என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 113208
நீங்கள் தேடியது "அமமுகவினர்"
ஆண்டிப்பட்டியில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளை தடுத்ததாக அமமுகவைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AndipattiITRaids
ஆண்டிப்பட்டி:
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினரும் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில், வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த கட்சியைச் சேர்ந்த சுமார் 150 பேர் அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வருமான வரித்துறையினரை தடுத்த புகாரில் அமமுகவின் பேரூராட்சி செயலாளர் பொன்முருகன் கைது செய்யப்பட்டார். #LokSabhaElections2019 #AndipattiITRaids

அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த கட்சியைச் சேர்ந்த சுமார் 150 பேர் அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வருமான வரித்துறையினரை தடுத்த புகாரில் அமமுகவின் பேரூராட்சி செயலாளர் பொன்முருகன் கைது செய்யப்பட்டார். #LokSabhaElections2019 #AndipattiITRaids
×

X