search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குணேஸ்வரன்"

    தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் குணேஸ்வரன் மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #MiamiOpen
    மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. மியாமி டென்னிஸ் தொடருக்கான தரநிலை பெறாத வீரர்கள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதன் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேற வேண்டும்.

    இந்தியாவைச் சேர்ந்த தமிழக வீரர் குணேஸ்வரன் முதல் இரண்டு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய் கிளார்க்கை எதிர்கொண்டார். இதில் குணேஸ்வரன் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ஜாமி முனாரை நாளை எதிர்கொள்கிறார்.
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். #PrajneshGunneswaran #ATPRanking
    பாரிஸ்:

    உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென் னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4 இடங்கள் முன்னேறி 2-வது முறையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் சரிவை சந்தித்து 7-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 3 இடம் சறுக்கி 8-வது இடத்தையும் பெற்றனர். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 9-வது இடத்திலும், கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 84-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். முழங்காலில் காயம் அடைந்து தேறி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் சரிந்து 207-வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக யுகி பாம்ப்ரி டாப்-200 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் 139-வது இடத்தையும், சகெத் மைனெனி 251-வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 268-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 2 இடம் முன்னேறி 94-வது இடத்தையும், ரோகன் போபண்ணா 36-வது இடத்தையும், திவிஜ் சரண் 41-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தையும், இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 2 இடம் சறுக்கி 7-வது இடத்தையும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சபலெங்கா (பெலாரஸ்) 9-வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 36 இடம் உயர்வு கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 3 இடம் முன்னேறி 20-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 2 இடம் சரிந்து 168-வது இடத்தையும், கர்மான் தாண்டி 7 இடங்கள் முன்னேறி 203-வது இடத்தையும் தனதாக்கினார்கள்.  #PrajneshGunneswaran #ATPRanking 
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார். #AustralianOpen #Gunasekaran
    மெல்போர்ன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்கள் அங்கு தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் தகுதி சுற்றின் 3-வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் யோசுக் வாடானுகியை நேற்று எதிர்கொண்டார். இதில் குணேஸ்வரன் 6-7 (5), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாட தகுதி பெற்ற 3-வது இந்தியர் குணேஸ்வரன் ஆவார். ஏற்கனவே சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் ஆடியிருக்கிறார்கள்.

    முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பிரதான சுற்றை எட்டியதால் மகிழ்ச்சியில் திளைக்கும் சென்னையைச் சேர்ந்த 29 வயதான குணேஸ்வரன் அடுத்து ஆஸ்திரேலிய ஓபனில், முதலாவது சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவுடன் மோத இருக்கிறார்.

    தகுதி சுற்றில் மூன்று ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த குணேஸ்வரன் பிரதான சுற்றுக்கும் வந்து விட்டதால் குறைந்தது அவருக்கு ரூ.38 லட்சம் பரிசு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.#AustralianOpen #Gunasekaran
    ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட்:

    ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 75-ம் நிலை வீரர் குடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 1 மணி 29 நிமிடங்கள் போராடிய தரவரிசையில் 169-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதில் குணேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தால் கால்இறுதியில் ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) மோதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கும். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 23-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட்:

    ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 169-வது இடம் வகிப்பவரும், தகுதி நிலை வீரருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 23-ம் நிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) எதிர்கொண்டார். 1 மணி 48 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 7-6 (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

    2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவை விரட்டினார். #StuttgartOpen
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் தகுதி சுற்றில் விளையாடி வந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) சந்தித்தார். இதில் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்று நாளை தொடங்குகிறது. #Gunneswaran #FrenchOpen2018
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) இன்று சந்திக்கிறார். இதில் குணேஸ்ரன் வெற்றி பெற்றால் பிரதான சுற்றை எட்டுவார். 
    ×