என் மலர்
நீங்கள் தேடியது "வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்"
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தேர்தல் பறக்கும் படை நேற்று சோதனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. #RPUdayakumar #IT
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு சோதனை நடத்தினர். சி.பிளாக் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் சோதனை செய்தனர்.
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ விடுதியில் தேர்தல் பறக்கும் படை நேற்று சோதனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. #RPUdayakumar #IT