search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எல்.தேனப்பன்"

    ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியிருக்கிறார். #AlaudhininArputhaCamera
    ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து நவீன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

    ஆனந்தி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார். முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.


    பட வேலைகள் முடிந்து புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் தனது ஸ்ரீ ராஜலெட்சுமி பிலிம்ஸ் மூலம் கைப்பற்றியுள்ளார்.

    ஏப்ரல் 19-ந் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தில் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய்யை வைத்து அக்னிச் சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். #AlaudhininArputhaCamera #Naveen #KayalAnandhi

    மன்மதன், வல்லவன் படத்தின் ரீமேக் உரிமை விவகாரம் குறித்து டி.ராஜேந்தர் நேற்று புகார் அளித்த நிலையில், சிம்பு ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தயாரிப்பாளர் தேனப்பன் புகார் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan
    நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘என் மகன் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய 2 படங்களின் டப்பிங், ரீமேக் உரிமையும் என்னிடம் உள்ளது.

    ஆனால் அதை விற்க தயாரிப்பாளர் பிஎல். தேனப்பன் முட்டுக்கட்டை போடுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்து தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்தின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை என் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.

    அந்த உரிமையை எஸ்.என் மீடியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டேன். இன்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த உரிமைகள் தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த உரிமையை வாங்கியவர்கள், விற்றவர்கள் மீது பழி சுமத்தும் விதமாக பேசியுள்ளார்.



    நான் வல்லவன் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவரது ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றும் மீள முடியாமல் தவித்து வருகிறேன். என்னை போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிப்பது திரையுகத்துக்கே தெரியும்.

    இந்நிலையில் என்னையும் எனது 35 ஆண்டுகால திரையுல அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan

    தயாரிப்பாளர்களை விமர்சித்து ட்விட் பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார். #SanthoshSivan #Producers
    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

    சந்தோஷ் சிவனின் சமீபத்திய ட்விட் பதிவு தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டை மீம்ஸ் வடிவில் பதிவிட்டிருக்கிறார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளதோடு நடிகைகளின் சம்பளத்தை சந்தோ‌ஷமாக கொடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுகடுவென கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.



    இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். தயாரிப்பாளர் சங்கம் வரை இந்த பிரச்சினை சென்றது.

    தயாரிப்பாளர் தேனப்பன் இதுபற்றி கூறும்போது ‘‘எனக்கு இப்படியொரு மீம்சை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால், திரையில் பி.சி.ஸ்ரீராமுக்கு பிறகு, வியந்து ரசிக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் இப்படியொரு மீம்சை வெளியிட்டாரா என்று ஆதங்கப்பட்டேன்.

    அவர், அதிகமாக மணிரத்னம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் எந்த மொழியைச் சேர்ந்த தயாரிப்பாளரை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் இருந்தது.

    யாரைச் சொல்லியிருந்தாலும் தயாரிப்பாளரை சொல்லி இருக்கிறாரே என்று எண்ணி வருத்தப்பட்டேன். இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்பதைவிட சந்தோஷ் சிவனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் பேசினேன். ‘’நான் எந்தப் போஸ்டையும் போடவில்லை. ரீ ட்விட் மட்டுமே செய்தேன். என்ன வென்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள். உடனே நீக்கிவிடுகிறேன்’’என்று சொன்னார். அவருடைய பதில் என்னை ஆறுதல் படுத்தியது’’ என்று தெரிவித்தார்.



    ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நேற்று தனது சர்ச்சைக்குரிய ட்விட்டை நீக்கி உள்ளார். தனது ட்விட்டை நீக்கிய அவர், ‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன். நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார். #SanthoshSivan #Producers

    ×