search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோதினி"

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 96 படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. 

    சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.



    1992-ல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் சேரன் ஆட்டோகிராப் படத்தை 96 படத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். #96TheMovie
    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 90-களில் பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படக்குழுவை பாராட்டி உள்ளார்.

    முன்னதாக 96 படத்தையும், சேரனின் ஆட்ரோகிராப் படத்தையும் ஒப்பிட்டு சிலர் பேசினர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

    விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும். #96TheMovie #Cheran

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் விமர்சனம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha
    எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.

    விஜய் சேதுபதி (ராம்) ஒரு டிராவல் போட்டோகிராபர். அழகாக செல்லும் அவர் வாழ்க்கையில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக தான் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு செல்கிறார். பள்ளிகால நண்பர்களுடன் பேசுகிறார். மீண்டும் சந்திக்க திட்டம் போடுகின்றனர். 96 ரீயூனியன் இணைகிறது. அங்கே விஜய் சேதுபதி பள்ளிகாலத்தில் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த திரிஷாவும் (ஜானு) வருகிறார்.



    அந்த ஒரு நாள் இரவு விஜய் சேதுபதி - திரிஷா வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இருவரும் தங்களது காதலை எவ்வாறு நினைவுகூர்ந்தார்கள்? என ஒட்டுமொத்த படமும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.

    விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட விஜய்சேதுபதியாக தெரியவில்லை. கூச்சம், வெட்கம், நளினம் ஆங்காங்கே தனது பாணி நக்கல் வசனங்கள் என்று படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார். போலீசாகவும், தாதாவாகவும் பார்த்த விஜய்சேதுபதியா இது? என தோன்ற வைக்கிறது.



    திரிஷா அறிமுகமான முதல் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார். தன்னை பார்க்க வந்த ராமை தவறவிட்டதை நினைத்து, அவர் அழும் அந்த ஒரு காட்சி போதும். தமிழ் சினிமாவில் காதலிக்கவும், காதலிக்க வைக்கவும் திரிஷாவுக்கு நிகர் அவரே.

    தற்போதைய ராம், ஜானுவுக்கு போட்டியாக நடித்திருக்கிறார்கள், ஆதித்யா பாஸ்கரும், கவுரி கி‌ஷனும். சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு தான். 

    நாத்தனாரே என்று திரிஷாவை கிண்டலடிக்கும் போதும், விஜய் சேதுபதியும், திரிஷாவும் எல்லை மீறிவிடுவார்களோ என்று பயப்படும்போதும் தேவதர்ஷினி பின்னி எடுக்கிறார். பகவதி பெருமாள், ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள்.



    விஜய்சேதுபதி போட்டோ எடுக்கும் அழகான காட்சியமைப்புடன் படம் தொடங்குகிறது. அவர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழையும்போது நாமும் நமது பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழைகிறோம். நீண்டகாலம் கழித்து கை பிடித்து இளவயது நினைவுகளுக்கு கூட்டி சென்றிருக்கும் பிரேமுக்கு நன்றிகள்.

    ஒரு சின்ன தவறுதலில் காதல் மீண்டும் கைகூடாமல் போவதும், தன்னை வெறுத்த காதலியின் பின்னாலேயே அவருக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு தொடர்வதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய தருணங்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்க்கையுடன் இணைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.



    படம் முடியும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். அந்த கைதட்டலில் ஒவ்வொருவரின் கைகூடாத பள்ளிப்பருவ காதல் ஒளிந்திருக்கிறது.

    படத்தில் காதலை கூட்டுவது மகேந்திரன், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவுதான். ஒலிப்பதிவும் அதற்கு துணை நிற்கிறது. கோவிந்தின் இசை காதலை இசையால் சொல்கிறது. இசையால் காதலை கண்முன் நிறுத்தியிருக்கிறார். கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `96' காவியம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி - திரிஷா காதலர்களாக நடித்திருக்கும் இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. 

    பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் 96 படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காலை காட்சிகள் ரத்தானதால் திரையரங்கில் கூடிய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்தடுத்த காட்சிகள் தடைபடாதவாறு தயாரிப்பாளர் தரப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 



    சி.பிரேம்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    கோவிந்த் மேனன் இசையில் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் முன்னோட்டம். #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேதா, உமாதேவி, கார்த்திக் நேத்தா. தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.

    இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி பிரேம்குமார் கூறும் போது, 



    படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்துவிட்டது. விஜய்சேதுபதி இந்த படத்தில் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார். 

    7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார். படம் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #96TheMovie #VijaySethupathi #Trisha

    விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய திரிஷா, பேட்ட படத்தில் ரஜினிக்கு போட்டியாக தனது தோற்றத்தை இளமையாக்கி கொண்டதாக திரிஷா கூறினார். #Trisha #96TheMovie
    திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். நந்தகோபால் தயாரித்துள்ளார். படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நடந்தது.

    அதில் விஜய் சேதுபதி, திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு திரிஷா அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து இருக்கிறீர்கள். அவருடைய படங்களை பார்த்து இருக்கிறீர்களா?

    பதில்:- ‘விக்ரம் வேதா’ படத்தை இரண்டு முறை பார்த்து இருக்கிறேன்.

    கேள்வி:- சொந்த வாழ்க்கையில் காதல் அனுபவம் இருக்கிறதா?

    பதில்:- இதுவரை எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை. என்றாலும், எனக்கு காதல் படங்கள் ரொம்ப பிடிக்கும்.

    கேள்வி:- ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

    பதில்:- சந்தோஷமாக இருந்தது. அவர் படத்துக்கு படம் இளைஞர் ஆகிக்கொண்டே போகிறார். அவருக்கு போட்டியாக நானும் என் தோற்றத்தை இளமையாக்கி கொண்டேன். முன்பை விட, என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன்.

    கேள்வி:- அவருடன் நடித்தபோது உங்களுக்கு ‘ஜூனியர்-சீனியர்’ என்ற வித்தியாசம் தெரியவில்லையா?

    பதில்:- எனக்கும் சரி, அவருக்கும் சரி, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் கதாபாத்திரங்களாக இருந்தோம். நடிப்பில், அவருடன் போட்டி போட முடியாது. ஒரே டேக்கில் நடித்து விட்டு போய் விடுகிறார். அவருக்கு சமமாக நடிப்பது, சிரமமாக இருந்தது.



    கேள்வி:- ரஜினிகாந்துடன் நடிப்பதை ஒரு லட்சியமாக வைத்து இருந்தீர்கள். அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அடுத்து...?

    பதில்:- இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைக்கிறேன்.

    கேள்வி:- சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. சந்தோஷமாக இருக்கிறது.

    கேள்வி:- அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா?

    பதில்:- அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

    கேள்வி:- யாருடைய வேடத்தில் நடிக்க ஆசை?

    பதில்:- ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை. ஆனால், அவருடைய வேடத்தில் வேறு யாரோ நடிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.”

    இவ்வாறு திரிஷா பதில் அளித்தார். #Trisha #96TheMovie

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் முன்னோட்டம். #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா. தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார். 

    இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். படம் பற்றி பிரேம் குமார் கூறும் போது, 



    படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார். 

    படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.லலித்குமார் வெளியிடுகிறார். #96TheMovie #VijaySethupathi #Trisha

    ‘மணல் கயிறு’, ‘வண்ண வண்ண பூக்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை வினோதினி தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார். #Vinodhini
    நடிகை வினோதினி. ‘வண்ண வண்ண பூக்கள்’ உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    சினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்?”

    “கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், பொறுப்பான அம்மாவா இருக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதனால்தான் நடிக்க வேண்டாம்னு முடிவுபண்ணினேன்.

    நடிச்சே ஆகணும் என்கிற சூழ்நிலை எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என்னைத் தேடிவந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி குறிப்பிட்ட காலம் நடிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தேன். இப்போதான் மறுபடியும் நடிக்க முடிவெடுத்திருக்கேன். அடுத்த வரு‌ஷத்திலிருந்து நடிக்க முடிவு செய்திருக்கேன்.

    உங்க சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?”

    “என் அம்மா, டிராமா ஆர்டிஸ்ட். அதனால், சினிமா துறையினர் பலருக்கும் என்னைப் பற்றி தெரியும். நாலரை வயசுல குழந்தை நட்சத்திரமா ஆரம்பிச்சது. ‘மணல் கயிறு’, ‘புதிய சகாப்தம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடிச்சேன். சில வருட இடைவெளிக்குப் பிறகு, ‘ஆத்தா உன் கோயிலிலே’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தேன். பாலுமகேந்திரா சாரின், ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ஹீரோயினா நடிச்சது நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு. தொடர்ந்து, கன்னடத்தில் பிஸியாகிட்டேன். ‘உனக்காக எல்லாம் உனக்காக’ உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன்.”



    எனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும். அதனால், மத்தவங்களை தொந்தரவு செய்யாமல் நானே செய்துக்க நினைச்சேன். அப்போ சோஷியல் மீடியா கிடையாது. அதனால், சமையல் புக், தெரிஞ்சவங்க சொல்ற டிப்ஸ் எனத் தேடி தேடி கத்துப்பேன். சீரியல்களில் நடிச்சுட்டிருந்தப்போ, ஷூட்டிங் ஸ்பாட்ல சக ஆர்டிஸ்டுகளோடு சேர்ந்து சமைப்பேன். ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். இப்போ, என் குழந்தைகள் மற்றும் கணவருக்குப் பிடிச்ச உணவுகளை சமைச்சு கொடுக்கிறேன். அவங்க ரசிச்சு சாப்பிடுறதைப் பார்த்து சந்தோ‌ஷப்படறேன். #Vinodhini

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்திருக்கும் `96' படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘96’.

    `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கோவிந்த் மேனன் இசையில் சமீபத்தில் வெளியாகிய `காதலே காதலே' பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #96TheMovie #VijaySethupathi #Trisha

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்திருக்கும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

    `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #96TheMovie #VijaySethupathi #Trisha

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் 96 படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்திருக்கும் நிலையில், த்ரிஷாவின் வெற்றியின் ரகசியம் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். #96TheMovie #VijaySethupathi
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

    `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடிக்கிறார். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், திரிஷாவுடன் பணிபுரிந்தது பற்றி விஜய் சேதுபதி கூறும்போது, 

    ‘திரிஷா நடிப்பை மிகவும் நேசிக்கிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அதை உணர்ந்து நடிப்பவர். அவரிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது இல்லை. முதல் ஆளாக ஒப்பனையுடன் கேமரா முன்பு நிற்பார். இந்த தொழில் பக்தி தான் அவரை 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வைத்து இருக்கிறது’ என்று பாராட்டி உள்ளார். #96TheMovie #VijaySethupathi #Trisha

    ×