search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 115467"

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரத்தில் 6 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,653 பேர் விண்ணப்பித்திருந்தனர். விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் நடந்த தேர்வை 788 பேர் எழுதினர். 865 பேர் எழுத வரவில்லை. விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது விழுப்புரம் தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    பாராளுமன்ற தேர்தல் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. #TNPSC #LokSabhaElection
    சென்னை:

    முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது.

    இந்தநிலையில் இந்த தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

    * வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

    * உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

    * அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

    இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

    ஏற்கனவே அறிவித்தப்படியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #GroupII #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரை இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குரூப்-2 தேர்வு உத்தேச விடைகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இந்த குரூப்-2 தேர்வு முதல் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித் தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே (ஹால் டிக்கெட்) இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு காலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளடு செய்ய வேண்டும்.

    தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களை ‘பி.டி.எப்.’ கோப்புகளாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற் கான தகவல்களும் விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங் களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்படமாட்டாது. அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 20-ந்தேதிக்குள் தேர்வர் கள் இதை செய்ய வேண்டும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6 லட்சம் பேர் எழுதினார்கள். ஒரு பதவிக்கு 500 பேர் போட்டியிடுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 1,199 ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப்-2 தேர்வு(நேர்முகத்தேர்வு உள்ளடக்கிய) குறித்த அறிவிப்பை கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 8 ஆயிரத்து 242 விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யவில்லை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு, மீதம் உள்ள 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 391 ஆண் விண்ணப்பதாரர்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 569 பெண் விண்ணப்பதாரர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். தேர்வு எழுத தகுதிபெற்ற 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேரில், 4 லட்சத்து 81 ஆயிரத்து 80 பேர் தமிழ் வழியிலும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 890 பேர் ஆங்கில வழியிலும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர்.



    இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 116 மையங்கள் மூலம் 2 ஆயிரத்து 268 இடங்களில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வுகளை கண்காணிக்க 2 ஆயிரத்து 94 தலைமை கண்காணிப்பாளர்களும், அவர்களுக்கு கீழ் 31 ஆயிரத்து 349 கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு நடந்த 2 ஆயிரத்து 268 இடங்களிலும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 254 பறக்கும் படையினரும், 413 நடமாடும் குழுக்களும் நியமித்து இருந்தனர்.

    தேர்வுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக கலெக்டர்களும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வருவாய் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் மட்டும் 247 இடங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 64 ஆயிரத்து 309 பேர் சென்னையில் இந்த தேர்வை எழுதினர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டார். தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வுக்கு வந்த தேர்வர்கள் கையில் செல்போன், கால்குலேட்டர் ஆகிய மின்சாதன பொருட்கள் எடுத்து செல்கின்றனரா? என்பதெல்லாம் தேர்வு நடந்த இடங்களில் கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்களிடம் கேட்டபோது, ‘பொது தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. ஆனால் பொது அறிவு பகுதியில் சில வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தது’ என்று தெரிவித்தனர். நடப்பு நிகழ்வுகள் பகுதியில் லோக் ஆயுக்தா பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாகவும், சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு பற்றியும் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    1,199 காலிப்பணியிடங்களுக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேற்று தேர்வு எழுதியதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்தது. அந்த அடிப்படையில் வைத்து பார்க்கும் போது ஒரு பதவிக்கு 500-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

    எழுத்து தேர்வு முடிவுற்ற நிலையில், இந்த தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத்தேர்வும் நடைபெற இருக்கிறது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. #TNPSC #TNPSCGroup2
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 248 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு நடைபெறுகிறது.



    தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #TNPSC #TNPSCGroup2
    1,199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. #TNPSC #GroupII
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 1,199 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி-2(நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 பதவிகள்) பணிக்கான முதல்நிலை தேர்வினை வருகிற 11-ந்தேதி சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் நடத்த உள்ளது.

    இந்த தேர்வுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(‘ஹால் டிக்கெட்’) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnps-c-ex-ams.net, tnps-c-ex-ams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

    நுழைவுச்சீட்டினை(ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contact tnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

    மேற்கண்ட தகவல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், மற்றொரு செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் பணியில் அடங்கிய உதவி ஆணையர் தொழிலாளர் பதவிக்கான எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு முன் நடைபெறும் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 5 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. #TNPSC #GroupI
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1(டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு(2017) பிப்ரவரி 19-ந் தேதி நடந்தது. அதற்கான தேர்வு முடிவு 21.7.2017 அன்று வெளியிடப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #TNPSC 
    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் பேசியுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் ஓராண்டுக்கு மேலாகியும் வெளியிடப்படவில்லை. மிக முக்கியமான போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழக அரசுத் துறைகளில் 29 மாவட்ட துணை ஆட்சியர்கள், 34 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 வணிகவரித் துறை உதவி ஆணையர்கள், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 8 மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி என மொத்தம் 85 முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு 2017-ம் ஆண்டு அக்டோபர் 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளில் மொத்தம் 4602 பேர் பங்கேற்றனர்.

    வழக்கமாக இத்தேர்வு முடிவுகள் அதிகபட்சமாக 4 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டுக்குப் பிறகும் முடிவுகள் வெளியாகவில்லை என செய்திகள் வந்துள்ளன.

    தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாதது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்வில் பங்கேற்ற அனைவரின் விடைத் தாள்களும் திருத்தப்பட்டுவிட்ட நிலையில், சிலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை தேர்வாணைய அதிகாரிகள் என்ற பெயரில் சிலர் தொடர்பு கொண்டு லட்சங்களில் பணம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பேரம் பேசியதாகவும் தெரிகிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய முதல் தொகுதி தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததையும், அத்தேர்வில் விடைத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டதையும் கடந்த ஆண்டு நான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன்.

    அதன்தொடர்ச்சியாக அந்த முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.சி. ஐ.டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முறைகேடு செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டால் அதுவும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதால் தான் முடிவுகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னரே முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

    சர்ச்சைக்குரிய முதல் தொகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியிட்டது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1.38 லட்சம் பேர் எழுதினர்.

    அவர்களில் 4602 பேர் முதன்மைத் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீதான நம்பிக்கை தகர்ந்து விடும்.

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணி உள்ளிட்ட 23 வகையான குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்கான அத்தேர்வுகளின் ஒவ்வொரு கட்டமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    இந்தியா முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அதனால் கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில் பங்கேற்றவர்கள் முடிவுகளைப் பொறுத்து அடுத்தக் கட்ட முடிவை எளிதாக தீர்மானிக்க முடிகிறது. இதேபோன்ற சிறந்த அணுகு முறையையும், ஒழுங்கையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது எது?

    முதல் தொகுதி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நேர்காணல்களை மின்னல் வேகத்தில் நடத்தி, அதைவிட அதிக வேகத்தில் முடிவுகளை அறிவித்து பணி நியமன ஆணைகளை வழங்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மட்டும் தாமதம் செய்வது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    முதன்மைத் தேர்வுகளில் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை இந்த தாமதம் உறுதி செய்கிறது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் மீது இத்தகைய சந்தேக நிழல் படிவது நல்லதல்ல.

    இந்த நிலையை மாற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல் பாடுகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் போதே, அத்தேர்வுகளின் பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடிவு வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக 2016-ம் ஆண்டுக்கான முதல் தொகுதி முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை ஒரு வாரத்திற்குள் ஆணையம் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss

    குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். #TNPSCExam #GroupIV
    சென்னை:

    சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் எழுதிய தேர்வாக இருக்கும். அந்த தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு வித்தியாசமாக நடந்தது. தேர்வு எழுதியவர்களின் பெயர், பதிவு எண், புகைப்படம், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியதில்லை. வெளிப்படையாக தேர்வு நடத்தி வருகிறோம்.

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கும் சேர்ந்து ஒரே தேர்வாக நடத்தியதால் அரசுக்கு ரூ.12 கோடி செலவு குறைந்துள்ளது. குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேரின் மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது.

    தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அனுப்பப்படும். அவர்கள் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதனால் தேர்வு எழுதியவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

    அதன்பின்னர் குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு 3 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப்-4 தேர்வு அறிவிக்கும்போது 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 11 ஆயிரத்து 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்போம்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15-ந் தேதிக்குள் வெளியிடப்படும். இதன்மூலம் 1,547 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிப்படைத்தன்மையாக தேர்வை நடத்துகிறது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏற்கனவே 27 கம்ப்யூட்டர் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 50 ஆயிரம் பேருக்கு குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வை கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்த முடியும். அவ்வாறு தேர்வு நடத்தினால் விரைவாக முடிவு வெளியிடப்படும்.

    தேர்வாணைய பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  #TNPSCExam #tamilnews
    ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளை ஒரு வருடத்துக்கு 50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    அரசு துறைகளில் உள்ள 30-க்கும் அதிகமான பிரிவுகளுக்கு இந்த துறை மூலம்தான் தேர்வு நடத்தப்படுகிறது.

    டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, ஆன்-லைன் மூலம் தேர்வுகளை நடத்த இப்போது அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக விருப்பமுள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளன.

    மாறி வரும் காலத்துக்கு ஏற்ப புதிய நடைமுறையை புகுத்துவது அவசியம் என்றும், பழைய காலம் போல் பேப்பரில் பரீட்சை எழுதி அதை திருத்தி முடிவுகளை அறிவிக்க கால விரயம் ஏற்படுவதால் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பரீட்சை எழுத விரும்புபவர்கள் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில்தான் பதில்களை அனுப்ப வேண்டும்.

    பாஸ்போர்ட் அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளை தனியாரிடம் ஒப்படைத்திருப்பது போல் தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து ஹால் டிக்கெட்டை சரி பார்ப்பது உள்பட பல்வேறு பணிகளை ஒப்படைக்க உள்ளனர்.


    இந்த டெண்டரை அரசு துறை நிறுவனமான எல்காட் எடுத்து நடத்த முன் வருமா? அல்லது தனியார் கம்ப்யூட்டர் கம்பெனிகள் ஏற்று நடத்த முன் வருமா? என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

    இதுபற்றி சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் போது, “தனியாரிடம் இதை ஒப்படைத்தால் நிறைய தவறுகள் நடக்கும். வினாத்தாள் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே நன்மைகளை விட அதிக தீமைகள்தான் ஏற்படும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

    அரசுத் துறையில் வேலையில் சேருவதற்கு பட்டப்படிப்பு படித்திருந்தாலே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதலாம். தற்போது இதை ஆன்-லைனில் தேர்வு எழுத சொல்லும்போது கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஏனென்றால் நிறைய மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை சரளமாக பயன்படுத்த தெரியாது. இதனால் தடுமாற்றம் அடைவார்கள்.

    அதுமட்டுமல்ல. கடந்த 2015-ம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத 2 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ‘சர்வர்’ முடங்கியதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

    மேலும் வினாத்தாள் வெளியாக அதிக வாய்ப்பும் உருவாகும். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரித்து வழங்குவது மட்டும்தான் தேர்வாணையத்தின் பணி என்றும் அதை கணினியில் ஏற்றி தேர்வை நடத்துவது வரை அனைத்தும் தேர்வு நடத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

    தேர்வு அறையின் மேற்பார்வையாளர் கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். தேர்வாணையத்தில் உள்ள பார்வையாளர் ஒருவர் மட்டுமே இருப்பார் என தெரிகிறது. எனவே இத்தகைய சூழலில் கண்டிப்பாக முறைகேடுகள் நடைபெறும்.

    முக்கியமாக வினாத்தாள்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பணியை செய்வதற்கு 1 நாளைக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது வினாத்தாள் கசிய அதிக வாய்ப்புள்ளது.

    பல மாநிலங்களில் ஆன்-லைன் தேர்வுக்கான வினாத்தாள் இப்படித்தான் கசிந்தன.

    எனவே தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் வழங்காமல் அரசு பணியாளர் தேர்வாணையமே இதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPSC
    கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBSC #GroupIV
    சென்னை:

    கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான முடிவுகளை படிப்படியாக விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி, தேர்வாணையத்தின் புது முயற்சியாக, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் நிலுவையில் உள்ள போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடும் உத்தேச கால அட்டவணையை தேர்வாணையம் அதன் இணையதளத்தில் கடந்த 4-ந்தேதி வெளியிட்டது.

    மேற்படி தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை, விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வாணையம் அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் 14-ந்தேதி 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று அரசு தேர்வாணையத்தின் உத்தேச கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் 85 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்பட்டது. அதன் முடிவு வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.

    மேலும் சில தேர்வு முடிவுகள் வெளியிடும் மாதம் உத்தேசமாக வெளியிடப்பட்டு உள்ளன.  #TNBSC #GroupIV #tamilnews
    ×