search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பற"

    பற பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ராஜனுக்கு, பாடகி சின்மயி பயப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo
    நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

    சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.



    கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    பற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, இப்படத்தில் நடிக்க அவர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். #Para #ParaAudioLaunch
    ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. 

    வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இப்படம் குறித்து இயக்குநர் கீரா பேசும்போது, ‘இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.



    நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ‘இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு." என்றார்.
    பற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான் என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். #PaRanjith #Para
    ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. 

    வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார்.

    இதில் பா.ரஞ்சித் பேசும்போது, ‘இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். 



    புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெறவேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது" என்றார்.
    சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடிப்பில் ‘பற’ என்ற படம் உருவாகி வருகிறது. #Samuthirakani
    சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும், அநீதிகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடிக்கும் படம் ‘பற’.

    வர்ணாலயா சினி கிரியே‌ஷன் பிரைவேட் லிமிடேட் நிறுவனும் தயாரிக்கும் இந்த படத்தை பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய வ.கீரா இயக்குகிறார். படம் பற்றி கூறும்போது,

    பிளாட்பாரத்தில் வாழ வழியற்ற ஒருவன், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பும் காதலர்கள், வயதான காலத்தில் தனிமையிலிருந்து விடுபட கிளம்பும் முதியோர்கள், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர், ஒரு கட்சி தலைவர், ஒரு கிளப் டான்சர் என பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கையில் ஓர் இரவில் தொடங்கி அடுத்த பகலில் முடியும் 12 மணி நேர கதைதான் ’பற’. 

    படத்தில் சமுத்திரகனி, சாந்தினி, முனிஸ்காந்த், நிதிஷ் வீரா, முத்துராமன், சாஜீ மோன், வெண்பா, தீக்கதிர் குமரேசன், கம்பம் மீனா, சூப்பர் குட் சுப்ரமணி, பேராசிரியர் செல்வக்குமார், அஸ்மிதா, வின்னர் ரமச்சந்திரன், பிரின்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.’ என்றார். #Samuthirakani
    ×