என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவனா"

    • மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் நெற்று வெளியானது.

    இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாவனா தனியாக ஒரு அறையில் இருக்கிறார். அமானுஷ்யமான ஒரு உணர்வு மற்றும் உருவம் தெரிகிறது.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். படத்தின் டீசரை படக்குழு சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகை பாவனா தற்போது 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


    பாவனா

    இந்நிலையில் வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து பாவனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ''மலையாள திரையுலகில் மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று நினைத்தேன். அப்படி வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள்.


    பாவனா

    இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் பரவி வருகின்றன. வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது. பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன்" என்றார்.

    • அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு 'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.
    • இவரின் 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.


    பாவனா 86

    பாவனா 86

    இந்நிலையில் நடிகை பாவானாவின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.
    • இவர் நடிக்கவுள்ள 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.


    தி டோர்

    தி டோர்

    இந்நிலையில் நடிகை பாவானா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தி டோர் (The Door)' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய்தேவ் இயக்குகிறார். இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், நடிகர் அஜித் நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டார். அதாவது, அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாவனா வர.. அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    அஜித்- பாவனா 'அசல்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    ஷஷாங்க் இயக்கத்தில் சுதீப் - பாவனா, பருல் யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு கைதி' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav
    போலீஸ் அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தியையும், மருத்துவரான நாசரையும் கொலை செய்துவிட்டு, ரவிசங்கரை கொலை செய்வதற்காக போகும் போது, கிச்சா சுதீப்பை போலீசார் கைது செய்கிறார்கள். இந்த கொலை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கிறார் ஜெகபதி பாபு.

    கொலை குறித்து ஜெயகதி பாபுவின் விசாரணையில் சுதீப் கூறும் போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தானும் தனது குடும்ப நண்பரும், உதவியாளருமான பருல் யாதவ்வும் காதலித்ததாகவும் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஆசிஷ் வித்யார்த்தியும், நாசரும் தனது வாழ்க்கையில் வந்து, தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் விவரிக்கிறார்.



    கடைசியில், ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் நாசரை சுதீப் கொலை செய்ததற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட முன்கதை என்ன? என்பதே சுதீப் எனும் கைதியின் மீதிக்கதை.

    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தனது வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறைவான நேரங்கள் மட்டுமே வந்தாலும் பாவனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதையோடு ஒன்றி தனது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் பருல் யாதவ். ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், ஜெகபதி பாபு என அனைவருமே அனுபவ நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.



    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப் நடித்த கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். தற்போதைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு த்ரில்லர் படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கும் வேளையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த த்ரில் கதையை தற்போது பார்க்கும் போது ஒருவித நெருடலை கொடுக்கிறது. எனினும் வித்தியாசமான கதை என்பதால் பார்ப்பதில் தவறில்லை.



    ஷஷாங்க் இயக்கம், வி.ஹரிகிருஷ்ணாவின் இசை, ஷேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, ரவி வர்மாவின் படத்தொகுப்பு என படக்குழுவினரின் வேலைகள் கச்சிதம்.

    மொத்தத்தில் `இருட்டு அறையில் முரட்டு கைதி' பார்க்கலாம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் பாவனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #96TheMovie #Trisha #Bhavana
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வெளியாகி ஒரு மாதத்தில் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போதும் திரையரங்கில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு நல்ல போட்டி இருந்தது.

    படத்தை தெலுங்கி ரீமேக் செய்யும் பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது.



    கன்னட இயக்குநர் பிரீதம் குபியும், நடிகர் கணேஷும் இணைந்து கன்னடத்தில் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ‘99’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க பாவனா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். #96TheMovie #VijaySethupathi #Trisha #Bhavana

    துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவை நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா காதல் திருமணம் செய்ய இருக்கிறார். #Arya #Sathya #Bhavana
    தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன் இவன்,’ ‘மதராசபட்டினம்,’ ‘இரண்டாம் உலகம்,’ ‘வேட்டை’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருடைய தம்பி ஷாகிர், ‘சத்யா’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, ‘புத்தகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘அமரகாவியம்’ படத்தில், கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்தார். அடுத்து, ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’ ஆகிய படங்களில், சத்யா நடித்தார்.

    இந்த நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து சத்யாவுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. 

    ×