search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராணாயாமம்"

    மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
    மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

    முதல் நிலை:

    இது சாதாரணப் பிராணாயாமம்.

    'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது.  (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)

    ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.

    நடு நிலை:

    இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம்.  உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.

    இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.

    உயர் நிலை:

    இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை  உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும்.  கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும்.  இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.  

    காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.  

    காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.

    பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.
    ஷித்தாலி பிராணாயாமம் நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    செய்முறை :

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.
    யோகிகளாலும், சித்தர்களாலும், ஞானிகளாலும் யோகம் மற்றும் வேதாந்தமான உபநிஷத்துக்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள ஒரு பயிற்சியாக ஸோஹம் தியானம் உள்ளது.

    ஒரு மனிதன் தனது சிறைவடிவான ஆன்மாவை அறிய ஸோஹம் தியானத்திற்கு ஒப்பான ஒரு உபாசனையோ, ஜபமோ இல்லை என்று தியான பிந்து உபநிஷத்து கூறுகிறது. முக்தி அடைய யோகிகளுக்கு ஸோஹம் தியானம் ஒரு பொக்கிஷம் போல் உள்ளது என்று ஹம்ஸோப நிஷத்து கூறுகிறது.

    சரபோக நூல்களான சிவ ஸ்வரோதயா மற்றும் ஞான சர நூலிலும் சரயோக சாற்கள் ஜீவன் முக்தி நிலையை அடைய ஸோஹம் தியானப் பயிற்சியை கூறி உள்ளது.

    பெயர் விளக்கம் :- மூச்சின் இயக்கத்தில் இயற்கையாகவே இருக்கும் ஹம்ஸோ என்ற சூட்சும நாதத்தை ஸோஹம் என்று மாற்றி ஜப தியானம் செய்வதால் ஸோவும் தியானம் என்று இப்பயிற்சி அழைக்கப்படுகிறது.

    செய்முறை-1 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் இரண்டு கை விரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் சாம்பவி (கண்களால் புருவ நடுவை பார்க்கவும்) அல்லது அகோசரி (கண்களால் மூக்கு நுனியை பார்க்கவும்) செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் மூச்சுக் காற்று உள்ளே செல்வதை அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    இப்போது மூச்சுக்காற்றோடு ஸோ என்ற நாதத்தை (ஓசையை) மனதால் ஜபித்துக் கொண்டு ஆக்ஞா சக்கரத்திலிருந்து மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது மூச்சுக் காற்றோடு ஹம் என்ற நாதத்தை ஜபித்துக் கொண்டு மூலாதாரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும்.

    ஒரு சங்கிலித் தொடர் போல், உள் மூச்சில் உடலின் முன் பக்கத்தில் புருவ நடுவில் உள்ள ஆக்ஞாவி லிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தி தொடர்ந்து வெளிமூச்சின் போது மூலாதாரத்திலிருந்து உடலின் பின் பக்கத்தில் முதுகின் வழியாக புருவ நடுவுக்கு நேராக உள்ள தலையின் பின் பகுதி வரை கவனம் செலுத்தவும்.

    இப்பயிற்சியின் போது பிராணாயாம பயிற்சி போல மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளுக்கு இழுக்கவோ வெளியே விடவோ கூடாது. மூச்சின் இயக்கம் இயற்கையாக இருக்க வேண்டும்.

    உங்கள் மூச்சுடன் உங்கள் உணர்வும் இணைந்து ஸோ-ஹம் என்ற நாதத்தை உண்டு பண்ண வேண்டும். அதே சமயம் சக்கரங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நினைக்க வேண்டும். வேகமில்லாமல் அமைதியாக எந்த அளவிற்கு மூச்சுடன் லோ-ஹம் என்ற ஆசையை முழு விழிப்புணர்வோடு உண்டு பண்ணுகிறீர்களோ, அந்த அளவிற்கு விரைவில் புலன் வழி செல்லும் புற உலக உணர்வு குறையும். நீண்ட நேரம் தியானம் செய்தாலும் சில நிமிடமே கழிந்தது போல இருக்கும்.

    செய்முறை-2 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் கைவிரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் அல்லது அகோசரி முத்திரை செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் முச்சுக்காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    இப்போது மூலாதார சக்கரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை உடலின் முன் பக்கதத்திலிருந்து கவனம் செலுத்திக் கொண்டு வந்து ஆக்ஞாவிலிருந்து தலையின் பின் பகுதி வழியாக முதுகெலும்பின் கீழ் உள்ள மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை கவனம் செலுத்தும் போது மூலா என்ற ஒன்று மேல் நோக்கி செல்வதாகவும், ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தும் போது ஹம் என்ற ஓசை கீழ் நேக்கி செல்வதாக மனதால் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது  மூலாதாரத்தில் இருந்து ஆக்ஞா, ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு சக்கரங்கள் உள்ள உடல் பகுதியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். சுவாச இயக்கத்தின் மீது கவனம் செலுத்தக் கூடாது.

    செய்முறை 1ல் மூச்சுக் காற்றோடு இலோ-ஹம் என்ற ஒலியை உண்டாக்கிச் செய்யும் லோவும் தியானமுறை கூறப்பட்டது. செய்முறை 2-ல் மூச்சுக் காற்றோடு இணைந்து லோ-ஹம் மந்திரத்தை தியானிக்காமல் சக்கரங்களை மட்டும் நினைத்து லோ-ஹம் தியானத்தை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

    பயிற்சி குறிப்பு : இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் செய்முறை பயிற்சி-1ஐ யோ அல்லது செய்முறை பயிற்சி 2ஐ யோ ஒரு நாளில் ஒருவேளை பயிற்சி செய்யலாம். இரண்டு தியான முறைகளையும் செய்ய முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு தியான முறையை கடைப்பிடிக்கலாம்.

    இந்த பயிற்சியை வெறும் வயிற்றோடு இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். உணவு உட்கொண்ட பிறகு 4 மணி நேரம் கழித்து இந்த தியான பயிற்சியை செய்யலாம். காலை சூரிய உதயத்திற்கு முன்பும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்த தியான பயிற்சியை செய்வது சிறந்தது.

    பலன்கள் : சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மன அழுத்தம் நீங்குவதற்காக செய்யும் பவன முக்தாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய முன்னேற்றம் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய முடியாதவர்கள் பிராணாயாமம் அல்லது தியான பயிற்சியை மட்டும் கூட செய்யலாம். பவன முக்தாசனம், பிராணாயாமம், லோ-ஹம் தியானம் ஆகிய மூன்றில் எதை பயிற்சி செய்தாலும் பயிற்சியின் முடிவில் சுவாசத்தில் ஓய்வாக 5 நிமிடம் இருக்க வேண்டும்.
    பஸ்த்ரிகா பிராணாயாமம் சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.
    பெயர் விளக்கம் : பஸ்த்ரிகா என்றால் துருத்தி என்று பொருள். இப்பிராணாயாமத்தில் துருத்தி போன்று வேகமாக தொடர்ந்து மூச்சை இழுத்து வெளிவிடுவதால் இப்பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : அனுகூலமான தியான, ஆசனத்தில் உட்காரவும். (குறிப்பாக பத்மாசனம் செய்வது சிறந்தது) இரு கைகளையும் நீட்டி, முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும். இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை வேகமாகவும், பலமாகவும் 10 முறை தொடர்ந்து உள்ளுக்கு இழுத்து வெளியே விடவும். மூச்சை இழுக்கும் போது வயிறு மேல் நோக்கியும், வெளியே விடும்போது கீழ் நோக்கியும் இறங்கட்டும்.

    10 முறை தொடர்ந்து மூச்சின் இயக்கத்தை வேகமாக நடத்திய பிறகு, ஒருமுறை மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 2 சுற்று பயிற்சி செய்து, பழகப் பழக சுற்றுகளை அதிகரித்து 5 சுற்று வரை செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : வயிற்று தசைகளின் அசைவின்மீதும், மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: ஆரம்பப் பயிற்சியில் மூச்சின் இயக்கம் மெதுவாகவும், சமமாகவும் இருக்கட்டும். பிறகு ஓரளவுக்கு வேகமாக மூச்சின் இயக்கத்தை நடத்தவும். நன்கு பழகிய பிறகு மிக வேகமாகவும், பலமாகவும் மூச்சின் இயக்கத்தை நடத்தப் பழகவும்.

    தடைக்குறிப்பு : உயர் ரத்த அழுத்தம், தலை சுற்றல், குடலிறக்கம், பக்கவாதம், நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி செய்வது நல்லது. பயிற்சியின்போது தலை சுற்றுவது போலானால் உடனே பயிற்சியை நிறுத்தி விடவும்.

    பயன்கள் :
    உடல், மன ஆரோக்கியத்திற்கும் மன ஒரு நிலைப்பாட்டிற்கும் சிறந்தது. சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. தொண்டைக் கம்மல், வீக்கம் நீங்கும். மூக்கில் சேர்ந்திருக்கும் சளியையும், நுரையீரலில் சேர்ந்திருக்கும் கோழையையும் விரைவில் அகற்றி விடும். இப்பயிற்சியினால் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அடிக்கடி குளிர்ச்சியினால் ஏற்படும் தும்மல் சளியை விரைவில் குணப்படுத்துகிறது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.
    சாம்பவி முத்திரை மன அழுத்தத்தையும், கோபத்தையும் நீக்கி மனதை அமைதிப்படுத்தும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : சம்பு என்றால் சிவம். சாம்பவி என்றால் சிவபெருமானின் மனைவி பார்வதியாகும். சாம்பவி என்பதில் சிவம் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் குறிக்கும் பொருள் உள்ளது. இம்முத்திரையினால் சிவஸ்தானமான புருவ நடுவில் சக்தியின் வடிவான மனம் லபம் அடைவதால் சாம்பவி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து புருவ நடுவை நோக்கி உயர்த்தி, கருவிழிகள் இரண்டையும் ஒன்றாக இமைத்து புருவ நடுவை பார்க்கவும்.

    கண்களின் தசைகளை அழுத்தாமல் ஓய்வாக வைத்துக் கொள்ளவும். கருவிழிகளை இணைக்கும் போது தலை இடது அல்லது வலது பக்கம் திரும்பாதபடியும் தலை, முகம் மற்றும் கழுத்து பகுதி இறுக்கம் அடையாதபடியும் பார்த்துக் கொள்ளவும். கண்களை உயர்த்தும் போது மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். இம்முத்திரையில் மூச்சை சில விநாடிகள் நிறுத்தலாம். அல்லது நிதானமாகவும் ஆழமாகவும் இருக்கட்டும். பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடிகள் என 5 சுற்றுவரை பயிற்சி செய்யலாம். தொடர்ந்த பயிற்சியில் 10 சுற்று வரையில் அதிகரித்து 10 நிமிடம் வரை செய்யலாம்.

    மேற்கண்ட முறைப்படி இந்த முத்திரையை நன்கு பழகிய பிறகு பிராணாயாமம் மற்றும் தியானத்தின் போது, இந்த முத்திரையில் இமைகளை முடிய நிலையில் வைத்துக் கொண்டும் பருவ நடுவை கண்களால் பார்க்கும்படியும் செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டையும் இணைத்து வைத்திருப்பதின் மீதும், ஆக்ஞாசக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்:
    சக்தி, சிவ வடிவான இடா நாடியும், பிங்களா நாடியும் புருவ நடுவில் சுஷிம்னா நாடியுடன் இணைகிறது. இம்முத்திரையினால் இரு நாடிகளும் சமமாக தூண்டப்பட்டு இரண்டு நாசிகளின் வழியாக மூச்சு சமமாக இயங்கும். இதனால் சுஷிம்னா நாடியில் பிராண சஞ்சாரம் அதிகரிக்கும். குண்டலினி சக்தி விழிப்படையும். ஆக்ஞா சக்கரம் நன்கு செயல்படும். மன அழுத்தத்தையும், கோபத்தையும் நீக்கி மனதை அமைதிப்படுத்தும். பீனியல் சுரப்பு நன்கு செயல்பட தூண்டும். உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். புலனடக்கம் வாய்க்கும்.
    இந்த பிராணாயாமம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.
    பெயர் விளக்கம்:  உஜ் என்றால் உத்தமமான, மேலான என்றும் ஜய என்றால் வெற்றி என்றும் பொருள்படுகிறது. மனதை அமைதிப்படுத்துவதற்கு, உத்தமமான வெற்றியை இப்பிராணாயாமம் அளிப்பதால் இப்பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை: அனுகூலமான ஏதாவது ஒரு தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். நிதானமாகவும், ஆழமாகவும், மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது தொண்டை பாகத்தில் க்ளாட்டிஸ் என்ற பகுதியில் லேசான அழுத்தம் கொடுத்து சிறிதளவு அடைத்து தொண்டையிலிருந்து ஸ்.....ஸ் என்ற ஒலியை உண்டு பண்ணவும்.

    பிறகு மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் தொடர்ந்து வெளியே விடவும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது தொண்டையிலிருந்து உஷ்....உஷ்... என்ற ஒலியை உண்டு பண்ணவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 10 முதல் 15 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்து பயிற்சியில் 20 முதல் 40 சுற்று வரை பயிற்சி செய்யலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும், அடிவயிறை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: உள்மூச்சின் போதும், வெளிமூச்சின் போதும் உண்டு பண்ணப்படும் ஒலியின்மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: இந்த பிராணாயாமத்தை முதுகை நேராக வைத்துக் கொண்டு நின்ற, உட்கார்ந்த, படுத்த, நடக்கும் நிலையிலும் பயிற்சி செய்யலாம்.

    பயன்கள்: மனம் அமைதி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுபெறும். உறக்கமின்மை நீங்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.

    கபாலபதி பிராணாயாமம் செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
    முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும்.

    இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    மூச்சை இழுத்து விடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இரத்தத்துக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைப்பதால் ரத்தம் சுத்தமாகிறது. செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

    கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும். மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.
    நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மேலும் இரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
    நாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும். முதலில், விரிப்பில் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாதாரணமாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் வலதுபக்க மூக்கை வலக்கையின் பெருவிரலால் அழுத்திக் கொள்ளவும்.

    இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது இடது மூக்கை மோதிரவிரல், சுண்டுவிரல் இரண்டாலும் அழுத்திக் கொள்ளவும். வலது மூக்கை திறந்து, இழுத்த மூச்சை வலது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும்.

    அடுத்து வலது மூக்கை திறந்து, இடது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இப்போது வலது மூக்கால் மூச்சை இழுத்து இடது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும். இப்போதுதான் ஒரு சுற்று முழுமை அடைகிறது. இதுபோல் 5 முறை முழுமையாகச் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    இந்த நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மனப்பதற்றத்தைக் குறைக்கிறது. மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒத்திசைவாக செயல்பட வைக்கிறது. இதனால் மூளை அமைதியடைகிறது.

    இரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. ஆழ்ந்து மூச்சுவிடுவதால் ரத்தத்துக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. கவனச்சிதறல்கள் விலகி மூளை ஆற்றல் பெறுகிறது.

    இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம். இந்த ஆசனம் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
    ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிலவகை மூச்சுப்பயிற்சிகளையும், யோகாசனங்களையும் தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

    உஜ்ஜயி பிராணாயாமம்

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    இப்பிராணாயாமம் சுவாச காற்றை ஆழமாக இழுத்து வெளியிட உதவுவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    பெயர் விளக்கம் : இப்பிராணாயாமம் சுவாச காற்றை ஆழமாக இழுத்து வெளியிட உதவுவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    செய்முறை : அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். (குறிப்பாக வஜ்ராசனத்தில் செய்வது நல்லது) கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.

    இப்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள தீர்க்க ஸ்வாச முத்திரை செய்து மார்புக்கு முன்பாக மார்போடு ஒட்டியபடி கை கட்டை விரல்களை வைக்கவும். இரு நாசிகளின் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும். பிறகு நிதானமாக இரு நாசிகளின் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விடவும். இது ஒரு சுற்றுப் பயிற்சியாகும்.

    மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பை விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பு சம நிலைக்கும், அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும். மூச்சுக் காற்றை உள்ளுக்கு இழுக்கும்போது காற்றை உள்ளுக்கு இழுப்பதற்கு ஏற்ப நிதானமாக, தானாகவே மார்பு விரிய வேண்டுமே தவிர நாமாகவே மார்பை உயர்த்தக் கூடாது.

    ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்த பயிற்சியினால் சுற்றுகளை அதிகப்படுத்திக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : சுவாச இயக்கத்தின் மீதும், அனாஹத சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள் : சுவாச உறுப்புகள் மற்றும் இருதயம் சம்பந்தமாக பல நோய்களுக்கு நன்மை அளிக்கிறது. நுரையீரலும் இருதயமும் நன்கு வலுப்பெறும். தாறுமாறான சுவாச இயக்கம் மற்றும் இருதயத் துடிப்பு சம நிலைக்கு வரும். ரத்தத்திலுள்ள கழிவுகள் நீங்கும். ரத்தம் தூய்மை அடையும். சருமம் பொலிவு பெறும். முக அழகு அதிகரிக்கும்.
    மஹத்யோக பிராணாயாம பயிற்சியினால் நுரையீரலின் அனைத்து பாகத்திற்கும் காற்று நன்கு பரவுகிறது. அசுத்த காற்று அதிகளவு வெளியேற்றப்படுகிறது.
    நுரையீரலின் முழுமையான சுவாசமுறை:

    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அதம, மத்யம, ஆத்ய பிராணாயா மத்தில் செய்த மூன்று விதமான உடலியக் கத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இந்த பிராணாயாமத்தில் செய்ய வேண்டும். வலது உள்ளங்கையை மார்பின் மேலும், இடது உள்ளங்கையை வயிற்றுப் பகுதியிலும் வைக்கவும்.

    மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்தபடி முதலில் வயிற்றுப் பகுதியில் காற்றை நிரப்பி, அதைத் தொடர்ந்து மார்புப் பகுதியிலும், அடுத்து மார்பின் மேல் பகுதியிலும் காற்றை நிரப்பவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும். பிறகு மூச்சுக்காற்றை நிதானமாக வெளியே விட்டபடி முதலில் வயிற்றுத் தசைகள், அடுத்து மார்பு, அதையடுத்து மார்பின் மேல்பகுதி என ஒன்றன்பின் ஒன்றாக சுருக்கவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இரு ஒரு சுற்று பயிற்சியாகும்.

    இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யவும். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: அத்ம சுவாசத்தில் வயிறு மற்றும் மணிபூர சக்கரத்தின் மீதும், மத்யம சுவாசத்தில் மார்பு மற்றும் அனாஹத சக்கரத்தின் மீதும், ஆத்ய சுவாசத்தில் மார்பின் மேல் பகுதி மற்றும் விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    ஆரம்பப் பயிற்சியில் தொடர்ந்து நான்கு வகை பிராணாயாமத்தையும் வஜ்ராசனத்தில் செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு பிராணாயாமத்திற்குப் பிகும் சுகாசனத்தில் சில வினாடிகள் ஓய்வு பெற்று, பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

    வஜ்ராசனத்தில் சில வினாடிகள் கூட அமர்ந்து பயிற்சி முடியாதவர்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து பயிற்சி செய்யலாம். அப்படி நாற்காலியின் மீது அமர்ந்து பயிற்சி செய்யும் போது முதுகு, கழுத்து, தலை நேராக இருக்கட்டும். முழங்கால்களுக்கு நேராக  தரைவிரிப்பின் மேல் குதிகால்கள் வரும்படி வைக்கவும். பாதம் இரண்டும் முழுமையாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்

    பயன்கள்: மஹத்யோக பிராணாயாம பயிற்சியினால் நுரையீரலின் அனைத்து பாகத்திற்கும் காற்று நன்கு பரவுகிறது. நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கப்படுகிறது. அசுத்த காற்று அதிகளவு வெளியேற்றப்படுகிறது. 
    ஆத்ய பிராணாயாமம் நுரையீரல் கோளாறுகளை போக்குகிறது. நுரையீரலின் மேல்பகுதி வலுப்படுகிறது. இந்த பிராணாயாமத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    நுரையீரலின் மேல்பாக சுவாச முறை:

    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தவும். முழங்கைகளையும் மடக்கி, இரு உள்ளங்கை களையும் முதுகின் மேல் இணைத்து வைக்கவும். இரு உள்ளங்கை களுக்கும் நடுவில் முதுகெலும்பு வரும்படி இருக்கட்டும்.

    மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்து, ஓரிரு வினாடிகள் நிறுத்தி இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்.

    மூச்சை உள்ளுக்கு இழுக்கும்போது கழுத்துக்கு கீழே உள்ள காறை எலும்பு பகுதியை அதாவது மார்பின் மேல் பகுதியை உயர்த்தவும். வயிற்றுப் பாகத்தை சுருக்கிக் கொள்ளவும். வெளிமூச்சின் போது காறை எலும்புகளை கீழே இறக்கி, வயிற்றுப் பகுதியை தளர்வாக வைத்துக் கொள்ளவும்.

    இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யலாம். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறலாம். பிறகு மஹத்யோக பிராணாயாம பயிற்சியை செய்யவும்.

    ஆத்ய பிராணாயமத்தின் போது, மூச்சுக்காற்றின் பெரும்பகுதி நுரையீரலின் மேல்பாகத்திற்கு செல்கிறது. இதனால் நுரையீரலின் உருண்ட மேல்பாகம் முழுவதும் காற்று நிரம்புகிறது. அப்பகுதியில் ஏற்படும் கோளாறுகளை போக்குகிறது. நுரையீரலின் மேல்பகுதி வலுப்படுகிறது.

    ×