search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுமினி"

    இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன்களாக டு பிளிசிஸ், டுமினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி 22-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதியும் நடக்கிறது.

    முதல் போட்டிக்கு டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டுமினி கடைசி போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரைத் தொடர்ந்து டுமினியும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #JPDumini #2019WorldCup
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெய்ல். இவர் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் உலகக்கோப்பையோடு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேபி டுமினியும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
    இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    4-வது போட்டி வருகிற 13-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனிலும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் மார்கிராம், கடந்த நவம்பர் மாத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெறாமல் இருந்தார்.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேபி டுமினியும், மூத்த வீரருமான அம்லாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. குயின்டான் டி காக் (விக்கெட்), 4. ஜேபி டுமினி, 5. இம்ரான் தாஹிர், 6. மார்கிராம், 7. டேவிட் மில்லர், 8. லுங்கி நிகிடி, 9. அன்ரிச் நோர்ட்ஜி, 10. பெலுக்வாயோ, 11. பிரிட்டோரியஸ், 12. ரபாடா, 13. ஷமிசி, 14. டேல் ஸ்டெயின், 15. வான் டெர் டஸ்சன்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டுமினிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. #AUSvSA
    தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 11-ந்தேதியும் நடக்கிறது. அதன்பிடி டி20 கிரிக்கெட் நவம்பர் 17-ந்தேதி நடக்கிறது.

    இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசிம் அம்லா ஏற்கனவே பங்கேற்கமாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது டுமினிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.
    ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது டு பிளிசிஸ் டுமினியை டாஸ் சுண்டச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார். #SAvZIM
    தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி கடந்த 9-ந்தேதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. பொதுவாக கிரிக்கெட் போட்டியின்போது போட்டியை நடத்தும் அணியின் கேப்டன் டாஸ் சுண்ட, வெளிநாட்டு அணி கேப்டன் ஹெட் அல்லது டெய்ல் என டாஸ் கேட்பார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருக்கும் டு பிளிசிஸ் கடந்த ஆறு போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், மாறுதலுக்காக ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத டுமினியை டாஸ் சுண்ட அழைத்தார். டுமினி டாஸ் சுண்ட ஜிம்பாப்வே அணி கேப்டன் என்ன விழ வேண்டும் என்ற விருப்பதை தெரிவித்தார்.

    இதில் டு பிளிசிஸ் டாஸ் வென்றார். பொதுவாக ஐசிசி போட்டி நடுவர் பார்வையில் டாஸ் சுண்டப்படும். கேப்டன் வரமுடியாத நிலை ஏற்பட்டால் துணைக் கேப்டன் டாஸ் சுண்டலாம்.

    ஆனால் டு பிளிசிஸ் டுமியை வைத்து டாஸ் சுண்ட வைத்தார். இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நான் என்ன செய்தனோ, அதை விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் சில சுவராஸ்யமான வேடிக்கைகள் நிகழ வேண்டும். அது இங்கே இருந்து தொடங்கியுள்ளது’’ என்றார்.
    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டுமினி, டு பிளிசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை ரபாடா (4) மற்றும் ஷம்சி (4) ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த மார்கிராம் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து டி காக் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 117 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டி காக் 59 பந்தில் பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    டு பிளிசிஸ் 56 பந்தில் 10 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
    ×