என் மலர்
நீங்கள் தேடியது "பாராமன்ற தேர்தல்"
அரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஆணவத்தால் அழிந்தவன் துரியோதனன் என மோடிக்கு எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
சண்டிகர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் உள்ள பாஜகவினர் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லையென்றால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. சிறந்த இதிகாசமான மகாபாரதத்திலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கவுரவர்களின் அரசனான துரியோதனனிடம் ஆணவம் இருந்ததாலேயே அவர் அழிந்தார் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana