என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெற்றிவேல்"
சென்னை:
பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அனைத்து சமூகத்தினர் பொதுநல அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கொடுங்கையூர் குப்பைமேடு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் நவீன தொழில் நுட்பத்தில் குப்பை மேட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.
பல மைல் துரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் குப்பைமேடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேம்படுத்த அனைத்து முயற்சிகலும் மேற்கொள்ளப்படும் என்றார். வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டிய வெற்றிவேலுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019
சென்னை:
பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வியாசர்பாடி கக்கன்ஜி நகர் பகுதியில் வீதி வீதியாக வழியாக நடந்து சென்று பரிசு பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பெரம்பூர் தொகுதி மக்கள் பாதுகாப்பாக வசிக்க முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் இருந்து பாதுகாக்கவும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் மேரகாக்கள் பொருத்தப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், பாதுகாப்பான குடிநீர், சாலை வசதி அமைத்து தருவதோடு, கழிவு நீரில் இருந்து கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் உறுதியளித்தார்.
வேட்பாளருடன் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், மாரிமுத்து உள்ளிட்ட தொண்டர்கள், பெண்கள் அணிவகுத்து சென்றனர். #LokSabhaElections2019 #AMMK
9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-
1. பூவிருந்தவல்லி - ஏழுமலை
2. பெரம்பூர் - வெற்றிவேல்
3. திருப்போரூர் - கோதண்டபாணி போட்டி
4. குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்
5. ஆம்பூர் - பாலசுப்பிரமணி
6. அரூர் - முருகன்
7. மானாமதுரை - மாரியப்பன் கென்னடி,
8. சாத்தூர் - சுப்பிரமணியன்
9. பரமக்குடி - முத்தையா
ராயபுரம்:
தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அரசு தேர்தலை கண்டு பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை ‘ரெட்அலர்ட்’ காரணம் காட்டி சந்திக்காததை போல ‘கஜா’ புயலை காரணம் காட்டி இடைத்தேர்தல்களை இந்த அரசு சந்திக்காது.
இடைத்தேர்தலுக்கு கட்சி பொறுப்பாளர்களை நியமிப்பார்கள். பின்னர் அவர்களாகவே ரெட்அலர்ட்டும் போடுவார்கள். இந்த மாதிரி ஏமாற்றும் விஷயத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து கட்சி இறுதி முடிவு செய்யும். திருமாவளவன்-டி.டி.வி. தினகரன் சந்திப்பு சாதாரணமானது. எங்களது கட்சி முடிவு செய்தால் நான் மீண்டும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவேன்.
சிந்து பெண் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தான் விளக்கம் அளிக்க வேண்டும். என்னிடம் உள்ள ஆதாரங்களை ஏற்கனவே வெளியிட்டு விட்டேன்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு பார்த்து எந்த பயனும் இல்லை. மத்திய அரசுதான் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.
கஜா புயல் பாதிப்பில் மந்த நிலையில் நிவாரணப் பணி நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Vetrivel #Election
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடையாறில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் ஜெயக்குமார் விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு காணவே ஆடியோ வெளியானது. இதை நாங்கள் வெளியிடவில்லை. பிறந்த குழந்தையின் சான்றிதழை வைத்து முகவரியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு வந்த தகவலின் அடிப்படையின் நன்கு ஆராய்ந்த பிறகே ஆடியோ வெளியிடப்பட்டதாக அறிகிறேன். அமைச்சர் ஜெயக்குமார் தனது தவறுகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் போல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து புகாரை சந்திக்க வேண்டும். இதில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் சம்பந்தப்பட்டவர் விளக்கம் அளிப்பார். ஜெயக்குமார் போல் பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Vetrivel #Jayakumar
சென்னை:
சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக இருப்பவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அ.தி.மு.க. பிரமுகரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வான வெற்றிவேல் தகாதவார்த்தைகளால் பேசியுள்ளார்.
இருவரையும் ஒருமையில் மிகவும் தரக்குறைவாக பேசியது லட்சக்கணக்கான தொண்டர்களை வேதனை அடைய செய்துள்ளது. நானும் வேதனை அடைந்துள்ளேன். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். அவர்மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் வெற்றிவேல் அவதூறு கருத்துக்களை கூறியுள்ளார்.
எனவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெற்றிவேல் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #OPanneerselvam #Vetrivel
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-
டி.டி.வி.தினகரன் பற்றி தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவரான செல்வம், சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும், கழிப்பறை கட்டித் தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.
இதையடுத்து தர்ம ரக்ஷன சபா மாநில தலைவர் செல்வத்தை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்