என் மலர்
நீங்கள் தேடியது "ராதிகா ஆப்தே"
- ராதிகா ஆப்தே ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். ஆனால் தற்போது 10.15 மணியைக் கடந்தும் விமானம் இன்னும் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர்.
பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்துள்ளனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், விமான நிலையம் தொடர்பான எந்த ஒரு விவரத்தையும் அவர் தனது பதிவில் குறிப்பிடவில்லை.
- பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுபவர் ராதிகா
- நடிகர்கள் திடீரென மூட் சரியில்லை என சென்று விடுவார்கள் என்றார் ராதிகா
மராத்தி, தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் 38 வயதான ராதிகா ஆப்தே (Radhika Apte).
ராதிகா, வேலூரில் பிறந்தவர். ராதிகாவின் பெற்றோர் வேலூர், கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றியவர்கள்.
திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு எதிராக தயங்காமல் குரல் கொடுத்து வருபவர், ராதிகா ஆப்தே.
திரைத்துறையில் தனது போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ராதிகா தெரிவித்ததாவது:
பல மொழி திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், நான் மிகவும் போராட வேண்டி இருந்தது "டோலிவுட்" (Tollywood) எனப்படும் தெலுங்கு திரைப்பட உலகம்.
அதிக ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறை தெலுங்கு படத்துறைதான்.
பெண்களை அவர்கள் நடத்தும் விதம் சிறிதும் சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு அதில் வழங்கப்படும் பாத்திர படைப்புகளும் படத்தில் பங்கு பெறும் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு பிடிக்காது.
படப்பிடிப்பு தளங்களில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். நடிகர்கள் திடீரென "மூட்" சரியில்லை என கூறி சென்று விடுவார்கள். ஆனால், படக்குழுவினர் நடிகர்களை எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் தொடர்ந்து அங்கு பிரச்சனைகளை அனுபவித்தேன். இறுதியில், எனக்கு டோலிவுட் ஒத்து வராது என உணர்ந்து, தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

2016ல் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "கபாலி", திரைப்படத்தில் "குமுதவல்லி" எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து விமர்சகர்களை ஈர்த்தவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.
- லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- கருவுற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார்.
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சிஸ்ட்ர் மிட்நைட்' திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கருவுற்று இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கருவுற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருப்பதை அடுத்து ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிஸ்டர் மிட்நைட் யு.கே. பிரீமியர்" என்று மட்டும் குறிப்பிட்டு நிகழ்வில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளார். தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராதிகா ஆப்தே, பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- 12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தே, கடந்த அக்டோபர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் தமிழை விட அதிகமான படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார்.
மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர். துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
சர்ச்சை நடிகையான ராதிகா ஆப்தே, பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தே, கடந்த அக்டோபர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குழந்தையின் பாலினத்தை ராதிகா ஆப்தே வெளியிடவில்லை. ஆனால் அவரது நண்பர் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த வெப் தொடரை தர்மராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
- டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகளாக காதலித்து வந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாக்களில் கழுத்தில் தாலியுடன் வலம் வந்தார்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நெட்பிளிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள இந்த தொடருக்கு 'அக்கா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரை தர்மராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
இத்தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த 'அக்கா' டீசரில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்








