என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்"

    • இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு முருகப்பெருமாள், வள்ளி, தேவயானைக்கு பால் காவடி எடுத்து

    கோவிலின் வெளிச்சுற்றை வலம் வந்து பால் மற்றும் அபிஷேகத்திற்குரியனவான பொருட்களால் அபிஷேக ஆராதனை

    செய்தால் உடனே புத்திர பாக்கியம் கிட்டுவதாக நம்பி இக்கிராமத்து மக்கள் விழா நடத்த ஆரம்பித்தனர்.

    மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயத்தில் நடைபெற்று வரும் விசேஷங்கள், மாதாந்திர விசேஷங்கள், தமிழ் வருடப்பிறப்பு, பவுர்ணமி,

    கிருத்திகை, பிரதோஷம், சித்ரா பவுர்ணமி, விநாயக சதுர்த்தி, கந்தர்சஷ்டி, சிவராத்திரி, கார்த்திகை தீபம்,

    ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    • சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.
    • கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.

    சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.

    அந்த ஆண்டாள் சன்னதியில் இருக்கும் முன்பக்க மண்டபத்தின் ஒரு தூண்ணில் கருடகொடி சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கருடகொடி சித்தரின் அருள் அலைகள் இருப்பதாக நம்புகிறார்கள்.

    கருடகொடி சித்தர் பல்வேறு ஆற்றல்களை பெற்றவர்.

    மூலிகை மருத்துவத்தில் மிகுந்த திறமை பெற்றிருந்தார்.

    கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.

    இதனால்தான் அவருக்கு கருடகொடி சித்தர் பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

    இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர்.

    இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர்.

    பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான்.

    இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார்.

    இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும்.

    முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள்.

    யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சி தரும்.

    ஆண்டாள் சன்னதியில் அவரது சிற்பம் இருப்பதால் அந்த பகுதியில் அவர் ஜீவசமாதி அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    அந்த தூணில் உள்ள சிற்பத்தில் கருடகொடி சித்தர் ஒருகையில் கமண்டலமும், மற்றொரு கையில் கருட கொடியையும் வைத்தபடி காட்சி தருகிறார்.

    • எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.
    • கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.

    இவர் கருட கொடியை உடல் முழுக்க சுற்றி உள்ளார்.

    எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.

    ராமாயண காலத்திலேயே இவர் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. ராமர் எங்கெல்லாம் சென்றரோ அங்கெல்லாம் உடன் சென்றாக கூறப்படுகிறது.

    ராமரை பாதுகாக்கும் வகையில் இவர் மூலிகை பந்தல் அமைப்பதுண்டு என குறிப்புகள் உள்ளன.

    கருட கொடி என்பது கருடனுடன் தொடர்புடையது.

    திருஷ்டியை நீக்குவதில் கருட கொடிக்கு அதிக ஆற்றல் உண்டு என்பார்கள்.

    மேலும் கருட கொடிக்கு மந்திர சக்திகளை கிரகிக்கும் ஆற்றலும் உண்டு.

    கருட கொடியை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்த்துக் கொள்ளலாம்.

    இத்தகைய சிறப்புடைய கருட கொடியை இந்த சித்தர் மிக அதிகளவில் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    வேறு எந்த சித்தரும் இவர் அளவுக்கு கருட கொடியை பயன்படுத்தியது இல்லை.

    கருட கொடி சித்தரை வழிபட்டால் எத்தகைய பெரிய கண் நோயை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆண்டாள் சன்னதியில் உள்ள கருட கொடி சித்தரின் சிலை மீது ரோஸ் தண்ணீரை அபிஷேகம் செய்து அதை கண்களில் ஒற்றி கொண்டால் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

    கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.

    அந்த சந்தனத்தை கண்களை மூடி புருவத்தின் மீது வைத்துக் கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    • தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.
    • அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.

    அண்ட சராசரங்களின் இயக்கங்கள் யாவும் ஆடல்வல்லான் என்றழைக்கப்படும் நடராஜப் பெருமானின் திரு நடனமே.

    தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.

    தாண்டவ மூர்த்தியான நடராஜப் பெருமானின் திருவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

    விரிந்து படர்ந்த திருச்சடை, நான்கு திருக் கரங்கள், வலது மேற் கையில் டமருகம் எனப்படும் உடுக்கை, இடது மேற்கையில் எரியும் நெருப்பு, வலது கீழ்க் கை அபய முத்திரை, இடது கீழ்க்கை தூக்கிய திருவடியை காட்டியவாறு உருவகிக்கப்பட்டுள்ளது.

    இடது காலைத் தூக்கி, வலது காலை ஊன்றி, அதன் கீழ் முயலகன் என்னும் அசுரனை மிதித்தபடி காணப்படுகிறார்.

    இப்பெருமானுக்கு கால்கள் இரண்டு என்றாலும் எண்ணற்ற கைகள் உடையவராக ஆகமங்களில் கூறப்பட்டுள்ளார்.

    51 அட்சரங்களே திருவாசியாகவும், திருவைந் தெழுந்தான பஞ்சாட்சரமே திருவுருவாகவும், பராசக்தியே திருச்சிற்றம்பலமாகவும் விளங்குகின்றன.

    உடுக்கை சிருஷ்டி என்ற படைத்தலையும் எரிகின்ற நெருப்பு சம்ஹாரம் என்ற அழித்தலையும், அபயகரம் அருளுதலையும், ஊன்றிய திருவடி மறைத் தலையம், குஞ்சித பாதம் என்ற தூக்கிய திருவடி காத்தலையும் தத்துவார்த்தமாகக் குறிக்கின்றன.

    இவரே ஐந்தொழில்களையும் செய்யும் தாண்டவ பெருமானாக விளங்குகிறார்.

    இந்த ஐந்தொழில்களையே 'பஞ்ச கிருத்தியங்கள்' என்றழைப்பர்.

    அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.

    இந்தப் பஞ்சக் கிருத்தியங்களையும், நமசிவாய என்னும் ஐந்து எழுத்துக்களையும் ரூபமாகக் கொண்டு இவ்வுலக உயிர்களுக்கு அருள்கின்றார்.

    நமசிவாய என்பதில் இறைவனின் திருவடி நகார அட்சரமாகவும், வயிறு மகா அட்சரமாகவும், தோல் சிகார அட்சரமாகவம், திருமுகம் வகார அட்சரமாகவும், திருவடி யகார அட்சரமாகவும் சேர்ந்து 'நமசிவாய' என்னும் ரூபாமாய்த் திகழ்கிறது.

    • திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
    • இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.

    ஆடல் வல்லானை நமசிவாய என்னும் ஐந்தெழுத்தால் வணங்க எல்லா வல்லமைகளும், யோக சித்திகளும் கைவரப் பெறும்.

    இந்த அருட்சக்தி 'சர்வாதம் யோகப் பிரதாயினி' என்று ரிஷிகளால் கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்புடைய நடராஜருக்கு சென்னைக்கு மேற்கே 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் 'சித்துக்காடு' என்ற சிவத்தலத்தில் ஆருத்ரா அன்று திருமண வைபவம் நடப்பது, வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத சிறப்பு.

    பொதுவாக சிவாலயங்களில் நடராஜர், உற்சவராக இருப்பதையும் அவருக்கு ஆருத்ரா தரிசனம் நடப்பதையும்தான் எல்லோரும் அறிவார்கள்.

    மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா விழாவின் முதல் இரவில் நடராஜர், சிவகாமி அம்மையார் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு இரவு 10 மணியில் இருந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    இதன் பின்னர் மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளாக நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருமண வைபவம் மாணிக்கவாசகர் முன்னிலையில் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றது.

    இதன்பின் இம்மூவரும் வீதிஉலா வருவார்கள்.

    பிறகு காலை 10 மணியளவில் ராஜகோபுரம் முன்பாக திருவெம்பாவைப் பாடல்கள் பாடப் பெற்று, மூன்று முறை பார்வேட்டை நடைபெறும்.

    இவ்விழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    இத்தகைய திருமணமும் விழாவும் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு ஆகும்.

    இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் முகப்பு மண்டபத்தூணில் புடைப்புச் சிற்பமாக 'கருடக் கொடி சித்தர்' எழுந்தருளியுள்ளார்!

    இவர் கண் கோளாறுகளை நீக்க வல்லவர் என்பது ஐதீகம்! எனவே இவரை வழிபட எண்ணற்ற பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இத்தலத்தில் இருக்கும் அம்பாளுக்குப் பூங்குழலி அம்மன் என்று பெயர்.

    இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.

    சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி ஆருத்ரா, ஆவணி, புரட்டாசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண் டுக்கு ஆறுமுறை நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகம் இத்தலத்தில் நடை பெறுகின்றது.

    மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும்.

    திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    இந்த திருமணத்தைக் கண்டவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.

    • பாண்டிய மன்னர்கள் காலத் தில் ஹரிசரணாலய நல்லூர் என்ற பெயரால் வழங்கப்பட்டது.
    • இம்மன்னன் “கோவில் பொன் வேய்ந்த பெருமான்” எனும் சிறப்பு விருதினை பெற்றவன்.

    பழைய காலத்தில் சித்தர் பெருமக்களால் சிறிய அளவில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்ற செவிவழிச் செய்தி உள்ளது.

    இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தில் 34 கோட்டங்காளாக பிரிக்கப்பட்ட தொண்டை நாட்டில் புலியூர் கோட்டத்தை சேர்ந்த பிரதேசமாக இருந்தது.

    பாண்டிய மன்னர்கள் காலத் தில் ஹரிசரணாலய நல்லூர் என்ற பெயரால் வழங்கப்பட்டது.

    இத்திருத்தலம் பின்னாளில் திருமணம் என்று அழைக்கப்பட்ட பின்னரே சித்துக்காடு, சித்தர்காடு என்று அழைக்கப்பட்டது.

    தற்போது திருமணம் கிராமம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.

    சித்தர்களால் ஆதி காலத்தில் எழுப்பப்பெற்ற இந்த ஆலயம் பாண்டிய மன்னனான முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியனால் கற்றளியால் கட்டப்பட்டது.

    கி.பி. 1251 முதல் கி.பி. 1271ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவன்.

    என்றும் கி.பி. 1271ம் ஆண்டு இவன் இறைவன் திருவடியை சேர்ந்தான்.

    இந்த பாண்டிய மன்னன் எம் மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர் என சிறப்பிக்கப்பெற்றவன்.

    இம்மன்னன் சேர வேந்தர்களையும் சோழ வேந்தர்களையும் போசள மன்னர்களையும் போரில் புறமுதுகிட்டு ஓட செய்தவன்.

    மேலும் வாணர்களது நாட்டையும், கொங்கு நாட்டையும் கைக் கொண்டவன்.

    போரில் பல வெற்றிகளைக் கொண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியன் அநேக திருக்கோவில்களுக்கு இறையிலியாக நிலங்களையும், கோவில் பூஜைகள் எவ்வித தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கான வழிவகைகளையும் செய்தவன்.

    இம்மன்னன் ஸ்ரீரங்கத்துக்கு சென்று திருமாலை வணங்கி கோவிலையும் பொன் வேய்ந்து முடிசூடிக் கொண்டதோடு பல துலாபர தானங்களும் செய்தான்.

    ஸ்ரீரங்கத்துக்கு இம்மன்னன் செய்த திருப் பணிகளும், விட்ட நிவந்தங்களும், அளித்த அணிகலன்களும் பலவாகும்.

    எனவே இம்மன்னன் "கோவில் பொன் வேய்ந்த பெருமான்" எனும் சிறப்பு விருதினை பெற்றவன்.

    இதேபோன்று திருவானைக்கால் திருக்கோவிலுக்கும் இவன் சேர மன்னனை வென்று வாகை சூடியவன்.

    இந்த ஆலய இறைவனை வணங்கி "சேரனை வென்றான் திருநாள்" ஈன்ற விழாவையும் நடத்தி உள்ளான்.

    இந்த சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருபுட்குழி திருமால் கோவிலில் திருப்பணிகள் செய்ததை கண்ட புலவர் ஒருவர் இவன்மீது ஒரு புகழ் பாடல் ஒன்றை புனைந்து பாடினார்.

    இவ்வேந்தன் சமயம் பாராட்டாது சிவனார் ஆலயங்களையும், திருமால் ஆலயங்களையும் புதிதாக எழுப்பிய சிறப்பு கொண்டவன்.

    இந்த சித்தர் காடு எனும் ஊரில் உள்ள சுந்தர ராஜ பெருமாள் கோவிலும், தாத்ரீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டது.

    இதனை இங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

    • குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
    • முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

    குழந்தை பாக்கியம் வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

    போகாத ஆஸ்பத்திரி இல்லை, போகாத கோவில் இல்லை என்று அவர்கள் மத்தியில் மிகுந்த சலிப்பு இருக்கும்.

    ஆனால் ஆலய வழிபாடு செய்தாலும் முறைப்படி செய்தோமா? என்று யோசிக்க வேண்டும்.

    குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.

    ஜாதக ரீதியில் குழந்தை பாக்கியம் தருபவர் முருகன்தான்.

    சித்தர்காடு தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் குழந்தை பாக்கியத்திற்காக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தம்பதிகளாக வரவேண்டும்.

    பசும்பால், பன்னீர், செவ்வரளி பூக்கள் கொண்டு வரவேண்டும்.

    பால் அரை லிட்டர், பன்னீர் தேவையான அளவு, நிறைய செவ்வரளி பூக்கள் எடுத்து வரலாம்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 2 லிட்டர் பால் வாங்கி கொடுக்கலாம்.

    இன்னும் வசதி இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

    விருப்பம் இருப்பவர்கள் வஸ்திரம் எடுத்தும் முருகப்பெருமானுக்கு அணிவித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

    செவ்வரளி பூ வாங்கும்போது ரத்த சிவப்பில் உள்ள பூக்களை வாங்க வேண்டும்.

    சுமார் ஒருமணி நேரம் இந்த பரிகார பூஜை நடத்தப்படும். மறக்காமல் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் போன்றவையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    • நரம்புகளை உறுதிப்படுத்தினால் அது தளர்ச்சி அடையாது.
    • ஆரோக்கியமாக முதுமை தவிர்த்து மரணத்தை தள்ளிப்போட்டு வாழ்வோம்.

    வாழ்க்கையில் வயது ஏற ஏற முதுமையை நோக்கி நாம் செல்கிறோம் என்று பொருள். முதுமை வருவதற்கான அறிகுறிகள் என்பது நரம்புகள் தளர்ச்சி அடைவது, மேல்புற தோலில் சுருக்கம் விழுவது, கண் பார்வை குறைதல், உடல் சோர்வு, மூட்டுக்களில் வலி போன்றவைகள்தான்.

    இப்படி உடல் சார்ந்த பிரச்சனைகள் நமக்கு வந்தவுடன், இந்த மனமானது நமக்கு முதுமை என்பது வந்து விட்டது என்று சொல்லும். ஆனால் நாம் அதை ஏற்க மறுக்கிறோம். நாம் முதுமையை மறைத்தல் என்று நமது தலைமுடிக்கு நிறத்தை மாற்ற அல்லது மறைக்க டை அடிப்பது மட்டும் போதும் என்று அக உடலை மறந்து விடுகிறோம்.

    பொதுவாக உள் உறுப்புகளில் நோய் வருவதற்கான அறிகுறிகளை நமக்கு உணர்வு மூலமாக கொடுக்கும். நாம் அதை உதாசீனம் படுத்தி விட்டால் அதுவே முதலில் வலியாக ஆரம்பம் ஆகி நோயில் சென்று மரணத்தில் முடியும்.

    எனவே நோயின்றி வாழ்ந்து முதுமையை தவிர்க்க வேண்டும் என்றால், நமது நரம்புகளுக்கு உறுதி தன்மையை கொடுக்க வேண்டும். நரம்புகளை உறுதிப்படுத்தினால் அது தளர்ச்சி அடையாது. அப்படி தளர்ச்சி அடையாமல் இருந்தால் தோளில் சுருக்கம் விழாது. என்றும் நாம் இளமையாக இருப்போம். இதனால் முதுமை தவிர்க்கப்படுகிறது அல்லது தள்ளிப் போடப்படுகிறது.

    இதற்குத்தான் காயகல்பம் என்கிற பயிற்சியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கலையானது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆயக்கலைகள் 66 உள்ளது என்பது நமக்குத் தெரியும். அந்த 66 கலைகளிலே நரம்புகளை உறுதிப்படுத்தும் கலை ஒன்றும் உண்டு. இதுவே காயகல்பம். இந்த கலையை கற்று தினமும் செய்பவர்கள் வாழும் காலத்தில் இந்த ஜீவனுக்கு முக்தி நிலையை கொடுக்கலாம்.

    இப்படி சித்தர்களால் ரகசியமாக வைக்கப்பட்டும் பரிபாசைகளால் சொல்லப்பட்ட இந்த அற்புதப் பயிற்சியைதான் வேதாத்திரி மகரிஷி நமக்கு எளிமையாக கொடுத்துள்ளார். குறிப்பாக குழந்தை பிறப்பு காரணமாக பிரச்சனை உள்ள இளம் தம்பதியினருக்கும், பெண்கள் சம்பந்தப்பட்ட மாதவிடாய், கர்ப்பப்பை, பிரச்சனைகள், குறிப்பாக சிறுநீர் கற்கள் மற்றும் நீர் கட்டிகள் போன்ற பிரச்சனைகள், மலட்டுத்தன்மை பிரச்சனை, ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைந்து இருத்தல் போன்ற பிரச்சனைக்கு நல்ல பலனை கொடுக்கும் அற்புதமான பயிற்சிதான் காயகல்பம் ஆகும். மேலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் மற்றும் நாம் சிக்கி இருக்கும் பிரச்சனையான சர்க்கரை நோயில் இருந்து விடுபடவும் இந்த பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

    காயகல்பம் பயிற்சியை பற்றி துவாபரயுகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு எது உள்ளதோ, இல்லையோ அடிப்படையாக நமக்கு வேண்டியது ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கம் என்பது, நாம் நம்முடைய வாழ்நாளில் யாருக்கும் உடல், மனம், உயிர் அளவில் நம்முடைய செயல்கள் மூலமாக துன்பம் கொடுக்காமல் வாழ்வதாகும். மேலும் நமக்கும் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழும் வாழ்க்கைதான் ஒழுக்கமான வாழ்க்கையாகும்.

    இந்த அடிப்படை ஒழுக்கத்தை நாம் மாணவப் பருவத்தில் இருந்து கொடுத்து விட்டால் அவர்கள் வாழ்க்கை அற்புதமான வாழ்க்கையாக மாறும். இதுவே நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு நாம் கொடுக்கும் சீதனம்.

    பஞ்சபூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லுவோம். இந்த பஞ்ச பூதங்களின் கூட்டுக் கலவைதான் உலகில் உள்ள எல்லா தோற்ற பொருள்களும் ஆகும். இதில் மனிதரும் விதிவிலக்கல்ல.

    பஞ்சபூதங்களில் நிலம் என்பது நமது பருஉடல், நீர் என்பது ரத்த ஓட்டம், நெருப்பு என்பது உடலில் உள்ள வெப்பம், காற்று என்பது உடலில் உள்ள மூச்சு, ஆகாயம் என்பது உயிர் ஆகும்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    அதாவது ஆகாயத்தில் இருந்து தோன்றி பூமிக்கு வந்து வாழ்ந்து விட்டு மீண்டும் ஆகாயத்திலேயே நாம் சேர்ந்து விடுவோம். இதைத்தான் பிறப்பு மற்றும் இறப்பு என்றும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்தான் (120 ஆண்டு காலம்) வாழ்க்கை என்றும் சொல்கிறோம்.

    இந்த 120 ஆண்டுகள் ஆயுள் காலம் என்பது, அவரவர்கள் கர்ம வினை பதிவுகளுக்கு ஏற்றபடி பிறக்கும்போது அது நிர்ணயிக்கப்படும். இதை கண்டு அறியும் விஞ்ஞானம் தான் ஜோதிட கலையாகும். இந்த கர்ம வினை பதிவுகள் தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போது நம்முடைய கரு மையத்திலேயே உருவாகிறது. இதைத்தான் மகான்கள் இறைவன் நம்மை படைக்கும்போது, நம் கர்மாவை படைத்துவிட்ட பிறகுதான் நம்மை படைப்பார் என்கின்றனர்.

    இந்தக் கர்ம வினை பதிவுகள்தான் உடலில் நோயாகவும், மனதில் சஞ்சலமாகவும் வந்து அதை நம் வாழ்நாளில் சந்தித்தும் அனுபவித்தும் வருகிறோம்.

    இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், மூன்று விஷயங்களில் நாம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவைகள் என்னவென்றால், ஒன்று நோயின்றி வாழ வேண்டும். இரண்டு முதுமையை தவிர்க்க வேண்டும். மூன்று மரணத்தை தள்ளி போட வேண்டும். இதற்குத்தான் காயகல்பம் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    அதாவது இந்த உடல் பூமி என்றால் ஆகாயம் என்பது நமது தலை உச்சியாகும். காயகல்பம் பயிற்சி என்பது பருஉடலில் உள்ள சத்தை ஆகாயத்தில் ஏற்றி மறுசுழற்சி மூலமாக மீண்டும் பரு உடலில் தங்க வைத்து நரம்புகளுக்கு ஊக்கத்தை கொடுத்து உயிரை இந்த உடலிலேயே தங்க வைப்பதாகும். இதனால் நாம் நீண்ட காலம் வாழலாம். இப்படி நீண்ட காலம் வாழும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி இளமையை காத்து மரணத்தை தள்ளி போடலாம்.

    இப்படி நாம் நீண்ட காலம் வாழ்ந்தால் நம்முடைய பதிவுகளை நாமே அனுபவித்து நம் அடுத்த சந்ததிகளுக்கு பதிவுகள் இல்லாத நல்ல வாழ்வை நம்மால் அளிக்க முடியும்.

    சித்தர்கள் இந்தப் பயிற்சியினால் நமது உடலில் அமுத ரசம் உருவாகும் என்கின்றனர். இதை வேதாத்திரி மகரிஷி தனது கவியிலே வித்து, காயகல்பம் பயிற்சியினால் அமுத ரசமாக மாறும் என்கிறார். அமுத ரசம் என்றால் உயிர் சத்துக்கள் அடங்கிய ஒரு தெய்வீக திரவம் என்று திருமூலர் கூறுகிறார்.

    எனவே சித்தர்களின் இந்த ரகசியமான ஒரு கலையை வேதாத்திரி மகரிஷி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்கின்ற பரந்த மனநிலையில் இந்தப் பயிற்சியை நமக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் உடல் மனம், உயிர், ஆத்மா, தூய்மை அடையும் என்கிறார்.

    இன்றைய விஞ்ஞானம் இது போன்ற பயிற்சிகள் செய்வதால் நமது மரபணுவிலே மாற்றம் ஏற்படுகிறது என்று சொல்கிறது. மரபணுவில் மாற்றம் ஏற்படும்போது விதி என்கிற கர்ம வினை பதிவுகள் மாற்றம் பெறும் அல்லது தாக்குதலை குறைத்து விடும். மேலும் உடலை வளர்ப்பது உணவுதான் என்பது நமக்குத் தெரியும். அந்த உடல் சரியான முறையில் வளர வேண்டும் என்றால் உணவு ஏழு தாதுக்களாக சரியாகப் பிரிந்தால்தான் உடல் சரியாக வளரும். அந்த உடல்தான் ஆரோக்கியமான உடலாக இருக்கும்.

    இந்த ஏழு தாதுக்கள் என்பது நாம் உண்ணும் உணவே ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஞ்சை மற்றும் விந்து நாதமாக மாற்றம் பெறுகிறது. இந்த ஏழு தாதுக்களை சரியான முறையில் பிரித்துக் கொடுக்க காயகல்பம் பயிற்சி பெரிதும் உதவி செய்கிறது. எனவே இந்த அற்புதப் பயிற்சியை நாம் செய்வோம். ஆரோக்கியமாக முதுமை தவிர்த்து மரணத்தை தள்ளிப்போட்டு வாழ்வோம்.

    இந்த பயிற்சி வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின்கீழ் இயங்குகின்ற அறிவு திருக்கோவில்கள், அறக்கட்டளைகள், தவ மையங்கள் மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நமது அடுத்த ஆராய்ச்சி மனதை வளமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

    போன்: 9444234348

    பாவ வினையால் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

    வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

    மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

    அசுவினி: நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

    பரணி: நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

    கிருத்திகை: நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

    ரோகிணி: நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    மிருகசீரிடம்: நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

    திருவாதிரை : நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

    புனர்பூச: நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    பூசம்: நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

    ஆயில்யம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

    மகம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

    பூரம்: நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

    உத்திரம்: நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

    அஸ்தம்: நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

    சித்திரை: நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

    சுவாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    விசாகம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

    அனுஷம்: நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    கேட்டை: நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

    மூலம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

    பூராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

    உத்திராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    திருவோணம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    அவிட்டம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

    சதயம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

    பூராட்டாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

    உத்திரட்டாதி: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

    ரேவதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.

    ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்
    ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.
    ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை. பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    உதாரணமாக புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூறு பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம்.

    அதேபோல தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவற்றுடன் தான் ஒருவன் பிறப்பான். ஆனால் அவை அனைத்தும் பல பூட்டுகளால், அவனுள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

    உதாரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் அவனுக்குள் எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வர வேண்டும் என்பதற்காக தரப்படுபவையே.

    அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு முன்பாக, பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரி கூறிய ஒரு வார்த்தை, அவர் பெண் ஆசையை வெறுக்க காரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி பல சித்துகளையும் முருகப்பெருமானிடம் பெற்றார். அதனால் தான் ‘நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே’ என்றார்கள். முன்கால கர்மவினையானது, நம்மை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக கடுமையானதாகவும், மோசமானதாகவும் இருக்கலாம் அதை நாம் பார்ப்பதில் பலனில்லை. சமைத்த உணவே நாவிற்கு ருசியை கொடுக்கும். சமைக்கும் முன் அதன் ருசியை அறிய இயலாது.

    அதுபோல ஒவ்வொறு ஆசையையும் வெறுக்க வெறுக்க ஒவ்வொறு பூட்டாக உடைபடும். அனைத்து பூட்டுகளும் உடைபடும் போது, மனம் உடலோடு அலையும்.

    ஆமாம்.. அனைத்தையும் வெறுத்து, துறந்த மனிதன் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து திரிவான். அவன் ஓடி, ஓடி ஒடுங்கும் நிலையில், குரு தன் கருணையால் அதை திறந்து விடுவார். அக்கணம் முதல் காற்றாட்டு வெள்ளம் போல் ஞானம் பெருக்கெடுத்து ஓடும். பலரின் ஆன்ம தாகங்களையும் கூட அவன் தீர்த்துவைப்பான். சிலரை தன்னோடு ஞான ஆற்றில் அடித்தும் செல்வான். அவனே சித்தன் என்று அழைக்கப்படுவான்.
    அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
    அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சைப்பசேல் வயல் வெளிகள். ஊரில் நுழைந்து வெளியே வயல் வெளிகளுக்கு இடையே செல்லும் சாலையில் நடந்தால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஓர் ஆலயம் தெரியும். மிகப் பழமையான ஆலயம்.

    இந்த ஆலயத்திற்கு தென்மேற்கே ½ கி.மீ. தொலைவில் செங்குளம் என்ற குளம் இருந்த பகுதி. அந்தப் பகுதி தற்போது திடலாகக் காட்சி தருகிறது. இந்தத் திடலில் ஒரு நந்தியும் எதிரே பீடம் இல்லாத சிவலிங்கமும் காட்சி தருகிறது. இதன் தல வரலாறு என்ன?

    அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை கலப்பையால் உழ, அந்தப் பெண் களைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

    விடிவதற்குள் எல்லா நிலத்தையும் உழுது முடித்து விட வேண்டும் என்ற ஆவலில் நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இறைவன் அருளால் வேலையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. பசியால் குழந்தை அழுகிறது என்று புரிந்துகொண்ட அந்தப் பெண், குழந்தைக்கு பால் ஊட்டினாள்.

    ‘வேலை முடியவில்லையே’ என்ற கவலையில் அருகே இருந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வேண்டினாள். இறைவனின் அதீத கருணை இவர்கள் மேல் படிய, இவளும் குழந்தையும், காளைகளும், கணவனும் சிலையாக மாறி இறைவனுடன் ஐக்கியமாகினர். இது செவி வழி கதை.

    ஒரு காளையின் சிலையும் விவசாயியின் சிலையும் தற்போது திடலாக காட்சி தரும் செங்குளம் ஏரிப்பகுதியில் காட்சி தருகிறது. குழந்தை பால் பருகும் கோலத்தில் உள்ள அந்த இளம் பெண்ணின் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ளது. இன்னொரு காளையின் சிலை அருகே உள்ள ஆலயத்தில் நந்தியம் பெருமானாக அருள்பாலிக்கிறது.

    இதுவே அளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம். சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. காலப்போக்கில் சற்றே சிதிலமடைந்த இக்கோவிலை முதலாம் குலோத்துங்கன் திருப்பணிகள் செய்து புதுப்பித்துள்ளான்.

    இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வரகுண ஈசுவரமுடைய மகாதேவர்’ எனவும், ‘வரவுணீசுவரமுடைய நாயனார்’ எனவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த ஆலய இறைவன் ‘வரகுணேஸ்வரர்’ என்ற பெயரிலும், ‘காசி விசுவநாதர்’ என்ற பெயரிலும் தற்போது அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் காசி விசாலாட்சி.

    ஆலய முகப்பைத் தாண்டியதும் எதிரே நந்தியம் பெருமானும், பலிபீடமும் இருக்க, வலதுபுறம் அன்னை விசாலாட்சியின் சன்னிதி உள்ளது. இந்தச் சன்னிதியின் இரண்டாம் விமான தளம் முற்றிலும் அழிந்துவிட்டது. இறைவி நாற்கர நாயகியாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை மேல் இருகரங்களில் அங்குசத்தையும் மலர்மொட்டையும் சுமந்து, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    அன்னையின் சன்னிதியை விட்டு கீழே இறங்கி, தென்புறம் சற்றே நடந்து உயர்ந்த படிகட்டுகளைக் கடந்து வடபுறம் திரும்பினால் மகாமண்டபத்தின் உள்ளே நுழையலாம். ஆலயத்தின் மையமாகத் திகழும் இறைவனின் கருவறைக்கு முன்பாக இருக்கிறது மகா மண்டபம். சிதிலமான இந்த மகாமண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு தூண்களிலும் சோழர்கால சிற்ப வேலைப்பாடுகளே காணப்படுகின்றன. இரு தூண்களில் அடியவர்களின் வடிவங்களும், பூ வேலைப்பாடுகளும் உள்ளன. ஒரு தூணில் நந்தி, யானை முதலிய விலங்கு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடபுறம் ஒரு பெரிய சுரங்கம் செவ்வக வடிவில் காணப்படுகிறது. இப்பாதை ½ கி.மீ. தொலைவில் இருக்கும் பிடாரி தோப்பிற்கு செல்லும் பாதையாக இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். தற்போது சிமெண்டு பலகையைக் கொண்டு இந்த சுரங்க பாதையை மூடி வைத்துள்ளனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரகுணேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் அனைத்து விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மகா சிவராத்திரி திருநாள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மகாமண்டபத்தின் மேற்கில் முருகப்பெருமானின் திருமேனி உள்ளது. இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் சிவ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தலவிருட்சமான வில்வம் ஆலய முகப்பிலேயே உள்ளது. மேற்கு பிரகாரத்தில் ஓர் அரசமரமும், அதன் அடியில் மன்னன் வரகுணபாண்டியன் சிலையும் உள்ளது. இந்த அரசமரம் பலநூறு ஆண்டுகளை கடந்தது.

    இந்த ஆலயம் சித்தர்கள் உலவும் இடமாக இன்றும் திகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத்தின் தென்மேற்கு திசையில் ஒரு கற்கட்டிடம் இருந்த சுவடு தெரிகிறது. அதனிடையே பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் ஒன்று உள்ளது. ஆலமரத்தின் அடியில் பீடம் ஒன்றும் உள்ளது. இது சித்தர்கள் தவம் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது.

    கால பைரவர்

    மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் கால பைரவர் அருள்பாலிக்கிறார். பதினான்காம் நூற்றாண்டின் கலை முறையில் அமைந்துள்ள இந்த கால பைரவரின் தலைக்கோலம் சுடர் முடி அமைப்பில் உள்ளது. பைரவரின் நான்கு கைகளில் வலதுமுன் கையில் முத்தலை ஈட்டியும், இடது முன் கையில் தலை ஓடும், பின் கரங்களில் உடுக்கையும் பாசமும் உள்ளன. பைரவரின் பின்னால் அவரது வாகனமான நாய் திறந்த வாயுடன் காணப்படுகிறது. பைரவரின் கழுத்திலிருந்து தொங்கும் மண்டையோட்டு மாலை அவரது முழங்கால் வரை நீண்டு அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும், பைரவர் யாகமும் நடைபெறுகிறது.

    இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அளுந்தூர் கிராமம் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று அளுந்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பின் அங்கிருந்து உள்ளே 3 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    சித்தர்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
    அகஸ்தியர் (ஞானம் உண்டாக)

    ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
    பொதிகை சஞ்சராய தீமஹி
    தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

    கருவூரார் (ஆயுள் தீர்க்கம் பெற)


    ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
    சௌபாக்ய ரத்நாய தீமஹி
    தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

    காலங்கிநாதர்

    ஓம் வாலை உபாசாய வித்மஹே
    புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
    தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

    திருமூலர் (தியான யோகம் பெற)

    ஓம் ககன சித்ராய வித்மஹே
    பிரம்மசொரூபிணே தீமஹி
    தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

    பதஞ்சலி (யோகங்கள் சித்தி அடைய)

    ஓம் சிவதத்வாய வித்மஹே
    யோகாந்தராய தீமஹி
    தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

    புண்ணாக்கீசர்


    ஓம் ஈசத்வாய ச வித்மஹே
    ரணனாவாய தீமஹி
    தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

    சுந்தரானந்தர் (சகல காரியங்களும் சித்தி பெற)

    ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
    ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
    தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

    போகர்

    ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
    மன்மதரூபாய தீமஹி
    தன்னோ பிரபஞ்ச சஞ்சார
    சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

    பைரவர் (அஷ்ட சித்திகளை பெற)

    ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
    க்ஷத்ர பாலாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கசிச்நாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்
    ×