என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 119904
நீங்கள் தேடியது "பப்பி"
பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா, பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #MaheshSharma #PriyankaGandhi #Puppy
நொய்டா:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதா கட்சியினர் ‘பப்பு’ என்று கேலியாக கூறுவது வழக்கம். இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா உத்தரபிரதேச மாநிலத்தில் தனது தொகுதியில் உள்ள சிகந்தராபாத் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “தான் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று பப்பு கூறுகிறார்.
மாயாவதி, அகிலேஷ் யாதவ், பப்பு.... இப்போது பப்புவின் பப்பியும் (பிரியங்கா) வந்திருக்கிறார். பிரியங்கா தேசத்தின் மகள் அல்ல, காங்கிரசின் மகள். அவர் என்ன புதிதாக கொண்டுவரப்போகிறார்? எதிர்காலத்தில் அவர் அரசியலில் நீடிக்கமாட்டார்” என்று கூறினார். அதோடு மம்தா பானர்ஜி, குமாரசாமி ஆகியோரையும் அவர் கேலி செய்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் இணை பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார், “இதெல்லாம் அவரது எண்ணத்தில் இருப்பதால் தான் வார்த்தைகளாக வந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் ஒரு பெண் மீது இப்படிப்பட்ட வார்த்தையை கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார். #MaheshSharma #PriyankaGandhi #Puppy
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதா கட்சியினர் ‘பப்பு’ என்று கேலியாக கூறுவது வழக்கம். இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா உத்தரபிரதேச மாநிலத்தில் தனது தொகுதியில் உள்ள சிகந்தராபாத் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “தான் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று பப்பு கூறுகிறார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் இணை பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார், “இதெல்லாம் அவரது எண்ணத்தில் இருப்பதால் தான் வார்த்தைகளாக வந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் ஒரு பெண் மீது இப்படிப்பட்ட வார்த்தையை கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார். #MaheshSharma #PriyankaGandhi #Puppy
×

X