என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » பிராச்சி
நீங்கள் தேடியது "பிராச்சி"
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். #Mahat
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.
இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.
👫❤️ #Engagedpic.twitter.com/JIbzNjefKp
— Mahat Raghavendra (@MahatOfficial) April 17, 2019
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்ட மகத், மீண்டும் காதலியுடன் இணைந்திருக்கிறார். #Mahat #BiggBoss2
பிக்பாஸ் 2 வீட்டில் இருந்தபோது நடிகர் மகத், யாஷிகா மீது காதலில் விழுந்தார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மனமுடைந்து காதலை முறித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பிராச்சியை சந்தித்து பேசி சமாதானம் செய்து காதலை புதுப்பித்துவிட்டார் மகத்.
அந்த பெண்ணும் மகத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் மகத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காத போதே பிராச்சி அவரை மன்னித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவை பார்த்து காதலை சொன்ன மகத் வெளியே வந்ததும் ’யாஷிகா மீது ஈர்ப்பு மட்டுமே ஏற்பட்டது.
காதலி என்றால் அது பிராச்சி மட்டுமே. யாஷிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் தெரிவிக்க வில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் எனது நெருங்கிய நண்பர் சிம்புதான். நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததை வீடியோக்கள் போட்டுக் காட்டி சுட்டிக் காட்டினார் சிம்பு.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809061620371134_1_mahat-3._L_styvpf.jpg)
ஆனால் நான் நேர்மையாக நடந்து கொண்டதை பார்த்து அவர் பெருமைப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது சரி, அங்கு போலியாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சிம்பு சொல்லி அனுப்பி வைத்தார். அவர் சொல்லியபடி தான் நான் நடந்தேன்’ என்று கூறியுள்ளார்.
×
X