search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைத்ரேயா"

    கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. #PariyerumPerumal
    ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.

    இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)

    இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.



    இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். 

    விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது. 
    என்னிடம் சொன்ன கதையை வேறு நடிகரை வைத்து இயக்கி வரும் மிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து ஏமாந்துவிட்டதாக இளம் நடிகர் மைத்ரேயா புகார் தெரிவித்துள்ளார். #Mysskin #Maithreya
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    மைத்ரேயாவின் மனுவை ஏற்று கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்ரேயா அளித்த பேட்டியில் ’மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது சத்தியம் செய்தார். இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்கிறார்.



    எங்கள் படத்துக்காக அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசி, ஒரு கோடி ரூபாயை அட்வான்சாக கொடுத்தோம். பலமுறை பேச முயற்சித்தோம். அவர் முன்வரவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சங்கம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

    எனவே கோர்ட்டுக்கு சென்றேன். விஷால் எனக்கு உதவுவதாக கூறியுள்ளார். நான் அடுத்து ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார். #Mysskin #Maithreya

    பல வெற்றி படங்களை கொடுத்த மிஷ்கினுக்கு, கிரைம் திரில்லர் படங்களை எடுக்க உயர்நீதி மன்றம் விதித்துள்ளது. #Mysskin #CrimeThriller
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரைம் திரில்லர் படங்களை எடுக்க மிஷ்கினுக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

    பிரபல தயாரிப்பாளர் ரகுநந்தனின் மகன் ஷாம் என்னும் மைத்ரேயாவை வைத்து இயக்குனர் மிஷ்கின் கிரைம் திரில்லர் படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகுநந்தனிடம் முன்பணம் பெற்றிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஆனால், படம் எடுக்காமல் தள்ளிப்போட்டதாலும், தன்னை வைத்து எடுக்க இருந்த கதையை வேறொரு நடிகரை வைத்து எடுப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரகுநந்தன்.

    இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிரைம் திரில்லர் திரைப்படங்கள் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரகுநந்தன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாருக்கு பதிலளிக்க மிஷ்கினுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 
    சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது என்றும் இயக்குனர் மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் புதுமுக நடிகர் மைத்ரேயா புகார் கூறியுள்ளார்.
    பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

    இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


    ×