search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெப்ராஸ்கா"

    அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா, விஸ்கொன்சின், மிசூரி, மினசோட்டா மற்றும் தெற்கு டகோட்டாவில் பனிக்காலத்துக்கு பிந்தைய திடீர் புயலால் பேய் மழை கொட்டி தீர்த்தது. அத்துடன் உறைபனியும் உருகியதால் மேற்கூறிய மாகாணங்களில் உள்ள ஆறுகள், சிற்றோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சாலைகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தகவல் தொடர்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. ஆறு மற்றும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருப்பதால் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், நெப்ராஸ்கா, விஸ்கொன்சின் மற்றும் தெற்கு டகோட்டாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 
    ×