என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கப்பல்"
- இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என உத்தரவு.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதேபோன்று இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறை முகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது.
இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ந்தேதி, ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளை ‘எல்டாய்’ புயல் தாக்கியது. இதனால், ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன.
மொசாம்பிக் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா தனது 3 கடற்படை கப்பல்களை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பி வைத்துள் ளது. அக்கப்பல்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 200 பேரை மீட்டுள்ளன. இந்திய கடற்படை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண பொருட்களுடன் மற்றொரு கப்பலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.