என் மலர்
நீங்கள் தேடியது "செம்பன் வினோத் ஜோஸ்"
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படம் பற்றி பரவி வந்த வதந்திக்கு பிரபல மலையாள நடிகர் செம்பன் விளக்கம் அளித்துள்ளார். #Darbar #Rajinikanth #Nayanthara
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மேலும் பாலிவுட் நடிகர்கள் பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல மலையாள வில்லன் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தர்பார் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து செம்பன் கூறுகையில், தர்பார் படத்தில் நான் நடிப்பதாக செய்திகள் பரவி வருவதை நானும் பார்த்தேன். ஆனால் தர்பார் படக்குழு என்னை தொடர்பு கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. எனினும் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ChembanVinodJose