என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் தேவரகொண்டா"

    • விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது.

    விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ஹ்ருதயம் லோபலா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளில் அனிருத் மற்றும் அனுமிதா நடேசன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது
    • சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர்.

    நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார்,சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர்.

    விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, காஷ்மீர் பகல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களை போன்றது என பேசினார். இதற்கு தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இவரது பேச்சு பழங்குடியின மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது. அவர் பழங்குடியின மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.

    மேலும் ஐதராபாத்தை சேர்ந்த லால் சவுகான் என்பவர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் செய்தார்.

    இது சம்பந்தமாக கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

    நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

    நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

    2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் மூலமே விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    2015 ஆம் ஆண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் நானி, மாளவிகா நாயர், விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது எவடே சுப்ரமண்யம்? திரைப்படம். இப்படத்தின் மூலமே விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 18 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை வரும் மார்ச் - 21 ஆம் தேதி படக்குழு ரீரிலீஸ் செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் எவடே சுப்ரமண்யம் படத்தில் நடித்த அனைவரும் ஒன்றுக்கூடி 10 வருட நிறைவை கொண்டாடினர். அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் நானி இருவருக்கும் இடையே உள்ள அந்த நட்பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. விஜய் இப்படத்தில் நடித்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

     

    10 வருடங்களுக்கு பிறகு திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    இப்படம் தமிழில் டப் செய்ப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் யார் இந்த மணி? என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் டிராக்கை அனிருத் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியிடவுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • இப்படம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா நேற்று விசாரணைக்கு ஆஜாரானார்.

    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் திரைப்படம் தோல்வி அடைந்தது.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசானது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்திருந்தார். லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    விசாரணைக்குப் பின் வெளியே வந்த விஜய் தேவரகொண்டா கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
    • விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றது தவறா? என்று நடிகை ராஷ்மிகா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர். நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அவருடன் மாலத்தீவுக்கு சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு.

    வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என்றார்.

    • சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இதையடுத்து சமந்தா ‘குஷி’ திரைப்படத்தில் மீண்டும் இணையவுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.


    சமந்தா

    இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.


    சமந்தா

    இந்நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


    • நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமந்தா பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.


    விஜய் தேவரகொண்டா - சமந்தா

    இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

    நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


    விஜய் தேவரகொண்டா - சமந்தா

    இந்நிலையில், இந்த பதிவை பகிர்ந்து விஜய் தேவரகொண்டா, "முழு ஆரோக்கியத்துடனும் பெரிய புன்னகையுடனும் நீங்கள் வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


     



    இந்நிலையில் குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • 'குஷி' திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
    • விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பரசுராமுடன் இணைந்துள்ளார்.

    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்' பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார்.


    பரசுராம் -விஜய் தேவரகொண்டா -தில்ராஜு

    கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர்.

    இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்க உள்ளனர். மேலும், இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×