search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக"

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் காணப்பட்ட விபரம் என்று எடியூரப்பாவின் கையொப்பத்துடன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள இந்த டைரியின் சில பக்கங்களின் நகல்களில் எடியூரப்பா லஞ்சமாக சம்பாதித்த பணத்தில் இருந்து சுமார் 1800 கோடி ரூபாய் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ’கடந்த 2017-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.  லஞ்சப்பணம் பங்குபோடும் விவகாரம் தொடர்பாக சில தலைவர்கள் எடியூரப்பாவுடன் நடத்திய உரையாடல்களையும் அவர் படித்துக் காட்டினார்.

    இந்த லஞ்சப்பணத்தை பாஜக தலைவர்கள் வாங்கினார்களா?, இல்லையா? என்பதை பிரதமர் மோடி உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆதாரத்தில் தகுந்த முகாந்திரம் இருப்பதால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரிடமும் புதிதாக நியமிக்கப்பட்ட லோக்பால் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    கர்நாடக மாநிலம் கலபுர்கியில் வருகிற 18-ந் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். #RahulGandhi
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கலபுர்கிக்கு வருகிற 18-ந் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிறார். அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அன்று மாலை அங்கு நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ராகுல்காந்தி முன்னிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகிய பலர், காங்கிரசில் இணைகின்றனர்.

    அதே நாளில் பெங்களூருவில் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். #RahulGandhi
    கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழா, பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கும் இடமாக அமைந்துள்ளது. #Karnataka #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்க உள்ள குமாரசாமி, அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை அழைத்து வருகிறார். அவரது அழைப்பை ஏற்று பல்வேறு கட்சித் தலைவர்கள் 23-ந்தேதி பெங்களூரில் ஒன்று கூட உள்ளனர்.

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகிய 4 முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் போனில் பேசிய குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின் 23-ந்தேதி பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ளன. அந்த 11 கட்சிகளையும் நாளை மறுநாள் ஒரே இடத்தில் திரள செய்யும் முயற்சிகளை குமாரசாமி எடுத்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றன. பதவியேற்பு விழா முடிந்ததும் 4 மாநில முதல்-மந்திரிகள், 11 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு குமாரசாமி விருந்து அளிக்க உள்ளார்.

    இதன் காரணமாக குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழா பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாகவும் மாறியுள்ளது. 23-ந்தேதி பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பேச திட்டமிடப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் 23-ந்தேதி நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில கட்சிகளை தனது அணியில் இடம்பெற செய்ய காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் சில மாநில கட்சிகள் தொடர்ந்து காங்கிரசை எதிர்த்தப்படி உள்ளன.


    பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க அந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் இருவரும் மூன்றாவது அணி திட்டத்தை முன்னெடுத்து சென்றபடி உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு, சரத் பவார் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் 3-வது அணிக்குள் இழுக்க அவர்கள் பேசியபடி உள்ளனர். இந்த நிலையில் பெங்களுரில் ஒன்று சேரும் 11 எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஓரணியில் திரட்ட சிலர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு எதிரான இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால் அது தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடுவதாக இருக்கும். #Karnataka #Kumarasamy
    ×