என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107458"
தென் மாநிலங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளார்கள் என்று பெங்களுரு நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சுவாமி சுந்தரமூர்த்தி என்பவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும் 19 பயங்கரவாதிகள் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் ரெயில்களிலும், முக்கிய இடங்களிலும் குண்டு வைத்து தகர்க்க சதி செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஓசூரில் தான் லாரி ஓட்டியபோது இந்தியில் சிலர் பேசி கொண்டதை வைத்து இந்த தகவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இதை தொடர்ந்து கர்நாடக மாநில டி.ஜி.பி. நீல்மணிராஜூ, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, கோவா மற்றும் மாராட்டியம் ஆகிய மாநிலங்களில் டி.ஜி.பி.களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் பெங்களூரு புறநகர் பகுதியான ஆவலஹள்ளி என்ற இடத்தில் வைத்து சுவாமி சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். முன்னாள் ராணுவ வீரரான அவர் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைத்து இங்கேயும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று யூகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி இருந்தார். வதந்தி பரப்பிய அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மராட்டிய மாநிலம் லத்தூரில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டனர்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
காங்கிரசும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேச விரோத எண்ணங்கள் மற்றும் செயல்பாட்டுடன் இருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித் தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது.
தற்போது காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் குரலாக ஒலிக்கிறது. காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி வேண்டும் என்று பேசுகிறார்.
இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான தேசியவாத காங்கிரசின் நிலை என்ன? காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள மராட்டியத்தின் பலம் வாய்ந்த மனிதர் சரத்பவார் ஆதரிக்கிறாரா?
அதே நேரத்தில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் பா.ஜனதா உள்ளது. பயங்கரவாதிகளின் மறை விடங்களில் புகுந்து அவர்கள் மற்ற நாடுகளில் இருந்தால் கூட அழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்களின் வீரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காங்கிரசும், பாகிஸ்தானும் நமது வீரர்கள் பலத்துடன் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் பரவ வேண்டும் என விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் வீழ்த்திய பிறகே ஓய்வெடுப்பேன்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலனில் அக்கறையுடன் பா.ஜனதா தேர்தல் அறிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நான் உங்களது (மக்களது) நம்பிக்கையை பெற்று இருக்கிறேன். தேர்தல் அறிக்கையில் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை.
பாகிஸ்தான் மீது யார் விமான தாக்குதல் நடத்தினார்களோ அவர்களுக்கு முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் ஓட்டுகளை அர்ப்பணியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
வாஷிங்டன்:
அமெரிக்கா- இந்தியா பயங்கரவாத ஒழிப்பு குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடை பெற்றது.
அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்பு தூதரக ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ், இந்திய வெளியுறவு துறை அமைச்சக இணை செயலாளர் மகாவீர் சிங்வி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்துக்கு பிறகு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
சர்வதேச அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பண உதவி வழங்குவதை தடுத்தல், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடுத்தல், இண்டர்நெட் போன்ற ஊடகங்கள் பயன்படுத்துவதை தடுத்தல், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் நுழைவதை கட்டுப்படுத்துதல் போன்றவைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அதில், இந்தியாவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளின் மீது அர்த்தமுள்ள மிக கடுமையான நட வடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா என்றும் ஆதரவு அளிக்கும் என அதிகாரி நாதன் சேல்ஸ் தெரிவித்தார். #Militants
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter
லக்னோ:
உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ஷகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்குகளை கடைப்பிடித்தார்கள். இதனால்தான் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தது.
அவர்கள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவரான சாமிபிட்ராடோ இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக கூடுதல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் வெறுப்பாக பார்க்க கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இது போன்ற நபர்களால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்படுகிறது. பொறுப்பற்ற முறையில் அவருடைய நடவடிக்கை உள்ளது. அவர் பயங்கரவாதி மவுத் அசாரை பாகிஸ்தானில் வைத்து சந்தித்து உள்ளார். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நபராக சாம்பிட்ராடோ திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறினார். #LSPolls #YogiAdityanath
இஸ்லாமாபாத்:
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.
இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. முஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.
முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.
தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்