என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சவுகார்பேட்டை"
சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் பட்னாஸ். இவர் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு புனேயை சேர்ந்த ராகுல் கவுதம் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 25-ந் தேதி நகை பட்டறையில் இருந்த 6 கிலோ 200 கிராம் தங்க கட்டியை திருடிக்கொண்டு ராகுல் கவுதம் மாயமாகி விட்டார்.
இதுகுறித்து யானைகவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தங்க கட்டியை திருடிய ராகுல் கவுதம் மற்றும் அவரது கூட்டாளிகளான புனேயை சேர்ந்த ஹேமந்த் பவார், லோனார் ஹோரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.
தங்கம் திருட்டுக்கு அவர்களுக்கு வேறு யாரேனும உதவினார்களா? தங்கத்தை எங்கு விற்றனர் என்பது குறித்து 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
ராயபுரம்:
சவுகார்பேட்டையில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்திருப்பவர் ஷரிபுல் ஹக்.
இங்கு நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் ஷாகில் (18). இவர் இங்கு செய்த 52 பவுன் நகைகளை பாலீஸ் போடுவதற்காக வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பட்டறைக்கு கொண்டு சென்றார்.
வழியில் 2 பேர் இவரை சந்தித்தனர். பட்டறை அதிபருக்கு நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வியாபாரம் சிறப்பாக நடக்க நகைகளுக்கு பூஜை நடத்துவதாக கூறினார்கள்.
இதை உண்மை என்று நம்பிய ஷாகில் தான் கொண்டு சென்ற நகைகளுக்கு பூஜை நடத்த ஒப்புக்கொண்டார். அருகில் உள்ள ஒரு இடத்தில் நகைகளை வைத்து பூஜை செய்தனர். கண்களை மூடி தியானம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
ஒருவர் மந்திரம் சொன்னார். இந்த நிலையில் திடீரென்று அவர்கள் 52 பவுன் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து யானை கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்களை பிடிக்க பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன்மூலம் நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
ராயபுரம்:
சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் கமல் (வயது 36). நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணியளவில் 300 கிராம் தங்க கட்டியை ஒரு பையில் வைத்தபடி தனது நண்பர் ஹேமந் என்பவருடன் கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கமல் அருகில் வந்து பேசிக் கொண்டிருந்தார். கமல் மது குடித்து முடித்து வீட்டுக்கு சென்று பையை பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க கட்டியை காணவில்லை.
இது குறித்து கமல் ஏழுகிணறு போலீசில் புகார் செய்தார். கொள்ளையனை பிடிக்க பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன், ஏழுகிணறு இன்ஸ்பெக்டர் தவமணி, உதவி கமிஷனர் சீனிவாசன், ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கமலுடன் அந்த மர்ம நபர் எடுத்த செல்பி படம் இருந்தது. அதை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வாகன சோதனையின்போது வால்டாக்ஸ் சாலை வழியாக வந்த அந்த மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் இடுப்பில் தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தான். கொள்ளை நடந்த 2 மணி நேரத்தில் அவன் போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில் அவனது பெயர் கர்ணன் என்பதும், கொண்டித்தோப்பு சுந்தர முதலி தெருவை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. #arrest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்