என் மலர்
நீங்கள் தேடியது ""
லக்னோ:
உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ஷகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்குகளை கடைப்பிடித்தார்கள். இதனால்தான் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தது.
அவர்கள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவரான சாமிபிட்ராடோ இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக கூடுதல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் வெறுப்பாக பார்க்க கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இது போன்ற நபர்களால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்படுகிறது. பொறுப்பற்ற முறையில் அவருடைய நடவடிக்கை உள்ளது. அவர் பயங்கரவாதி மவுத் அசாரை பாகிஸ்தானில் வைத்து சந்தித்து உள்ளார். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நபராக சாம்பிட்ராடோ திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறினார். #LSPolls #YogiAdityanath