search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோபோர்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாட்டர்கம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கர்வாதீ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியுள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். #MilitantKilled
    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள வார்போரா பகுதியில் மொகமது ரபி யாடூ என்ற ராணுவ வீரரின் வீடு அமைந்துள்ளது.

    இன்று மாலை அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் யாடூ வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ராணுவ வீரர் மொகமது ரபி யாடூ படுகாயம் அடைந்தார்.

    உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 

    ராணுவ வீரர் இறந்ததையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #MilitantsAttack
    காஷ்மீரின் பாராமுல்லாவில் உள்ள சோபோர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள சோபோர் கிராமத்தில் வாட்டர்கம் இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று போலீசார் பணியில் இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை போலீஸ் சோதனை சாவடி மீது வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
    ×