என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்ப் புத்தாண்டு"
- மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.
- உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் குருக்கள் சிவமணி, 2025 ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2026 ஏப்ரல் 13-ந்தேதி வரை பஞ்சாங்கத்தின் முக்கிய தகவல்கள் குறித்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.
ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும். அரசியல் கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை பின்னடையும். உலக அளவில் புதிய நோய் தாக்குதல் வரலாம்.
வெளிநாடுகளில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.
விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும். எல்லையில் பதற்றம் இருக்கும். உலகத்தில் ஆங்காங்கே மத கலவரம், போர் அபாயம் இருக்கும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்படுமா? மீனாட்சி அம்மன் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்
தமிழ் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று கோவில் ஸ்தானிக பட்டர் ஹாலஸ், வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். அதில், "விசுவாவசு வருடத்தில் விவசாயம் செழிக்கும். தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். நாட்டில் பதவி மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தர்மகாரியங்கள், தவங்கள் நடைபெறும். அதிக மழை, வெயில், குளிர் மற்றும் தீ விபத்துகளும் ஏற்படும். புதிய வரிவிதிப்பின் மூலம் விலைவாசி உயரும். அதனால் நாட்டில் போராட்டங்கள் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் அணி மாற்றம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
- நித்யானந்தா நான் உயிருடன் தான் இருக்கிறேன் என விளக்கி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
- நாளை இரவு 8 மணி அளவில் தமிழிலும் நேரலையில் தோன்றி பேசுகிறார்.
பிரபல சாமியாரான நித்யானந்தா கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி அங்கு இருப்பதாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது. ஆனால் நித்யானந்தா நான் உயிருடன் தான் இருக்கிறேன் என விளக்கி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நாளை தமிழ்ப் புத்தாண்டையொட்டி நித்யானந்தா இன்று இரவு 7 மணி அளவில் ஆங்கிலத்திலும், நாளை இரவு 8 மணி அளவில் தமிழிலும் நேரலையில் தோன்றி பேசுகிறார்.
இது தொடர்பாக நித்யானந்தா பக்தர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பதிவில் பகவான் ஜி நித்யானந்தா பரமசிவம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
- எனது இதயமார்ந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங்காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.
'புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
மலர இருக்கும் 'விசு வாவசு' ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும், எண்ணங்கள் ஈடேறட்டும், முயற்சிகள் முளைக்கட்டும், வெற்றிகள் பதியட்டும், புன்னகை பூக்கட்டும், மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும் என மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14.
- அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. "சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்" என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.
பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14. ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுள் ஒருவராகப் பிறந்து, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் மிகப்பெரும் தன்மைகளை எல்லாம் ஆராய்ந்து, இந்திய மாநிலங்களின் ஒன்றியத்திற்கான அரசமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும். அறிவின் வாராத வெற்றிகள் இல்லை என்பதை நிலைநாட்டியவர்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து வருமாறு:-
திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழனென்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear