என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 107414
நீங்கள் தேடியது "ஆரவ்"
சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஆதிக்கம் செலுத்தும் வேடத்தில் நிகிஷா படேல் நடித்துள்ளார்.
ஆரவ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். சரண் இயக்கி வரும் இப்படத்தில் தற்போது நிகிஷா படேல் இணைந்து நடித்து வருகிறார்.
இதுகுறித்து நிகிஷா படேல் கூறும்போது, ‘நான் இந்த படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் பேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார்’ என்றார்.
மேலும், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திலும் நிகிஷா படேல் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை ஓவியா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், இந்த விழாவில் நடிகர் ஆரவ்வும் பங்கேற்று ஓவியாவை வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav
கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் ரசிகர்கள் ஆதரவால் ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அடுத்து காஞ்சனா 3 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக கூறினார் ஓவியா. பின்னர் நண்பர் என்றார். இந்நிலையில் ஆரவ்வுடன் தனது 28-வது பிறந்தநாளை நேற்று ஓவியா கொண்டாடி இருக்கிறார்.
நள்ளிரவில் ஆரவ், காயத்ரி உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடும் படங்கள் வைரலாகி வருகின்றன. ஆரவ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாடி இருக்கிறார். #Oviyaa #Arav
சரண் இயக்கத்தில் ஆரவ் - காவ்யா தபூர் நடிப்பில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். #MarketRajaMBBS #Arav #RadikaaSarathkumar
`ராஜ பீமா' படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ராதிகா ஆரவ்வுடன் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
On sets of Dir.Charan’s movie “Market Raj’s MBBS” with Aarav and good friend Bette pic.twitter.com/JmHDRB6VZz
— Radikaa Sarathkumar (@realradikaa) March 20, 2019
சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. #Arav #MarketRajaMBBS #RadikaaSarathkumar
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நாயகனாக நடிக்கும் `ராஜ பீமா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுவமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #RajaBheema #Arav
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரவ் நாயகனாக நடிக்கும் நடிக்கும் படம் `ராஜ பீமா'. நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித, விலங்கு முரணை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.
படம் குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் பேசும் போது,
" பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருக்கிறோம் " என்றார்.
Happy to announce that we have bagged the TN theatrical rights for #RajaBheema after blockbuster #Viswasam..
— Sathya Jyothi Films (@SathyaJyothii) March 9, 2019
Shooting wrapped.. Releasing soon this summer🙂 pic.twitter.com/uxjgUD4EbG
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சத்யஜோதி பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. #RajaBheema #Arav #AshimaNarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் காதலித்து, பிறகு பிரிந்த நிலையில், ஆரவ்வோடு தான் புரிதலில் இருக்கிறேன் என்று ஓவியா கூறியுள்ளார். #Oviyaa #Arav
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பிசியான நடிகையாகி விட்டார். பிக்பாசில் அவர் காதலித்து பிரிந்த ஆரவ்வுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
ஆரவ் பற்றி கேட்டதற்கு ஒரு பேட்டியில் ‘அவரும் நானும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக இவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை’ என்று கூறி இருக்கிறார்.
ஓவியா நடிப்பில் அடுத்ததாக காஞ்சனா 3, 90 எம்.எல்., உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன. #Oviyaa #Arav
ராஜபீமா படத்தை தொடர்ந்து சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடிப்பதை ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார். #Arav #MarketRajaMBBS
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது `ராஜ பீமா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆரவ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம், சரண் இயக்க, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை நினைவுகூறும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Officially #MarketRajaMBBS directed by Saran Sir is my next one..we have commenced shooting..Blessed and humbled to be part of a Bigger project.Thanks Chennai Times. https://t.co/kobstJSA1H
— Arav (@Nafeez_Arav) January 4, 2019
இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Arav #MarketRajaMBBS
ஓவியா - ஆரவ் இருவரும் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் வசிப்பதாவும் தகவல் வெளியாகிய நிலையில், அதனை மறுத்துள்ள ஓவியா, தனக்கு கல்யாணத்திலும் நம்பிக்கை இல்லை என்று கூறினார். #Oviyaa #Arav
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா அந்த நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்து அந்த காதல் தோல்வியில் முடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றார். வெளியில் வந்த அவர் மீண்டும் ஆரவ்வுடன் நட்பாக சுற்றுவதால் இருவரும் திருமணம் செய்யப் போவதாக செய்தி பரவுகிறது.
இதுபற்றி ஓவியா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது:-
‘ராஜ பீமா’ படத்தில் நான் ஓவியாவாக தான் நடிக்கிறேன். அது ஒரு கவுரவ வேடம். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல் அது. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ இப்படிப் பல வார்த்தைகள் அதுல வரும். ‘பிக்பாஸ்’ சமயத்துல எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால, நிறைய சண்டைகள்.
இப்போ நாங்க சமாதானமாகி விட்டோம். நானும் ஆரவ்வும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் சுத்துது. எல்லாமே பொய்.
அப்படி ஒண்ணு இருந்தா, நாங்களே சொல்வோம். ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது.
நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. தன்னிச்சையா செயல்படுவேன். அதனால, கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல செட் ஆகும்னு தெரியலை. தவிர, எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல” இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். #Oviyaa #Arav #OviyaSingle
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் வலையில் சிக்கி பின்னர் சகஜமான ஓவியா, ஆரவ் இருவரும் மீண்டும் ஜோடியாக ஊர்சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav
தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.
பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் தற்போது ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. #Oviyaa #Arav
பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #Arav #Oviya
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது சர்ச்சையானது.
இதுபற்றி கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன்.
ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர்.
ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி வழங்கியுள்ளார்கள். #TMJA
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TMJA) தீபாவளி மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் புகழ் ஆரவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
செயற்குழு உறுப்பினர் முபாஷர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா பேசினார்.
சங்க செயலாளர் கோடங்கி வரவேற்று பேசினார்.
பின்னர் தீபாவளி சிறப்பு மலரை ஆரவ் வெளியிட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக் கொண்டார். அதன்பின், மிகவும் சிரமத்தில் இருக்கும் உயரம் குறைந்த நடிகர்களுக்கு சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. நிதியை பெற்றுக் கொண்ட அவர்கள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஆரவ் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டுள்ளார். #HBDAarav #Oviyaa #BiggbossTamil
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.
பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் ஆரவ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #HBDAarav #Oviyaa #BiggbossTamil
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ், நடித்து வரும் `ராஜ பீமா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாடல் அழகியான ஆஷிமா நர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். #RajaBheema #Arav #AshimaNarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் `ராஜ பீமா' படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். இந்த படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. யானையோடு ஆரவ் இருக்கும் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் வெளியான நிலையில் கதாநாயகி யார் என்பது உறுதியாகாமல் இருந்தது. தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகக் `கொலைகாரன்' படத்தில் நடித்துவரும் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்த ஆஷிமா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்திவருகிறார். ஆஷிமாவிடம் திரைக்கதையின் சுருக்கத்தையும் அவரது கதாபாத்திரத்தைப் பற்றியும் இயக்குநர் நரேஷ் சம்பத் விளக்கி உள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் ஆஷிமா உடனே நடிக்கச் சம்மதித்துள்ளார். #RajaBheema #Arav #AshimaNarwal
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X