேண்டும். கடவுளை நம்புகிறேன்.

    விஜய், ரஜினிகாந்த்தை சில பத்திரிகைகளில் எவ்வளவு கேவலமாக விமர்சித்திருக்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு நடிகரும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார்கள். அதனால் விமர்சனத்தை தாங்க வேண்டும். என்னையே கரடி என்று கிண்டல் செய்தார்கள். இனி என்னை காயப்படுத்த என்ன இருக்கிறது.



    விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களை காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது. அவர் சொன்னாரா என்று தெரியவில்லை, அவர் கூறியதாக என் மனசை புண்படுத்திய கருத்து ஒன்றால், அவரை எதிர்த்து நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் நல்ல நண்பர்கள், அப்படி ஒரு நட்பை பார்க்க முடியாது. ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். #TRajendar #Vijayakanth

    டி.ராஜேந்தர் பேசிய வீடியோவை பார்க்க:

    பாலமுரளி பாலு இசையில், கபிலன் வைரமுத்து வரிகளில் கடந்த ஆண்டு சிம்பு ஒரு பாடலை பாடிய நிலையில், தற்போது டி.ராஜேந்தர் மது ஒழிப்பு பற்றி ஒரு பாடலை பாடியிருக்கிறார். #TRajender #KabilanVairamuthu
    தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகிறார்கள். 

    இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மதுவுக்கு எதிராக ஒரு தனிப்பாடலை உருவாக்கி இருக்கிறார். பாலமுரளி இசையில் இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். கடந்த வருடம் வெளியான `கவண்' திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து கூட்டணி இந்த தனிப்பாடலின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.



    மது கலாசாரத்துக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடி உள்ள தனிப்பாடலின் தலைப்பு மற்றும் பாடல் வெளியாகும் தேதி போன்ற விவரங்களை கபிலன் குழுவினர் விரைவில் காணொலியாக வெளியிடுகிறார்கள். இந்த பாடலை காட்சிப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    முன்னதாக கடந்த ஆண்டு பாலமுரளி பாலு இசையில், கபிலன் வைரமுத்து எழுதிய பண மதிப்பிழப்பு பாடலை நடிகர் சிம்பு பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TRajender #KabilanVairamuthu #BalamuraliBalu

    ×