search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெய்டன்"

    எம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
    எம்எஸ் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 சீசனில் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றால் நான்காவது முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறும்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ ஹெய்டன் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.



    டோனி குறித்து ஹெய்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல. கிரிக்கெட்டின் சகாப்தம் அவர். பல வகைகளில் Gully Cricket (தெரு கிரிக்கெட்) அணிகளின் தலைவர் போலவும், நம்மில் ஒருவராகவும் அவர் தெரிவார். எதையும் செய்ய தகுதியானவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    டிம் பெய்ன் - ரிஷப் பந்த் மூலம் பிரபலம் ஆன ‘பேபிசிட்டிங்’ தொடர்பு படுத்தி சேவாக் நடித்துள்ள விளம்பர படத்திற்கு மேத்யூ ஹெய்டன் பதிலடி கொடுத்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷ்ப் பந்த்-ஐ பார்த்து என் குழந்தைகளுக்கு ‘பேபிசிட்டர்’ஆக இருக்கிறாயா? என்று கேட்டார். ரிஷப் பந்தும் ஆஸ்திரேலிய பிரதமர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டபோது, டிம் பெய்னின் குழந்தையை எடுத்து கொஞ்சினார். டிம் பெய்ன் மனைவி. ரிஷப் பந்த் சிறந்த ‘பேபி சிட்டர்’ என்று டுவீட் செய்திருந்தார். இந்த சம்பவம் அந்தத் தொடர் முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

    ஆஸ்திரேலியா இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வருகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ‘பேபிசிட்டிங்’ விளம்பர படத்தில் நடித்தார். அதில் நடித்த சேவாக் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவர்கள் எங்களிடம் பேபிசிட்டராக இருக்க முடியுமா?’’ என்று கேட்டார்கள். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாங்க.. நீங்கள் சொல்வதை செய்கிறோம்’’ என்று உறுதியளிப்பதுபோல் கூறுகிறார்.

    இந்த விளம்பரத்தை குறிப்பிட்டு மேத்யூ ஹெய்டன் பதிவிட்டுள்ள டுவிட்டரில் ‘‘எச்சரிக்கிறேன்... ஆஸ்திரேலியா அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சேவாக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா. உலகக்கோப்பை போட்டியின்போது யார் பேபி சிட்டர்-ஆக இருந்தார்கள் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்’’ என்று பதில் கொடுத்துள்ளார்.


    ×